Saturday, July 31, 2021

எடுத்த காரியம் ஜெயிக்கணுமா? ‘#அபிஜித்’ நேரத்தை பயன்படுத்துங்க!

 தாரபலம் என்றால் என்ன என்பதை அறிந்திருப்பீர்கள்.

இந்த தாரபலத்தைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளி என அமைத்துக்கொள்ள எல்லாம் நன்மையாகும். எல்லாம் நன்மைக்கே!
நான் 28 வதாக ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா! அதன் பெயர் என்ன? அது எந்த ராசியில் இருக்கிறது? என பார்ப்போம்.
அந்த நட்சத்திரத்தின் பெயர் “அபிஜித்” நட்சத்திரம்.இது மகர ராசியில் அமைந்திருக்கிறது.
இல்லையே ... மகரத்தில் உத்திராடம் 2,3,4, பாதங்கள்,திருவோணம் 1,2,3,4 ஆகிய பாதங்கள், அவிட்டம் 1,2 பாதங்கள் மட்டுமே இருக்கிறது என்கிறீர்கள்தானே...
இந்த அபிஜித் நட்சத்திரம் சூட்சும நட்சத்திரம் ஆகும்.
இது மகர ராசியில் உத்திராடம் 4 ஆம் பாதம், திருவோணம் 1 ம் பாதத்தில் உள்ளது,
எனவே உங்களில் யார் உத்திராடம் 4, திருவோணம் 1 என்ற நட்சத்திரப் பாதங்களில் பிறந்திருக்கிறீர்களோ அவர்கள் அபிஜித் நட்சத்திரகாரர்கள் ஆவார்கள்.
சரி என்ன செய்யும் இந்த அபிஜித்?
வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை சந்திக்காதவர்கள் என எவருமே இல்லை. இதில் துயரங்களைக் கண்டு துவண்டு விடுபவர்கள் பலர் உள்ளனர்.
துன்பமோ , துயரமோ எது வந்தாலும் அதன் பாதிப்பை சிறிதும் உணராதவர்கள், இந்த அபிஜித் நட்சத்திரக்காரர்கள்.
ஆக, துன்பத்தை மனம் உணராவிட்டாலே நோய் முதற்கொண்டு எந்த பாதிப்பும் நம்மை அணுகாது.
இந்த உத்திராடம், திருவோணத்தில் பிறந்த தெய்வங்களைப் பாருங்களேன். உத்திராடத்தில் கணபதி.இவரை மஞ்சளிலும் பிடித்து வணங்கலாம், மண்ணிலும் பிடித்து வணங்கலாம், எதைப்பற்றியும் கவலைப்படாதவர்.
திருவோணத்தில் பிறந்தவர் மகாவிஷ்ணு. இவரையும் நீங்கள் அறிவீர்கள்.சதா சயனத்தில் இருப்பவர், எதைப்பற்றியும் கவலைப்படாத தோற்றம்,ஆனால் உள்ளுக்குள் அனைத்தையும் அசைபோட்டுக் கொண்டிருப்பவர்.
ஆக... இந்த அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதைபற்றியும் கவலைப்படத் தேவையில்லை,இவர்களுக்கு அனைத்தும் தேடாமலே கிடைக்கும்.
எனவே எல்லாம் இறைவன் செயல் என்று இருந்தாலே சகல காரியங்களும் நன்மையாகவே நடந்தேறும்.
இந்த அபிஜித்தை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.
ஏதோ ஒரு சூழ்நிலை, திடீர்த் திருமணம், வீடு குடிபோகுதல், பதவி ஏற்பு போன்ற சுப காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.அந்த நாள், தோஷமுள்ள நாளாக இருந்தாலும் இந்த அபிஜித் நட்சத்திரநாள் அந்த தோஷங்களைக் களைந்துவிடும்.ஆனால் இது மாதத்திற்கு ஒருமுறைதானே வரும். அதுவரை காத்திருக்க வேண்டுமா?
இல்லை... ஒவ்வொரு நாளும் அபிஜித் நேரம் என்ற ஒரு சுப நேரம் உண்டு.
அது எந்த நேரம் என்றால் மதியம் 12 மணி முதல்12-30 மணிவரை உள்ள நேரமே அபிஜித் நேரம் ஆகும்.இந்த அபிஜித் நேரத்திற்கு எந்த தோஷமும் இல்லை. எந்த தோசமும் இந்த நேரத்தை கட்டுப்படுத்தாது,
ராகுகாலம், எமகண்டம்,கரிநாள், பிரதமை, அஷ்டமி, நவமி, செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை என எதுவும் இந்த அபிஜித்தை கட்டுப்படுத்தாது.
எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த அபிஜித் நேரத்தையும், அபிஜித் நட்சத்திர நாளையும் பயன்படுத்தி வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள். எடுத்த செயல்கள் யாவும் வெற்றிபெறும் என்பது உறுதி!

ஏரிவந்தஏனியை எட்டி உதைக்கும்.....

 அன்புடையீர் வணக்கம்

கீழே வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பவர் பெயர் ரவீந்திரன் துரைசாமி நாடார்
மருத்துவர் அய்யா அவர்களால் அறிமுக படுத்த பட்ட. ஓர் நபர்
தற்பொழுது துரோகம் செய்யும் பட்டியலில் உள்ளவர்
அதாவது அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் வலம் வரும் ஜாதிய வெறியுடன் அலைந்து திரியும் ஒரு நபர் இவர் தற்போது ஒரு சில தொலைக்காட்சியில்
விவாத நிகழ்வில் பங்கேற்று வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 10.5 இட ஒதுக்கீடு சரியானது அல்ல என்றும்
மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களை பற்றியும் வன்னியர்களை பற்றியும் ஒருமையில் பேசுவதோடு மட்டுமல்லாமல்
வன்னியர்களை உதாசீனப்படுத்தும் வகையில் இவரது நடவடிக்கை அமைந்த வண்ணம் இருக்கிறது
ஊடகங்களில் உட்கார்ந்துகொண்டு ஒன்றுக்கும் உதவாத விவாதத்தை அரங்கேற்றம் அற்ப மானுடனே
மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்கள் சாதாரணமானவரா?
கலைஞர் அவர்கள் பார்த்து பயந்த தலைவர்!
எம்ஜிஆர் அவர்கள் பார்த்து பயந்த தலைவர்!!
அம்மையார் ஜெ அவர்கள் பார்த்து பயந்த தலைவர்!!!
வன்னிய இனத்தின் மூலவரும் உற்சவரும் எங்கள் மருத்துவர் ஐயா அவர்கள் என்பதை தெரிந்து கொள்
மூணாம் தெருவுக்கு கூட தெரியாத மூதேவியே புரிந்துகொள்
வன்னிய இனமே மேற்படி நபர் பேசுதற்கு காரணம்
வன்னியர்களையும் புகழ் மிக்க தலைவர் மருத்துவர் அய்யா அவர்களையும் பற்றியும் பேசினால்
நாம் வெகுண்டு எழுவோம்
அதன் மூலம் விளம்பரமும் பிழைப்புக்கு வருமானமும் கிடைக்கும் என்ற கோணத்தில்
பேசி பிழைப்பு தேட அலையும் அற்ப மானுடன் இந்த ஈனப்பிறவி எனவே
இதனை வன்னியர்கள் ஒரு பொருட்டாக கருத வேண்டிய அவசியம் ஏதுமில்லை மேற்கண்ட நபர் வன்னியர்களை தவறாக பேசிவிட்டார்
என்ற வகையில் அவரை விமர்சனம் செய்வது அல்லது கோபத்தின் உச்சிக்குச் சென்று அவரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் இதற்காக நேரத்தினை வீன் செய்ய வேண்டாம்
ஏனென்றால் எங்கேனும் தெருவோரம் அனாதையாக திரிந்தும் அலைந்தும் கொண்டு இருப்பவர்கள் பட்டியலில் உள்ள நபர் ஆவார் இவர்
அல்லது நேற்றைய தினம் நான் வெளியிட்ட காமெடியன்கள் பட்டியலில்
மேலும் ஓர் நபராக இடம் பெற்றிருக்கலாம் எனவே வன்னியர்கள் இதனை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
என் போன்றவர்களிடத்தில் சிக்கியிருந்தாள் இவர் விவாதா புலியா வெறும் புளியா (சுவைதனில் ஒன்று)என்பதை ஒரு மணி துளிகளில் கூறியிருப்பேன்
மேலும் பெரும்பான்மையான ஊடகம் வன்னியர்களை ஒழிப்பதற்காகவே துவங்க பட்டவையாகும் என்பதை நான் பலமுறை கூறி வருகிறேன் அதனையும் தாங்கள் பொருட் படுத்த வேண்டாம்.
May be an image of 1 person and text

அஷ்டமி, நவமியில் செய்ய வேண்டிய அற்புத பரிகாரம்.

 அஷ்டமி மற்றும் நவமி அன்று செய்யும் புதிய விஷயங்கள் எந்த தடங்களும் இல்லாமல் நடக்க செய்ய வேண்டிய அற்புத பரிகாரம், செய்யக்கூடாதவை என்னவென்று பார்க்கலாம்.

அஷ்டமி, நவமியில் செய்ய வேண்டிய அற்புத பரிகாரம்
அஷ்டமி, நவமியில் செய்ய வேண்டிய அற்புத பரிகாரம்


















அஷ்டமி அன்று....

அன்றைய தினம் மருத்துவம் தொடர்பான எந்த செயலிலும் ஈடுபடாமல் இருப்பது மிகவும் நன்று. ஏனெனில் இந்த நாளில் மருத்துவம் சார்ந்த விஷயங்களை மேற்கொண்டால் தொடர்ந்து மருத்துவனை செல்ல வேண்டிய நிலை ஏற்படும். முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாள். மேலும் பிரத்தியங்கரா தேவி, துர்கை அல்லது வாராஹி வழிபாடு மற்றும் துர்கா சப்தசதி பாராயணம், சண்டி பாராயணம் செய்ய மிகவும் உகந்த தினம்.

நவமி அன்று ....

இந்த நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க, நமக்கு வெற்றி நிச்சயம். மேலும் இந்த திதி நாளில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கி வேலையில் ஈடுபட்டால், அனைத்தும் சுபமாக முடியும். நாள் இனிமை சேர்க்கும்.

ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”.

 ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”.

திரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்).
“அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”.
கண்டிப்பாக..... சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம். முதல் நன்மை.
சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ... சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும். ( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய விளம்பரம்). இது இரண்டாவது நன்மை.
மூன்றாவது நன்மை என்ன என்று அறிய ஆவலுடன் அவரைப் பார்த்தேன். சார் சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் கேட்கும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டும். எங்களிடம் நீங்கள் விலை பேசி வாங்கலாம். நூறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் தருவோம். ஏனென்றால் எங்கள் வயிற்றுப்பிழைப்பு இது. எங்களுக்கு வேறு வருமானம் ஒன்றும் இல்லை. 20 ரூபாய் லாபம் இது மூன்றாவது நன்மை.
சரிதான் என்று தலையாட்டிவிட்டு அவரையே பார்த்தேன். “சார் நான்காவது இந்த காய்கறிகள் பக்கத்து கிராமங்களில் நாங்களே இயற்கையாக பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒன்றும் தெளிக்காமல் விவசாயம் செய்தது. இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும் வராது சார்...
அவர் சொல்வது அனைத்தும் சரியாகவே எனக்கு பட்டது. மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து, விஷம் சேர்த்த காய்கறிகளை கியூவில் நின்று வாங்குவதற்கு தயாராகும் நாம் இதையெல்லாம் சிந்திக்கிறோமா?.....
சிந்தனையில் நிற்கும்போதே நான் கொடுத்த லிஸ்டில் உள்ள காய்கறிகளை பேக் செய்து கொடுத்தார். அவர் கேட்ட தொகையை கொடுத்தேன். பிறகு நான் அவரிடம், “எல்லாம் சரி ஐந்தாவது நன்மை என்னவென்று சொல்லவே இல்லையே” என்றேன் ஆவலுடன்.
“இது என்னுடைய மனைவி இவளுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. இவளுடைய மருத்துவத்திற்காக நான் யாரிடமும் கையேந்தியதில்லை. நீங்கள் விலை பேசாமல் கொடுத்த இந்த பணத்தின் ஒரு பகுதி இவளுடைய மருத்துவ செலவிற்கு உபயோகப்படும். இதுவும் நீங்கள் செய்யும் ஒரு சாரிட்டிதான் இதற்குரிய நன்மை இறைவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும். இதுதான் நான் சொன்ன ஐந்தாவது நன்மை.
புன்னகையோடு அவர் சொல்லி நிறுத்தினாலும் அவருடைய கண்கள் நிறைந்திருந்தது....
நானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்.
இது போன்ற துக்கங்களும், துயரங்களும் வழியோரங்களில் வியாபாரம் செய்யும் பலருக்கும் இருக்கலாம். நம்மால் இவர்களுக்கெல்லாம் உதவ முடியுமா???.
கோடிக்கணக்கில் மூலதனமுள்ள சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் பாக்கெட் நிறைக்க நாம் கொடுப்பதில் ஒரு பங்கை இதைப்போன்ற வழியோர வியாபாரிகளுக்கும் கொடுத்து உதவுவது அல்லவா உண்மையில் தொண்டு.
May be an image of 2 people, fruit and outdoors

#இசை இவரின் உயிரில் கலந்தது.... இவருக்கு இசையே உயிர்.... உலகமே போற்றும் #இசை_மேதை...!

 இயக்குனர் ஆர்.வி.#உதயகுமார்..!

ஒருமுறை #இளையராஜா சார் ட்யூன் போட்டு பிற இயக்குனர்களுக்குப் பிடிக்காமல் போன பாடல்கள் நிறைய இருந்தன. அவர் கொஞ்சம் மூட் சரியில்லாமல் இருந்தார். நான் அவரிடம் கம்போஸிங்கிற்காகச் சென்றபோது, ‘இன்னிக்கி வேண்டாம்யா.. அப்பறம் பார்த்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டார்.
அவருடைய அஸிஸ்டெண்ட் #சுந்தரராஜனைப் பிடித்து, ‘அவர்கள் என்னென்ன ட்யூன்கள் வேண்டாம் என்று சொன்னார்களோ, அதைக் கொஞ்சம் காண்பியுங்கள்’ என்றேன்.
அதில் பொறுமையாக பார்த்துப் பார்த்து நான் இரண்டு பாடல்களை #தேர்ந்தெடுத்தேன்...
ராஜா சார் ரெக்கார்டிங் எல்லாம் முடித்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தார்.
‘நீ இன்னும் #போகலியா?’
‘இல்ல சார்..! நாளைக்கு #ரெக்கார்டிங்...’
‘இல்லய்யா.. நாளைக்கு #முடியாது..’
‘இல்ல சார்..! ட்யூன் நல்லா இருக்குது சார்’
‘எந்த
#அவங்கவேண்டாம்’னு சொல்லிட்டு போனாங்களே.. அதிலிருந்துதான் ரெண்டு ட்யூன் எடுத்து வச்சிருக்கேன் சார்.’
‘ஆமா சார்!’
#எந்த இரண்டு ட்யூன்யா என்றார்..
#எஜமான் படத்திற்க்காக வரும் நிலவே #முகம்காட்டு’. ஓரு பாடல் ..இன்னொரு பாடல், ‘ஒரு #நாளும்உனை மறவாத’.
அப்படிக் #கிடைத்ததுதான் அந்த இரண்டு பாடல்களும்.
அந்தப் பாடலில் வரும் வரிகள்போலவே “ஒரு நாளும் உனைமறவாத இனிதான வரம் வேண்டும். உணர்வாலும் உடல் உயிராலும், மொழியாலும், பிரியாத வரம் வேண்டும்’ என்று இசைஞானியை #கேட்டுக்கொள்ளுகிறேன்”,....ஆர் வி உதயகுமார்...
May be an image of 1 person and text that says 'MAESTRO DHANUSH என்ன? அது இசை என்றால் நமக்கும் பிறருக்கும் ஓசை..... ஒலி..... சத்தம்..... அதிர்வு..... இவருக்கு= தவம்'

*மறைந்த கவியரசர் திரு,கண்ணதாசன் அவர்கள் சொன்னது சரியான உண்மை*!!!

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*"💮அர்த்தமுள்ள இந்து மதம்"💮*
*நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :?* ?👇👍
*1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.💪*
*2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.💪*
*3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.💪*
*4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி*
*வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.*.💪
*5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.💪*
*6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை*
*கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை*.💪*
*7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.💪*
*8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.*
*👉மரமும் கடவுள்,🌼*
*👉கல்லும் கடவுள்*,
*👉நீரும் கடவுள்(கங்கை),*
*👉காற்றும் கடவுள் (வாயு),🌼*
*👉குரங்கும் கடவுள் அனுமன்,🌼*
*👉நாயும் கடவுள் (பைரவர்),🌼*
*👉பன்றியும் கடவுள் (வராகம்).🌼*
*9. நீயும் கடவுள்,*
*நானும் கடவுள்...*
*பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா*.👍
*10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள்*👍,
*பெண் ஆசையை ஒழிக்க*
*👉இராமாயணம்,👍*
*மண் ஆசையை ஒழிக்க*
*👉மகாபாரதம்,👍*
*கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த*
*👉பாகவதம்,👍*
*அரசியலுக்கு*
👉 *அர்த்தசாஸ்த்திரம்,* 👍
*தாம்பத்தியத்திற்கு*
*👉காம சாஸ்திரம்,💪*
*மருத்துவத்திற்கு*
*👉சித்தா, ஆயுர்வேதம்*,👍
*கல்விக்கு*
*👉வேதக் கணிதம்,👍*
*உடல் நன்மைக்கு*
*👉யோகா சாஸ்த்திரம்*,👍
*கட்டுமானத்திற்கு*
*👉வாஸ்து சாஸ்திரம்,*👍-
*விண்ணியலுக்கு*
*👉கோள்கணிதம்.👍*
*11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.🌸*
*12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து*
*"கொல்லாமை " "புலால் மறுத்தல்",*
*ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.🌸*
*13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம்.*
*🌼 ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.🌸*
*13. முக்தி எனப்படும் மரணமில்லா பெரு வாழ்விற்கு வழிகாட்டும் மதம்.🌺*
*14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.*
*15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.*
*இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......*
*இந்துவாக (இயற்கையாளனாக)* *வாழ்வதில் பெருமை*
*கொள்வோம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...