Monday, July 19, 2021

பாரதமும்... பக்கத்து நாடுகளும்....

 இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை இந்தியா மதிப்பதில்லை என்று நேபாள், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு ஒரு எண்ணம் எப்போதும் உண்டு. இந்தியா பிக் பிரதர் போல செயல்படுவதாக எண்ணி, இந்தியாவை சரிகட்ட நினைத்து அதன் எதிரியான பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுக்கும். உடனே இந்தியா, சமாதானம் செய்துகொள்ள வந்தால் கடன் மற்றும் பல உதவிகளை வாங்கிக்கொண்டு கொஞ்ச நாள் அமைதியாக இருக்கும், அப்புறம் மீண்டும் அதே பூச்சாண்டியை காட்டும். இப்படியே தொடர்ந்து பூச்சாண்டி காட்டி காரியம் சாதித்து காலம் கடத்திக்கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தன் மிகவும் வலுவிழக்க இவர்களுக்கு எந்த லாபமும் இல்லாமல் போகவே இவர்கள் ஆட்டம் கொஞ்சம் குறைந்தது.

இதுதான் இந்தியாவிற்கும் இந்த நாடுகளுக்கு இருந்த உறவின் ஆழம்.
இதில் புது பணக்காரன் சீனா புதிதாக உள்ளே வந்தபோது அந்த சமன்பாடுகள் மீண்டும் மாறியது. சீனா நிறைய கடன் கொடுக்க, நாங்கள் சீனாவின் பக்கம் என்று அணி மாறினார்கள். அதில் சீனாவோடு போகாமல் இருக்க அதை கொடுங்கள், இதை கொடுங்கள், இல்லாவிட்டால் அங்கு போய்விடுவோம் என்று பெரிய ஆட்டமும் போட்டார்கள். அதற்கு தகுந்து இந்தியாவும் அள்ளி கொடுத்தது, போட்டிக்கு சீனாவும் கொடுத்தது.
அப்போது இந்தியாவில் ஆட்சி மாறியது. மோடி பதவி ஏற்கும்போதே, அண்டை நாடுகளை சகோதரனாக அழைத்து மரியாதை தந்தது. ஆனால் அந்த மரியாதையை எல்லாம் பொருட்படுத்தாமல் சீனாவுடன் கை கோர்த்தார்கள். இந்தியாவின் எச்சரிக்கையை மீறி இலங்கை அம்பந்தோட்டாவில் ஒரு பெரிய துறைமுகம் கட்ட சீனா கடன் கொடுத்தது. அதோடு நிற்காமல் அதை நாங்கள் தான் கட்டிக்கொடுப்போம் என்று சொல்லி கொடுத்த காசை மீண்டும் எடுத்துக் கொண்டார்கள்.
ஆனால் கடன் மட்டும் வட்டி குட்டி போட்டு வளர்ந்து கொண்டே இருந்தது. துறைமுகம் கட்டி முடித்ததும் கடனை திருப்பி செலுத்த கேட்டது. ஸ்ரீலங்காவோ ஒன்றுமில்லாத பாக்கட்டை காட்டியது. விளைவு கடனை திருப்ப செலுத்தாவிட்டால் 99 வருஷத்திற்கு அந்த துறைமுகத்தை லீசுக்கு கொடு என்று சீனா மிரட்டியது.
வழக்கம்போல இந்தியா, சீனாவிடம் இருந்து ஸ்ரீலங்காவினை காப்பாற்ற கடனை கட்டும், இல்லாவிடில் அந்த துறைமுகம் சீனாவோடு போய்விடும் என்று ஸ்ரீலங்கா மிரட்டியது. இந்த துறைமுகம் சீனாவின் கைக்கு போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து வந்துவிடும் என்பதால் இந்தியாவிற்கு வேறு வழி இல்லை என்று கணக்கு போட்டு காத்திருந்தது இலங்கை.
ஆனால் இந்தியாவோ, எப்படி நமக்கு ஸ்ரீலங்காவோ அது போல சீனாவிற்கு வியட்னாம், அதனுடம் உறவை புதுப்பித்து தென் சீனக்கடலில் எண்ணெய் எடுக்கிறோம் என்று தனது போர்க்கப்பல்களை சீனாவின் மூக்கிற்கு கீழே நிறுத்திவிட்டு, ஸ்ரீலங்காவின் விளையாட்டை கண்டுகொள்ளாமல் விட்டுவிட, அடடா, இது பழைய இந்தியா அல்ல என்று புரிந்து கொள்ளும்போது துறைமுகம் சீனாவின் கைக்கு போய்விட்டது.
சீனாவோ அது தன்னுடைய நாடுபோல தன் ராணுவத்தை அங்கு கொண்டுவர, ஸ்ரீலங்கா மக்கள் கொதித்துபோய் நமக்கு தேவையே இல்லாத இந்த துறைமுகம் நமக்கு எதற்கு என்று அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா வெச்ச ஆப்பால் ஆடமுடியாத அரசாங்கம் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.
ஆனால் இந்தியாவோ சீனாவின் மூக்குக்கு கீழே தன் போர்க்கப்பல்களை நிறுத்தி விட்டது மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாட்டுடன் சேர்ந்து போர் ஒத்திகயை சீனாவுக்கு எதிரிலேயே செய்தது. டென்ஷனாகிப்போன சீனா அரபிக்கடலில் பாகிஸ்தானோடு சேர்ந்து போர் ஒத்திகையை செய்ய, இந்தியா இப்போது 11 நாடுகளுடன் கூடிய போர் ஒத்திகையை தென் சீனக்கடலில் மீண்டும் செய்ய திட்டமிட்டு அதற்கான தேதியும் அறிவித்து விட்டார்கள். சீனாவிற்கு பாகிஸ்தானை தவிர ஏதும் நட்பான நாடுகள் இல்லாததால், அடடா, சும்மா இருந்த சங்கை ஊதிக்கொடுத்துவிட்டோமே என்று சமாதானத்துக்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று காத்திருக்கிறது. கெடுவான் கேடு நினைப்பான்!
இது காலாவதியான காங்கிரஸ் காலம் இல்லை...!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...