Tuesday, July 27, 2021

ஈரோடு அ.தி.மு.க.,வில் 'ஈகோ' : தி.மு.க.,வுக்கு தாவும் நிர்வாகிகள்.

 மாநில, மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பு இல்லாததால், ஈரோடு அ.தி.மு.க.,வினர், தி.மு.க.,வுக்கு தாவி வருகின்றனர்.


கொங்கு மண்டலமும், அதில் உள்ள ஈரோடு மாவட்டமும் எப்போதும் அ.தி.மு.க.,வின் கோட்டை. 1991ல் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் இருந்ததால், காங்கேயத்தில் ஜெயலலிதா போட்டியிட்டார். அப்போது அவர் பர்கூரிலும் வெற்றி பெற்றதால், காங்கேயம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, ஆர்.எம்.வீரப்பனை போட்டியிட வைத்தார்.

ஈரோடு அ.தி.மு.க.,,ஈகோதி.மு.க., தாவும் நிர்வாகிகள்


இம்மாவட்டத்துக்கு உட்பட்ட ஈரோடு - முத்துசாமி, கோபி - செங்கோட்டையன், தாராபுரம் - ஈஸ்வரமூர்த்தி, வெள்ளக்கோவில் - துரை ராமசாமி, காங்கேயம் - வீரப்பன் என ஐந்து அமைச்சர்கள் உலா வந்தனர்.ஜெயலலிதா இருந்தபோது, ஒன்றிய அளவில் பிரச்னை என்றால் கூட, உடன் அழைத்து பேசுவார். அ.தி.மு.க.,வில் இருந்து முத்துசாமி, தி.மு.க.,வுக்கு செல்கிறார் என அறிந்ததும், ஜெயலலிதா நேரடியாக 'முத்துசாமி தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படும்' என, அழைப்பு விடுத்தார்.

கடந்த 2011ல் பவானிசாகர், இந்திய கம்யூ., வசமும், ஈரோடு கிழக்கு தொகுதி, அ.தி.மு.க., ஆதரவுடன் தே.மு.தி.க., வசமும், மற்ற ஆறு தொகுதிகள் அ.தி.மு.க., வசமும் இருந்தன. 2016ல், எட்டு தொகுதியும், அ.தி.மு.க., வசமானது.ஜெயலலிதா மறைவுக்குப் பின் மாநில தலைமைக்கும், ஈரோடு மாநகர மாவட்ட செயலர் ராமலிங்கம், புறநகர் மாவட்ட செயலர் கருப்பணன் ஆகியோரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், அ.தி.மு.க.,வினர் சோர்வடைந்தனர்.

இதனால் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, அந்தியூர் என மூன்று தொகுதிகளை அ.தி.மு.க., இழந்தது.இம்மாவட்ட அமைச்சர்களாக இருந்த செங்கோட்டையன், கருப்பணன், மாநகர மாவட்ட செயலராக ராமலிங்கம் ஆகியோர் இருந்தாலும், அவர்களை சுற்றி தலா 10 பேர் மட்டுமே பதவி சுகத்தையும், பலனையும் அனுபவித்தனர்.
தலைமைக்கு புகார்கள் சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கட்சியில் பலர் ஓரங்கட்டப்பட்டனர்.


latest tamil news


இதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் பல நகர, ஒன்றிய செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க.,வில் இணைந்தனர்.ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட, மாநில தலைமை ஒருங்கிணைப்பில்லாததால் பலரும், தி.மு.க.,வுக்கு சென்றனர். தி.மு.க., நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தயாராக இல்லை.

அ.தி.மு.க.,வினர் எதிர்க்கட்சியாக செயல்படாததால், பா.ஜ.,வினர் அந்த பணியை எடுத்து முக்கிய பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். அத்துடன் மொடக்குறிச்சி, பா.ஜ.,- எம்.எல்.ஏ.,வை முன்னிலைப்படுத்தி மனுக்களை வழங்கியும், பரிந்துரைகளை பெற்றும் வருகின்றனர். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின், '2026ல் பா.ஜ., ஆட்சி' என்ற முழக்கத்தை கவனிக்கும், அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சியினர், பா.ஜ.,வில் தற்போது இணைந்தால் கூட ஐந்தாண்டுக்குள் முக்கியத்துவம் பெற முடியும் என நினைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.,வில் தற்போது செங்கோட்டையன், கருப்பணன், ராமலிங்கம் என விரல் விட்டு எண்ணும் முக்கியஸ்தர்களே உள்ளனர். வரும் தேர்தல்களில், தி.மு.க.,வுக்கு போட்டியாக, அ.தி.மு.க., களம் காணுவதில் பல சிக்கல்கள் உள்ளதால், பா.ஜ.,வே முன்னிலைப்படுத்தப்படும் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வரும் தேர்தல்களில், பா.ஜ., இம்மாவட்டத்தில் வலுப்பெறும் என்ற நம்பிக்கையில் அரசியல் கட்சியினர் உள்ளனர். இதனால், தி.மு.க.,வுடன் போட்டி போடும் தகுதியை அ.தி.மு.க., இழப்பதுடன், பா.ஜ.,வுக்கு அந்த வாய்ப்பு போய்விடும் என்பதே நிதர்சனம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...