Saturday, July 31, 2021

#இசை இவரின் உயிரில் கலந்தது.... இவருக்கு இசையே உயிர்.... உலகமே போற்றும் #இசை_மேதை...!

 இயக்குனர் ஆர்.வி.#உதயகுமார்..!

ஒருமுறை #இளையராஜா சார் ட்யூன் போட்டு பிற இயக்குனர்களுக்குப் பிடிக்காமல் போன பாடல்கள் நிறைய இருந்தன. அவர் கொஞ்சம் மூட் சரியில்லாமல் இருந்தார். நான் அவரிடம் கம்போஸிங்கிற்காகச் சென்றபோது, ‘இன்னிக்கி வேண்டாம்யா.. அப்பறம் பார்த்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டார்.
அவருடைய அஸிஸ்டெண்ட் #சுந்தரராஜனைப் பிடித்து, ‘அவர்கள் என்னென்ன ட்யூன்கள் வேண்டாம் என்று சொன்னார்களோ, அதைக் கொஞ்சம் காண்பியுங்கள்’ என்றேன்.
அதில் பொறுமையாக பார்த்துப் பார்த்து நான் இரண்டு பாடல்களை #தேர்ந்தெடுத்தேன்...
ராஜா சார் ரெக்கார்டிங் எல்லாம் முடித்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தார்.
‘நீ இன்னும் #போகலியா?’
‘இல்ல சார்..! நாளைக்கு #ரெக்கார்டிங்...’
‘இல்லய்யா.. நாளைக்கு #முடியாது..’
‘இல்ல சார்..! ட்யூன் நல்லா இருக்குது சார்’
‘எந்த
#அவங்கவேண்டாம்’னு சொல்லிட்டு போனாங்களே.. அதிலிருந்துதான் ரெண்டு ட்யூன் எடுத்து வச்சிருக்கேன் சார்.’
‘ஆமா சார்!’
#எந்த இரண்டு ட்யூன்யா என்றார்..
#எஜமான் படத்திற்க்காக வரும் நிலவே #முகம்காட்டு’. ஓரு பாடல் ..இன்னொரு பாடல், ‘ஒரு #நாளும்உனை மறவாத’.
அப்படிக் #கிடைத்ததுதான் அந்த இரண்டு பாடல்களும்.
அந்தப் பாடலில் வரும் வரிகள்போலவே “ஒரு நாளும் உனைமறவாத இனிதான வரம் வேண்டும். உணர்வாலும் உடல் உயிராலும், மொழியாலும், பிரியாத வரம் வேண்டும்’ என்று இசைஞானியை #கேட்டுக்கொள்ளுகிறேன்”,....ஆர் வி உதயகுமார்...
May be an image of 1 person and text that says 'MAESTRO DHANUSH என்ன? அது இசை என்றால் நமக்கும் பிறருக்கும் ஓசை..... ஒலி..... சத்தம்..... அதிர்வு..... இவருக்கு= தவம்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...