Friday, July 23, 2021

நேர்மையானதாகவும், யதார்த்தமாகவும் இருக்க வேண்டும்.

 1975 ஜூன் 25 நள்ளிரவில் தான் தமிழகத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. 1976 ஜனவரி 31 இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதாவது, கருணாநிதியின் ஐந்து ஆண்டு கால ஆட்சி முடிய ஒரு மாத காலம் மட்டும் பாக்கி இருந்த நிலையில் கலைக்கப்பட்டது. ஆட்சிக் கலைப்பிற்கு பின் கைது நடவடிக்கைகள் தொடர்கிறது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 23.1.1977 அன்று விடுதலை செய்யப்பட்டனர். 29.1.1977 அன்றும் பல நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆட்சிக் கலைப்பிற்கு பின் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சியை பிடித்தது 1977 ஆம் ஆண்டு ஜூன் 30. அதாவது 17- மாதங்களுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கிறது அதிமுக. எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாகவே மிசா கைதிகள் விடுதலையாகின்றனர். ஆட்சியை பிடித்த எம்.ஜி.ஆர் மதுக்கடையை திறந்தது நாள் 1.5.1981. அதாவது கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து வருடங்கள் கழித்து தான் திறக்கப்படுகிறது.
பா.ரஞ்சித்தின் " சார்பட்டா பரம்பரை " திரைக்கதையில், ஆட்சி கலைப்பிற்கு பின் மிசா சட்டத்தில் சிறை செல்லும் ரங்கன் வாத்தியார் சிறையிலிருந்து வெளிவரும் போது, இடைப்பட்ட காலத்தில், அவருடன் இருந்தவர்கள் எல்லாரும் அதிமுக விற்கு மாறியது போலவும், அதன் பிறகே சாராயத்திற்கு அடிமையானது போல குறியீடுகள் இருக்கிறது. அபத்தமான குறியீடுகள் .
இத்தனை நாட்கள் உ.பி.களுக்கு சங்கியாக தெரிந்த பா. ரஞ்சித், இந்த படத்தில் சில குறியீடுகளை காட்டியவுடன் திராவிட போராளியாக தெரிகிறார். இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், ரஞ்சித்தின் திரைக்கதையிலும் மாற்றம் வந்திருக்கலாம்.. திமுக கரை வேட்டி, ரங்கன் வாத்தியாரின் மேடை பேச்சு போன்ற சில காட்சிகள் திரைக்கதையில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டவை.
மலையாள திரைப்படங்கள் போன்று தமிழிலும் துணிச்சலாக அரசியல் குறியீடுகள் திரைக்கதையில் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது தான். அது நேர்மையானதாகவும், யதார்த்தமாகவும் இருக்க வேண்டும்.
"சார்பட்டா பரம்பரை " ஒரு அற்புதமான படைப்பு தான் .. மாற்றுக் கருத்தில்லை. அதன் கதை, களம், கதாபாத்திங்கள் என ஒவ்வொன்றையும் சிலாகித்து தனித்தனியே எழுத ேவண்டிய விசயங்கள் அவை.. அப்படிப்பட்ட அற்புதமான படைப்பில் .. திணிக்கப்பட்ட நேர்மையற்ற / ஒரு தலைபட்சமான சில அரசியல் குறியீடுகள் தான் பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது..
May be an image of 3 people, beard and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...