Wednesday, July 28, 2021

அதிமுக என்ற மாபெரும் இயக்கம் பிஜேபிக்கு அடிமையா?

 அஇஅதிமுக என்ற இயக்கம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி. மோடி பிரதமரானபின் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததிலிருந்தே (செல்வி ஜெயலலிதா மறைவுக்குப்பின்) அதிமுக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் ஒருபுறம். கட்சிக்குள்ளிருந்தும் (அதிமுக) எதிர்ப்புக்குரல் அவ்வப்போது எழுகிறது.

மத்திய பாஜக தலைமையின் சில நடவடிக்கைகளும் நமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜகவின் தமிழக தலைவர் திரு. அண்ணாமலை, `திமுகவுக்கும், பாஜகாவுக்கும் தான் மோதல்’ என்பது போல் பேசி வருகிறார். கூட்டணியில் அதிமுக இருப்பதை அவர் குறிப்பிடாவிட்டாலும், அஇஅதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். போலீஸ் அதிகாரியாக இருந்தவருக்கு தெரியாத அரசியலா?
சசிகலா முதலில் ஒதுங்கியிருந்தார். திடீரென `அஇஅதிமுகவை கைப்பற்றுவேன்’ என்று கூறுகிறார். அப்படி சொல்வதற்கு தைரியம் எங்கிருந்து வந்தது? சுப்பிரமணிய சாமியுடன் இருக்கும் (முன்னாள் கலெக்டர்) சந்திரலேகா, சசிகலாவை ஆதரித்து ஜெயா டிவியில் பேட்டி அளிக்கிறார். பாஜகவின் பின்பலம் இல்லாமல் இது நடக்குமா? இது போன்ற `ஊமை குசும்பு’ வேலைகளை பாஜக நிறுத்திக் கொள்ளாவிட்டால், அது தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் வளரவே முடியாது.
மன்னர்கள் காலத்தில், நாடு பிடிக்கும் வேலை நடந்தது போல மத்திய பாஜக, காங்கிரஸை விட மோசமாக மாநிலங்களை பிடிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. இந்த `தில்லாலங்கடி’ வேலைக்கு மம்தா பானர்ஜி குட்டு வைத்தார். இதுபோன்ற உள்குத்து வேலைகளை செய்வதை நிறுத்திவிட்டு, நாட்டிற்கு நல்ல செயல் திட்டங்களை வகுத்து மக்களுக்கு நல்லது செய்தால் மட்டுமே பா.ஜ.க.வை, அரசினை மக்கள் விரும்புவார்கள். இல்லையென்றால் காங்கிரஸ் போல் தேய வேண்டியதுதான்.
From August 2021 Ithayakkani editorial

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...