கடந்த வாரம் குஜராத் மாநிலம் அகமதாபாத் துறைமுகத்தில் 21000 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்டது, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை பொருட்களை இந்தியாவில் விநியோகம் செய்ய இருந்த நிலையில் பதுங்கியிருந்து கைது செய்தது போதை பொருள் தடுப்பு பிரிவு. இந்நிலையில் அதில் சென்னையில் தங்கி இருந்த தம்பதியினர் பிடிபட்டனர். அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் மிக பிரபலமான அரசியல்வாதி சிக்கி இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, September 30, 2021
சிக்கிய தமிழகத்தை சேர்ந்த மிக பிரபல அரசியல்வாதி !!! இப்போது தெரிகிறதா காவல்துறை ஆளுநர் அதிரடி பின்னணி!!
ஆப்கானிஸ்தானிலிருந்து கப்பல் ஒன்றின் மூலமாக இரண்டு கன்டெய்னர்களில் ஹெராயின் போதைப்பொருள் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு இயக்குநரக (டி.ஆர்.ஐ) அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. அதன்பேரில் கடந்த வாரம், இரானிலிருந்து குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்த குறிப்பிட்ட கப்பலை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், சுமார் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, அதிகாரிகள் போதைப்பொருள்களைக் கைப்பற்றி, அந்தக் கப்பலில் இருந்த இரண்டு ஆப்கனியர்களைக் கைதுசெய்தனர். அப்போது அந்த ஹெராயின் பெட்டிகள் மீது 'ஆஷி டிரேடிங் கம்பெனி', சத்தியநாராயணபுரம், விஜயவாடா என்ற முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.அதைத் தொடர்ந்து, அந்த முகவரியில் ஆய்வு மேற்கொள்ள, புலனாய்வு அதிகாரிகள் விஜயவாடா விரைந்தனர். உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் அதிகாரிகள் விசாரித்ததில், அந்தப் பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்த வீடு பூட்டிக்கிடந்திருக்கிறது.
மேற்படி, அந்த வீட்டில் முகப்பவுடர் வியாபாரம் செய்துவரும் காக்கிநாடாவைச் சேர்ந்த கணவன் - மனைவி, சுதாகர் - வைஷாலி என்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. அதேபோல், ஹெராயின் கடத்தலில் தொடர்புடைய அந்தத் தம்பதி தற்போது சென்னையில் வசித்துவருவதாகவும் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சென்னை விரைந்த புலனாய்வு அதிகாரிகள் சென்னை போலீஸாரின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்தத் தம்பதி குறித்த பல தகவல்கள் வெளியாகின. வெளியுலகுக்கு முகத்தில் பூசும் பவுடர் இறக்குமதி செய்து விற்பனை செய்துவருவதைப்போல் காட்டிக்கொண்டு, சுதாகர், தன் மனைவி வைஷாலியின் பெயரில் ஏற்றுமதி, இறக்குமதி உரிமம் பெற்று ஜி.எஸ்.டி பதிவு செய்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டடுவந்தது தெரியவந்தது. காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த இந்தத் தம்பதி சென்னையில், கொளப்பாக்கம் பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக வாடகை வீட்டில் தங்கி, ஆந்திரா முகவரி கொண்டு கடத்தல் தொழில் செய்துவந்ததும் அம்பலமானது.
இதைத் தொடர்ந்து சென்னை விரைந்த டி.ஆர்.ஐ அதிகாரிகள் பதுங்கியிருந்த சுதாகர் மற்றும் அவரின் மனைவி வைஷாலி இருவரையும் அதிரடியாகக் கைதுசெய்தனர் இவர்களை குஜராத் போதை பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர், இந்நிலையில் தம்பதி கொடுத்த பதிலால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது விசாரணை தரப்பு.
நான்கு முறை இது போல் வியாபாரம் செய்துள்ளதாகவும், இந்தியாவில் முக்கிய மாநிலங்களில் சட்டமன்றம் பொது தேர்தல் வருவதற்கு ஓராண்டிற்கு முன்னர் போதை பொருள்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் என்றும் அதனை பங்கிட்டு விற்பனை செய்ய நாடு முழுவதும் பல்வேறு ரவுடிகள், அரசியல்வாதிகள், சினிமா துறையை சேர்ந்தவர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள் என பலரை பயபுப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர் எனவும்..,
இதில் தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஈடுபடுவதாகவும், ஒரு அரசியல் கட்சி தலைவர் முழு நேர வேலையாக இதற்கு என்றே ஒரு குழுவை வைத்து விநியோகம் செய்ய உதவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்து உள்ளனராம், இந்த தகவல் உடனடியாக தமிழக ஆளுநர் மற்றும் முதல்வருக்கு தெரிவிக்கப்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ரவுடிகள் கைது படலத்தை தொடங்கியுள்ளதாம் தமிழக காவல்துறை.
பிரபல ரவுடிகள் கைது என்ற போர்வையில் இந்தியாவை அதிரவைத்த போதை பொருள் கடத்தல் கும்பலை வேட்டையாடி வருகிறது தமிழக காவல்துறை, இந்த வழக்கு NIA வசம் செல்ல வாய்ப்பு இருப்பதால் முழுமையாக தகவலை சேகரித்து, இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும், ஆதாரங்களை வெளியிடவும் தயாராகி கொண்டு இருக்கிறதாம் மத்திய புலனாய்வு அமைப்புகள்.
விரைவில் மிக மிக பிரபலமான அரசியல்வாதியின் வலது கரமாக செயல்பட்டு கொண்டு இருக்கும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் அதில் இருந்தே அந்த அரசியல்வாதி யார் என்பது வெளி உலகிற்கு தெரியவரும் என கூறப்படுகிறது, இது போல் போதை பொருள்கள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு நாட்டில் கலவரங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட பல காரியங்களை செய்ய தேவையான பணம் கிடைப்பது தெரியவந்துள்ளது.
மத்தியில் மோடி அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகளை ஆய்வு செய்து கட்டுப்படுத்திய நிலையில் தங்கம், போதை பொருள்களை சட்டவிரோதமாக கடத்தி அதன் மூலம் பணத்தை சம்பாரிக்கும் செயலை கடத்தல் கும்பலுடன் அரசியல் வாதிகள் கை கோர்த்து இருப்பது பெரும் அச்சத்தை மக்களிடம் உண்டாக்கியுள்ளது.
ஆனால் என்றும் பாரதத்தை காக்கும் மத்திய அரசை குறை சொல்லியே பழக்கப்பட்ட தமிழக தற்குறிகள் தாய் நாட்டிற்கு எதிராகாவே குரைச்சலில் குதிப்பனர்....
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment