பழம் தின்னும் கிளியும், பிணம் தின்னும் கழுகும், பறவை இனம் தான்., ஆனால் தரம் வேறு, அதன் தன்மையும் வெவ்வேறு...!!
அது போல் தான் நாய்களும் நரிகளும்உருவில் ஒன்று தான்
ஆனால் குணங்கள் வேறு,
நாய் ஒரு வேளை உணவு அளித்தவரை சாகும் வரை நினைவில் வைத்து நன்றி உணர்வுடன் இருக்கும்,
ஆனால் நரியின் தந்திரம் வேறு..!!
ஒவ்வொரு மனிதருக்கும் ஆயிரம் ஆசைகள், ஆயிரம் கவலைகள்..,
தேவை இருக்கும் வரை நம்மை தேடுவார்கள் தேவை முடிந்த பிறகு முதுகில் குத்துவார்கள்...!!
நம்பிக்கை இருக்கும் வரை வாழ்க்கை சலிப்பதில்லை...!!
ஆடையின்றி அழுகையோடு பிறந்தோம்....!!
ஆசையுடன் வளர்ந்தோம் அடுத்த நொடி நமது இல்லை என்று தெரிந்தும்...!!
வாழ்க்கை என்னும் இந்த பயிற்சியை.., யாரே ஒருவர் நமக்கு (அனுபவத்தை) தந்துவிட்டு தான் செல்வார்கள் அது அவர்கள் குணம்..!!
விடாது தொடர்வோம் நாம் நாமாகவே வெற்றி பெறும் நம் முயற்சியை...!!
வாழும் நாட்களை பயனுள்ளதாக பிறருக்கு நன்மை பயக்கும் விதமாக வாழ்ந்து செல்வோம்..!!
அடிக்கும் காற்றும் பொழியும் மழையும் ஆள்பார்த்து வீசுவதும் இல்லை, விளைநிலம் பார்த்து பொழிவதும் இல்லை...!! *வாழ்வு இனிதாகட்டும்*
No comments:
Post a Comment