ஆனந்த நிலைய விமான வெங்கடேஸ்வரர்!
திருப்பதியில் நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளி யிருக்கிறார். கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார்.
வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.
பரமபதநாதர் (சிவப்பு வண்ண கட்டமிடப்பட்டிருப்பது), அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான்
விமான வெங்கடேஸ்வரா!
ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது.
இது ஒரு வெள்ளை அம்புக்குறியால் மார்க் செய்யப்பட்டிருக்கும்.
இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம்.
அதே மாதிரி, ஆனந்த நிலையம் (கருவறைக்கு மேலிருக்கும் தங்ககோபுரம்) விமானத்தில் வடக்கு முகமாக ஒரு வெள்ளி தோரணத்தில் விமான வெங்கடேஸ்வரர் சிலை இருக்கும்.
இது ஒரு சிவப்பு அம்புக்குறியால் மார்க் செய்யப்பட்டிருக்கும்.
"..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்களை சொல்ல முடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு.., இவருகிட்ட நமது வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வர ..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்.."
இனிமே, திருப்பதிக்கு போறவங்க..ஆனந்த நிலையத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர மட்டும் தரிசனம் செஞ்சிட்டு வந்துடாம,
அவருக்கு பக்கத்தலயே இருக்குற பரமபதநாதரையும் வணங்கிட்டு வாங்க..
இவரை எப்போ தரிசனம் செஞ்சாலும் வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு பெருமாள் தரிசனம் செய்த பலன் கிடைக்கும்னு ஆகமங்கள்லயே சொல்லியிருக்கு.
கோவிந்தா ஹரி கோவிந்தா !





No comments:
Post a Comment