Wednesday, September 29, 2021

தேங்காய் கணக்கு.

 பெரிய தேங்காய் ஒன்றை வாங்குவதை விட சிறிய தேங்காய்கள் இரண்டை வாங்குவது இலாபமா நட்டமா....?

சரி,
ஒரு பெரிய தேங்காய் 14cm விட்டம் உடையது 95/- இற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சிறிய தேங்காய் 10cm விட்டம் உடையது 45/- இற்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாம் அனைவரும் சிந்திப்போம் பெரிய தேங்காய் ஒன்றை 95/- இற்கு வாங்குவதை விட சிறிய தேங்காய்கள் இரண்டை 90/- இற்கு வாங்கினால் இலாபமே என்று..
ஆனால் அவ்வாறு வாங்குவது உண்மையில் இலாபமா.....?????
எடுகோள்கள்-
தேங்காய் சிறியதோ பெரியதோ எந்த தேங்காயிலும் பொதுவாக சுரட்டையின் தடிப்பும், வெள்ளை பகுதி பூவின் தடிப்பும் சமமே,
மீதி தேங்காய் நீர்
இங்கு சுரட்டையின் தடிப்பு 0.5cm என்றும் பூவின் தடிப்பு 1.5cm என்றும் எடுத்துக் கொள்கிறேன்,
எனவே முதலாவது தேங்காயின் நடு நீர் பகுதியின் விட்டம் 10cm.
இரண்டாவது தேங்காயின் நடு நீர் பகுதியின் விட்டம் 6cm.
கணக்கு ஆரம்பம்-
கோளத்தின் கனவளவு = 4/3 x (pi) x (r) x (r) x( r)
pi = 22/7
முதலாவது தேங்காயின் பூவின் கனவளவு
( சுரட்டை தவிர்த்த தேங்காயின் கனவளவு - நீரின் கனவளவு)
4/3 x 22/7 x ( 6.5x 6.5 x 6.5) -
4/3 x 22/7 x ( 5 x 5 x 5 )
= 627 Cm cube
இரண்டாவது தேங்காயின் பூவின் கனவளவு
4/3 x 22/7 x ( 4.5 x 4.5 x 4.5) -
4/3 x 22/7 x ( 3 x 3x 3 )
= 269. 238 Cm cube
எனவே இரண்டு சிறிய தேங்காய்களில் வருகின்ற பூவின் கனவளவு
2 x 269. 238 = 538.476 cm cube
முடிவு-
முதலாவது தேங்காயினை வாங்கினால் 95/- இற்கு 627 Cm cube பூ கிடைக்கும்
(1 கன Cm தேங்காய் பூ 15 சதம் முடிகிறது)
இரண்டாவது தேங்காய் இரண்டு வாங்கினால் 90/- இற்கு 538.476 Cm cube பூவே கிடைக்கும்
(1 கன Cm தேங்காய் பூ 16 சதம் முடிகிறது)
கலந்துரையாடல்-
எனவே சிறிய தேங்காய்கள் இரண்டு வாங்குவதை விட பெரிய தேங்காய் ஒன்றை 5/- மேலதிகமாக கொடுத்து வாங்குவது நட்டமில்லை இலாபமே.
என் குறிப்பு:-
இரண்டாக வாங்கினால் பயன்படுத்த புதிதாக இருக்கும்.. பெரியதாக வாங்கினால் காய்ந்து பழசாகி விடும்...
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...