Sunday, September 26, 2021

இடைவிடாத குழயடி சண்டை... செம கடுப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... அந்த அமைச்சருக்கு கூடிய விரைவில் கல்தா?

 தமிழகத்தில் இடைவிடாமல் ரிப்ளை செய்து கொண்டிருக்கும் அந்த அமைச்சரின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். அதேபோல் திமுகவிலும் அந்த அமைச்சருக்கு அப்படி ஒன்றும் ஆதரவு இல்லை என்பதால் அவருக்க்கு விரைவில் கல்தா கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றது முதல்வர் பல்வேறு சாதனைகளை செய்து வருவதாக திமுகவினர் பாராட்டுகின்றனர்.
சில அமைச்சர்கள் நிதானமாகவும் பொறுமையாகவும் கச்சிதமாகவும் காய் நகர்த்துகின்றனர்.
சில அமைச்சர்கள் சப்தமே இல்லாமல் சமூக நீதி, தமிழர் நலன் சார்ந்த செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் ஒரு அமைச்சர் மட்டும் 24 மணிநேரமும் இடைவிடாமல் பதிலடி, மல்லுக்கட்டு என பிசியாக இருக்கிறார்.
அந்த அமைச்சர் தமது துறைக்காக அதிகம் பேசுவதில்லை...
வம்பை தான் அதிகம் பேசுகிறார் என்பது ஒரு பக்கம். ஆனால் அந்த அமைச்சர் பயன்படுத்தும் வார்த்தைகள்தான் ஏகத்துக்கும் எல்லோரையும் விமர்சிக்க வைக்கிறதாம். இது தொடர்பாக அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுகவுக்கு நெருக்கமான சில அறிவுஜீவிகள் சந்தித்து பேசியிருக்கின்றனர்.
அப்போது ஒரு அமைச்சருக்குரிய கண்ணியம், பெருந்தன்மை, பொறுப்புடைமை,
சகிப்புத் தன்மை,
அரசியல் முதிர்ச்சி ஆகிய 5 குணங்களும் அந்த அமைச்சரிடம் எதுவுமே இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வருத்தப்பட்டிருக்கின்றனர். இதனால் திமுகவின் இமேஜ்தான் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகிறது என்றும் முதல்வர் ஸ்டாலினிடம் அவர்கள் எடுத்துச் சொல்லி இருக்கின்றனர். அப்போது, சிறந்த நிர்வாகியாக இருப்பார் என நினைத்துதான் அமைச்சராக்கினேன். தவறு செய்து விட்டேனோ என இப்போது தோன்றுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தபப்ட்டதாகவும் கூறப்படுகிறது
திமுகவில்
கிச்சன் கேபினட்டின் ஸ்டிராங்கான பரிந்துரையில் அவருக்கு எளிதாக அமைச்சர் பதவி கிடைத்தது. அத்துடன் அவரை அமைச்சராக்கினால் நன்றாக இருக்கும் என்கிற ஒருவித எதிர்பார்ப்பும் இருந்தது. அதனால்தான் அவருக்கு அமைச்சர் பதவி மிக எளிதாக கிடைத்தது. தற்போது திமுகவிலும் அந்த அமைச்சர் குறித்து காரசார விவாதங்கள் நடந்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மூத்த அமைச்சர்கள் சிலர், அவர் இப்படி எல்லாம் பேசுவார்னு யாருக்கு தெரியும்.. அவரை நாம கொஞ்சம் அடக்கித்தான் வைக்க வேண்டும். இல்லையெனில் அவரால்தான் ஒட்டுமொத்தமாக திமுக ஆட்சிக்கு கெட்டப்பெயர் வரப்போகிறது. மத்திய அரசும் ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகளை கவனித்து வருகிறது. இதனையும் நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டும் என்று ஓதி இருக்கிறார்கள்.
பொதுவாக, அந்த அமைச்சருக்கு திமுக கட்சியில் யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. எல்லோருமே எதிராகத்தான் இருக்கிறார்கள். இதற்கு காரணம், மேற்கண்ட 5 விசயங்களும் அவரிடம் இல்லாததுதான் என்கிற ஆதங்கமும் அறிவாலயத்தரப்பில் இருக்கிறது. இந்த நிலையில், அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் சூழலில், அமைச்சரவையிலிருந்து அவருக்கு கல்தா கொடுக்கப்படலாம் அல்லது இலாகா மாற்றப்படலாம் என்றும் திமுகவில் பேச்சு எழுகிறது..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...