Monday, September 27, 2021

மோடி என்ன செய்கின்றார் என்றால் நாட்டுபற்றும் தேசிய உணர்வும் கொண்டோரை சரியான இடத்தில் நிறுத்துகின்றார்.

 ஐ.நா பொதுகுழு கூட்டத்தில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட ஐ.நாவுக்கான இந்திய செயலாளர் சினேகா துபே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கேட்ட கேள்விகளும், தொடுத்த வினாக்களும் உலக அளவில் பாகிஸ்தானை தலைகுனிய வைத்துள்ளன‌

அந்த இளம்பெண் இந்தியாவின் 70 ஆண்டுகால குரலாக ஒலித்தார்
அந்த சினேகா எனும் சுத்தமான இந்தியபெண் கோவா பிறப்பு, 2021ல் வெளியுறவுதுறையில் தேர்ச்சி பெற்றார், அவரின் தேசாபிமான அணுகுமுறையால் மிகபெரிய பதவியினை கொடுத்தார் மோடி
அந்த இளம்பெண் சிங்கம் ஐநா அவையில் பாகிஸ்தனை புரட்டி எடுத்து கொண்டிருக்கின்றது , பாகிஸ்தானின் பொய்முகங்களை கிழித்து கொண்டிருக்கின்றது
இதுவே காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால் என்னாயிருக்கும் தெரியுமா?
அண்டை நாடுகளுடன் நல்லுறவு, மத சகிப்புதன்மை என இந்த திறமையான அதிகாரிக்கு வாய்ப்பு மறுக்கபட்டு இவரை ஆப்ரிக்காவின் கானாவுக்கான அதிகாரியாக நியமித்திருப்பார்கள், அம்மணி அந்த வனாந்திரத்தில் இருந்து சில காட்டெருமைகளை கண்டு கொண்டிருக்கும்
மோடி என்ன செய்கின்றார் என்றால் நாட்டுபற்றும் தேசிய உணர்வும் கொண்டோரை சரியான இடத்தில் நிறுத்துகின்றார்
இந்த சினேகாவும் டெல்லி நேரு பல்கலைகழகத்தில்தான் படித்திருக்கின்றார், இதோ மின்னுகின்றார்
இதே பல்கலைகழகத்தில் இட ஒதுக்கீடு, சமூக நீதி, சமூகபோர் என கண்ணையாகுமார் போல பேசிதிரிந்த கோஷ்டிகளும் படித்தன என்பதும், அந்த களைகளுக்கும் தேசம் நிதிவழங்கி படிக்க வைத்தது என்பதும் வேதனை
சினேகா போன்ற துடிப்பான இளம் அதிகாரிகளின் சேவை நாட்டுக்கு அவசியம், அவரின் துணிச்சலான பேச்சினை தேசமும் உலகமும் வரவேற்கின்றது, நல்ல அதிகாரிக்கு வாய்பளித்த மோடிக்கு
வாழ்த்துக்கள்.
May be a closeup of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...