பெருமாள் அல்லது திருமால் மூன்றடிகளில் உலகை அளந்தவர் . அதனால் அவருக்குள்ளேயே உலகம் மட்டும் அல்லாமல் அண்ட சராச்சரங்களும் அனைத்து கிரகங்களும் , உலகங்களும் அடக்கம் . பெருமாளை கும்பிட்டாலேயே நவக்கிரகங்களையும் சேர்த்துக் கும்பிட்ட பலன் கிடைக்கும் என்பது வீர வைணவர்களின் தொன்று தொட்டு வரும் நம்பிக்கை . அப்படி இருக்க தனியாக ஏன் ஒரு நவகிரக சந்நிதி வைத்து பராமரிக்க வேண்டும் . அது தேவை அற்றது அல்லவா ? அதனால் தான் திருமால் கோயிலுக்குள் நவக்கிரகங்கள் இல்லை . மேலும் , திருமால் கோயிலில் திருமால் தான் சுப்பீரியர் பவர் . வைணவர்களை பொறுத்தவரையில் அவரே எல்லாம் . தவிர , ராமாவதாரம் ( சூரியன் ) , கிருஷ்ணா வதாரம் ( சந்திரன் ) , நரசிம்மவதாரம் ( செவ்வாய் ) , கல்கியவதாரம் ( புதன் ) , வாமனவதாரம் ( குரு ) , பரசுராமாவதாரம் ( சுக்ரன் ) , கூர்மவதாரம் ( சனி ) , மச்சாவதாரம் ( கேது ) வராகவதாரம் ( ராகு ) , பலராமவதாரம் ( குளிகன் ) என்று பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது . தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன . அவை ஸ்ரீவைகுண்டம் ( சூரிய ஸ்தலம் ) , வரகுணமங்கை -நத்தம் ( சந்திரன் ஸ்தலம் ) , திருக்கோளூர் ( செவ்வாய் ஸ்தலம் ) , திருப்புளியங்குடி ( புதன் ஸ்தலம் ) , ஆழ்வார்திருநகரி ( குரு ஸ்தலம் ) , தென்திருப்பேரை ( சுக்ரன் ஸ்தலம் ) , பெருங்குளம் , ( சனி ஸ்தலம் ) , இரட்டைத் திருப்பதி- ( தேவர்பிரான் ) ( ராகு ஸ்தலம் ) இரட்டைத் திருப்பதி ( அரவிந்த லோசனர் ) - கேது ஸ்தலமாக கருதப்படுகிறது . இப்படியாக அனைத்துமாகி நிற்பவனே நாராயணன்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment