Saturday, September 25, 2021

ஆளுநர் ரவி எதற்காக தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை வரவழைத்துப் பேசினார்..?

 தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பின் குற்றச்செயல்கள் அதிக அளவில் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது உண்மையாக இருக்கலாம் என்பதுபோல கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் ஒரு பெண் உட்பட 4 பேர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற ஒரு பகீர் தகவல் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்தி வெளியாவதற்கு முதல் நாள்தான் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஸ்வேதா என்ற 19 வயது மாணவி ஒருவர், ஒருதலை காதல் விவகாரத்தால் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
கடந்த13-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் 38 வயது சங்கரசுப்ரமணியம் என்பவரும், அடுத்த 2 நாளில் மாரியப்பன் என்கிற 32 வயது விவசாயியும், 22-ம் தேதி, திண்டுக்கல்லில் 70 வயது நிர்மலாதேவி என்ற பெண்ணும், மறுநாள் அதே மாவட்டத்தில் ஸ்டீபன் என்கிற 38 வயது ஜவுளி வியாபாரியும் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி, கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் தினமும் குறைந்தபட்சம் 2 படுகொலைகள் நடப்பதாகவும், அந்தக் கணக்கின்படி பார்த்தால் இதுவரை குறைந்த பட்சம் 180 முதல் 200 கொலைகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதுவும் ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிகள் துணிகிறார்கள் என்றால், அவர்கள் எத்தகைய வன்மத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்வியையும் இந்த கொலைச் சம்பவங்கள் எழுப்புகின்றன.
இப்படி பயங்கரவாதிகள் போல் தலையைத் துண்டித்துக் கொலை செய்பவர்கள், கூலிப்படையினர் ஆக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. ஆணவக்கொலை, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை, முன்விரோதத்தில் கொலை, பழிக்குப் பழிவாங்க கொலை, சொத்து தகறாரில் கொலை, பணத்துக்காக ஆட்களை கடத்திக் கொலை என்று கொலைக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போனாலும் கூட ஒருவரின் உயிரை எடுப்பது மிகவும் வேதனை தரும் ஒன்று.
கொலை மட்டுமின்றி சாப்பிட்டதற்கு காசு கேட்டால், உணவு பரிமாற தாமதம் ஏற்பட்டால் உணவகங்களை (திமுகவினர்)சூறையாடுதல், கடைகள், வாகனங்களை அடித்து நொறுக்குதல், வீடு புகுந்து தாக்குதல், பெண்களிடம் தங்க சங்கிலி அறுப்பு, கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்தல், வீடு, கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு போன்ற குற்றச் செயல்களும் தமிழகத்தில் அன்றாட நிகழ்வுகளாக உள்ளன.
இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே அன்றாடம் கொலை குற்றங்கள் நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அதுமட்டுமின்றி சட்டம் -ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவல் துறையினரையே திருப்பித் தாக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றும் இருக்கின்றன.என்று ஒபிஎஸ் கூறியிருந்தார்.
பிரபல சமூக செயற்பாட்டாளரும், விளையாட்டுத்துறை வல்லுனருமான டாக்டர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பதிவில், “இதுவே முந்தைய ஆட்சியில் நடந்திருந்தால் இந்நேரம், இந்த மீடியாக்கள் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதாக முக்கிய நேரங்களில் விவாதங்களை நடத்தி இருப்பார்கள். இப்போது தமிழக ஊடகங்கள் எவ்வளவு அமைதி காக்கின்றன என்பதை பாருங்களேன்” என்று சில தனியார் செய்தி சேனல்களின் கோழைத்தனத்தை கலாய்த்து இருக்கிறார்.
இங்கே ஒரு மிக முக்கியமான நிகழ்வையும் குறிப்பிட்டாக வேண்டும். தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட ரவி, சட்டம்- ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவை இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து பேசினார்.
பொதுவாக, புதிய ஆளுநர்கள் பதவி ஏற்ற பின்பு மாநில முதலமைச்சரையோ அல்லது தலைமைச் செயலாளரையோதான் அழைத்துப் பேசுவது வழக்கம். மாறாக ஆளுநர் ரவி, டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதன்பின்பு முதலமைச்சர் ஸ்டாலினை, சைலேந்திரபாபு சந்தித்து ஆலோசனையும் நடத்தினார். இவர்கள் சந்திப்பின்போது பேசப்பட்ட விவரங்களும் வெளியாகவில்லை.
இந்த நிலையில்தான் தமிழக போலீசார் அதிரடியாக ரவுடிகள் வேட்டையில் இறங்கினர். தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் விதமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, என பல மாவட்டங்களில் நள்ளிரவில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் இந்த திடீர் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் 256 அரிவாள், கத்தி, 3 துப்பாக்கிகள், கஞ்சா உள்ளிட்ட ஏராளமான போதைப் பொருட்களும் பிடிபட்டன. கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சிக்கிய 560 ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர்.
900க்கும் மேற்பட்ட ரவுடிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வேட்டையின்போது போலீசார் ரெய்டுக்கு வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட 300 ரவுடிகள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்களையும் கண்டிப்பாக பிடித்தே ஆகவேண்டும் என்கிற உத்தரவு உள்ளூர் போலீசாருக்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
ஆளுநர் ரவி எதற்காக தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை வரவழைத்துப் பேசினார் என்பதற்கான காரணத்தை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
இதுதொடர்பாக தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆளுநர் ரவி போராளி குழுக்கள் நிறைந்த நாகாலாந்தில் ஆளுநராக பணியாற்றியவர் என்பது தெரிந்த விஷயம். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சரியாக இருக்கவேண்டும் என்று கறார் காட்டுபவர். அதேபோல் போதைப் பொருட்கள் நடமாட்டம், பயங்கரவாதிகள் ஊடுருவல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிரிவினை வாதத்தை தூண்டுவது போன்றவை இருக்கக்கூடாது என்பதிலும் மிகவும் கண்டிப்பானவர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்து இருப்பதை பதவியேற்ற சில நாட்களிலேயே அவர் தெரிந்து கொண்டார். அதனால்தான் மாநில டிஜிபியை வரவழைத்து பேசவும் செய்தார். அவர் காட்டிய அதிரடி காரணமாகத்தான் தற்போது ரவுடிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.
தனது வரம்புக்கு உட்பட்டு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவற்றையெல்லாம் அவர் எடுப்பார். சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருவதாகவும் ஆளுநர் ரவிக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்திருக்கிறது.
இனி அதிலும் அவர் அதிரடி காட்டுவார். ரவி, ஆளுநராக நியமிக்கப்பட்டதை திரும்பப் பெறவேண்டும் என்று கதறிய(தேச விரோத) தலைவர்கள் இனியாவது ஒருவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு பேசவேண்டும். ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டு இருப்பதால் தமிழகம் இனி அமைதிப் பூங்காவாக திகழும் என்பது நிச்சயம்” என்று அவர் புகழாரம் சூட்டினார் என UPDATE NEWS 360 பதிவு செய்துள்ளது.
குறிப்பு;ஆளுநர் பதிவி எதற்கு?இந்த ஆளுநரை மாற்று என்று கோஷம் போட்ட தமிழக கட்சி தலைவர்கள் எல்லாம் ஏன் அப்படி கோஷம் போட்டான்ங்கள் என்பது இப்பொழுது புரிகிறதா? அத்தனை பயல்களும் தேச துரோகிகள்.. ரௌடிகளின் தலைவர்கள்..பதவி ஏற்ற 4 மாதங்களில் செய்யாததை எப்படி ஒரே நாளில் இத்தனை ரொளடிகளை கைது செய்யமுடிந்தது இந்த அரசால்? இதை இந்த அரசு முன்பே செய்திருந்தால் எத்தனையோ உயிரை காப்பாற்றி இருக்கலாமே? இப்பொழுது புரிகிறதா ஆளுநர் பதவி எதற்கு? அதுவும் அரசியல்வாதி அல்லாத ஐபிஎஸ் அதிகாரி தமிகத்திற்கு ஆளுநராக போட்டது எதற்கு என்று?இது ஆரம்பம்தான்...இனி தொடரும்..
ஆளுநர் அவர்களுக்கு நன்றி..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...