Wednesday, September 22, 2021

நாகரிகத்தைப்பற்றி அரசியல்ல பேசுறது நாகரிகமாகவே தெரியலீங்களே...

 தமிழக ஆளுநர் ரவி டி.ஜி.பி சைலேந்திரபாபுவை சமீபத்தில் அழைத்துப் பேசினார். அதற்கு ஆளுநருக்கு அரசியல் சாசன உரிமை இருக்கிறது.

என்றாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் இப்படிச் செய்வது “நயத்தகு நாகரீகம்” இல்லை.
பழையவருக்கு ஆயுதம் “ஆய்வு”. புதியவருக்கு ஆயுதம் “அதிகார வர்க்கம்???”
தீவிரவாதிகள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்திருப்பது மற்றும் திமுக வி. ஐ. பிக்கள் சிலருக்கு மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பவிருப்பது பற்றியெல்லாம் பேசப்பட்டது என்று பட்சிகள் கூறுகின்றன.
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைத் தடைச் சட்டம் மற்றும் அன்னிய செலாவணிப் பராமரிப்புச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் திமுக விஐபிகள் தொடர்புடைய சோதனைகள் நடத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டிருப்பதாக ஒரு தகவல் காற்று வாக்கில் உலா வருகிறது.
“இதில் அதிரடிக் கைதுகள் இருக்காதாம். . ஆனால் அழைப்பாணைகள் பிறப்பிக்கப்படுமாம். உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் அரசியல் பரபரப்பு ஏற்படும்” என்று தாமரை நெஞ்சங்கள் இலைமறை காய் மறையாக மகிழ்கின்றன.
விவகாரம் முற்றினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்க வாய்ப்பு இருப்பதாக ஆளுநர் குறிப்புக் காட்டியதாகவும் ராஜ்பவன் வட்டாரங்களில் பேச்சு
ஆனால் 2011க்கு பிறகு இப்போதைய திமுக அமைச்சர்கள் அநேகமாக யாருமே அரசு பதவியில் இல்லை. ஒருவேளை பழைய விவகாரங்களைத் தூசி தட்டுகிறார்களோ?
ஆனால் அமலாக்கத்துறை விசாரணை நடைமுறைகளில் பத்து வருஷம் என்பது மிகவும் தாமதம். கோர்ட்டில் அடிபடும்.
ஆனால் அதுபற்றியெல்லாம் எப்போதும் டெல்லி கவலைப்படுவது இல்லை எனக்கு நினைவு தெரிந்து 95 காலகட்டத்தில் அமலாக்கத்துறை இதேபோல அதிமுக பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி அது அரசியல் பிரச்சனையாக மாறியது.
சமீபத்தில் மகாராஷ்ட்ரா ஆளுநர் பி. எஸ். கோஷியாரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிப்பது பற்றி விவாதிக்க மகாராஷ்ட்ரா அசெம்பிளியின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு கடிதம் எழுதினார்.
பீகார், உ. பி. உத்தரகாண்ட், குஜராத் போன்ற பா. ஜ. ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதால் அங்கும் அவசரக் கூட்டம் நடத்தலாம் என்று உத்தவ் தாக்கரே பதிலடி தந்தார்.
டெல்லி போலீசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசமான டெல்லியில் நடைபெறும் குற்றங்கள் பற்றி விவாதிக்க பார்லிமெண்ட்டின் அவசரக் கூட்டத்தை கூட்டுவார்களா என்றும் முதல்வரும் ஆளுநரும் கடிதப் போர் நடத்தினார்கள்.
மக்கள் வரிப் பயணத்தில் நடத்தப்படும் ராஜ்பவனும், சி. எம். ஆபீஸும், தேவையற்ற அரசியல் சர்ச்சைகளில் ஈடுபட்டன.
மேற்கு வங்காள மாநில ஆளுநர் முதல்வர் மமதாவுக்குக் கொடுக்கும் குடைச்சல் அகில பாரதத்திலும் பிரசித்தம்.
அது தமிழ்நாட்டிலும் தொடருமோ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...