"பாடும் நிலா மறையலாம்,
பாடல்கள் மறைவதில்லை.
சங்கீத மேகமாய் எம் மனதில் நுழைந்து,
கீத புயலாய் எம் உணர்வினில் இழைந்து,
அமுத கானமழையை,
அனுதினமும் பொழிந்து,
என்றென்றும் நிலைத்தாய் எம் மனங்களில் பிணைந்து.
இசையால் உன்னை இயங்க வைத்தது இறைவன் அருளாகும் ,
இசையில் மயங்கி இயங்க மறந்தது எம் ரசிக மனமாகும் .
ஆயிரமாயிரம் சரணங்களை ருசித்தது எங்கள் மனம் அன்று,
துயரமாயிரம், உம் சரணங்களை வணங்கி விடை தருகிறோம் கண்ணீரோடு இன்று,
வானம் உள்ளவரை நிலவு இருக்கும்,
கானம் என்ற ஒன்று உள்ள வரை உம் நினைவு இருக்கும்."
Spb அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி 

















No comments:
Post a Comment