Thursday, September 30, 2021

துக்கமெல்லாம் தீர்க்கும் ஸ்ரீதுர்க்கை..

 துக்கத்தையும், தோல்வியையும் போக்கி நம்மை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் துர்கை சுபிட்சமான வாழ்வு கிடைக்க அருள் புரிகிறாள்.

குடும்பத்தில் நிம்மதியும், ஒற்றுமையும் நிலைக்கச் செய்வாள். துர்கை என்பதில் `த்’, `உ’, `ர்’, `க்’, `ஆ’ என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்’ என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ’ என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்’ என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்’ என்றால் பாவத்தை நலியச் செய்பவள். `ஆ’ என்றால் பயம் மற்றும் எதிரிகளை அழிப்பவள் என்று பொருள்.
அதையடுத்து, துர்கையம்மனை எவ்வாறு வழிபட வேண்டும், எந்த கிழமைகளில் வழிபடுவது நல்லது என்றும் என்ன பலன்கள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.
🙏வழிபாடு..
சக்தி தெய்வங்களில் மிக வலிமையானவள் துர்காதேவி. துஷ்ட சக்திகளை அழிக்க அவதாரமெடுத்தவள். அசுரக்கூட்டத்தை தும்சம் செய்தவள்.
துர்கையைச் சரணடைந்தால், நம் முந்தைய ஜென்மப் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். கஷ்டங்கள் அனைத்தும் கரைந்துவிடும் என்பது ஐதீகம்.
துர்கை அம்மனுக்கு மிகவும் பிடித்த மலர், 'நீலோத் பலம்'. இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.
துர்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சண்டிகை தேவியின் சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். நல்லெண்ணெய் வழிபாடும், சகஸ்ர நாமமும் சக்தி வாய்ந்தவையாகும்.
ராகு கிரகத்தின் அதிதேவதை துர்கை, அதனால் துர்கையை பெரும்பாலும் ராகு கால நேரங்களில் வழிபாடு செய்வதே சிறப்பாகும். அதிலும், எலுமிச்சை பழம் கொண்டு விளக்கேற்றுவதால், தடைகள் நீங்கி சிறப்பான வாழ்வு கிடைக்கும்.
துர்கையின் அற்புதத்தை விளக்கும் 'துர்கா சப்த சதி' என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது மிகவும் நல்லது.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்காஷ்டகம் கூறி வழிபடுவதால் பெரும் நன்மைகளை பெறலாம். நம் வாழ்வில் இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்து அருள் புரிவாள் துர்கை.
துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கித் தந்திடுவாள் துர்காதேவி.
ஓம் ஹ்ரீம் தும் துர்கே துர்கே
ரட்சிணி ஸ்வாஹ;
தினமும் காலை, மாலை வீட்டில் விளக்கேற்றி துர்கை முன்பாக இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வழிபட்டு வந்தால், கடன் பிரச்சனையில் இருந்தும் சிக்கல்களில் இருந்தும் நமக்கு நிவர்த்தியைத் தந்திடுவாள் தேவி.
🙏பலன்கள்..
ஞாயிற்று கிழமை ராகு கால பூஜை செய்வதால் பயம் நீங்கி, தைரியம் அதிகரிக்கும்.
திங்கட் கிழமையில் ராகு கால பூஜை செய்தால் வீட்டில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்கும்.
செவ்வாய்க் கிழமை ராகு கால பூஜை திருமண தோஷம், பிதுர் தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்களை நீக்கும்.
புதன் கிழமையில் ராகு கால பூஜை செய்துவர தொழில் எதிரிகள் நீங்குவர்.
வியாழக் கிழமையில் ராகு கால பூஜை செய்துவர தெய்வ அருளும், குரு அருளும் கிடைக்கும்.
வெள்ளிக் கிழமை ராகு கால பூஜை சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.
சனிக் கிழமையில் ராகு கால பூஜை செய்துவர தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
கணவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாள். தாலியை நிலைக்கச் செய்வாள்.
ஒரு வருடம் துர்கை அம்மனை தொடர்ந்து பூஜித்து வந்தால், அவருக்கு முக்தி கிடைக்கும்.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...