Wednesday, September 22, 2021

தியாகராஜன் ஊர் வம்பு இழுப்பது சரியல்ல: டி.கே.எஸ்.இளங்கோவன் 'பளிச்' அறிவுரை!

 சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், நிதி அமைச்சர் தியாகராஜன் பங்கேற்காத விவகாரம், சர்ச்சையை உருவாக்கி உள்ளதால், ''ஊர் வம்பு இழுப்பது சரியல்ல,'' என்று, தி.மு.க., - எம்.பி.,யான டி.கே.எஸ்.இளங்கோவன், அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.



சமூக வளைகாப்பு விழா


உ.பி., மாநிலம், லக்னோவில், 45வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், 17ல் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக தியாகராஜன் அளித்த விளக்கத்தில், 'கூட்டம் பற்றிய தகவல், எனக்கு தாமதமாக கிடைத்தது.

தியாகராஜன், ஊர் வம்பு, இளங்கோவன்


எனக்கு முன்கூட்டியே சில பணிகள் இருந்ததால், அங்கு செல்கிறேன். தற்போது, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்கிறேன்' என, கோபாவேசமாக கூறியுள்ளார்.இது, சமூக வலைதளங்களில் விவாதமாகி, பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

'கொழுந்தியாளுக்கா வளைகாப்பு?' என, சிலர் கேள்வி எழுப்பினர். அதேநேரத்தில், மதுரை, ஆரப்பாளையத்தில், அரசு சார்பில் நடந்த சமூக வளைகாப்பு விழாவில் தியாகராஜன் பங்கேற்றார். 'எனக்கு கொழுந்தியாள் இல்லை' என்றார்.

இது தொடர்பாக, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது: தேவையில்லாமல், தியாகராஜன் கோபத்தை துாண்டும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசுகின்றனர். பதில் அளிக்கும்போது, அவர் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார். ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு கண்டிப்பாக அவர் சென்றிருக்க வேண்டும். இதை புறக்கணித்தால், தமிழக நலன் பாதிக்கும்.


கண்டனம்


முதல்வரிடம் அனுமதி வாங்கினாரா என்பது எனக்கு தெரியாது. ஏன் செல்லவில்லை என்பதும் எனக்கு தெரியாது. அமைதியாக இருக்கும்படி, அவரிடம் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதா என்பதும் தெரியாது. ஆனால், முதல்வர் பலமுறை எச்சரித்து, அவருக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, ஊர் வம்பை இழுப்பது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், தியாகராஜன் புறக்கணித்தது பற்றி, தி.மு.க., வட்டாரத்தில் சில தகவல்கள் சொல்லப்படுகின்றன.அதாவது, மற்ற மாநில நிதி அமைச்சர்கள், தனி விமானத்தில் லக்னோ சென்றதுபோல், தனக்கும் தனி விமானம் கேட்டதாகவும், முதல்வர் ஸ்டாலின் மறுத்து விட்டதால், தியாகராஜன் செல்ல வில்லை என்றும் கூறப்படுகிறது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் தியாகராஜனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.




சர்ச்சை


இதற்கு, தியாகராஜன் பதிலடி தரும் வகையில், 'என், 14 பக்க அறிக்கையை, கவுன்சிலுக்கு அனுப்பி விட்டேன். நிதி அமைச்சகமும் ஏற்று விட்டது. இதை வைத்து, வீண் வதந்தி கிளப்பாதீர்கள்' என்றார்.ஆனாலும், லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது தொடர்பாக, தியாகராஜன் அளித்த விளக்கம், நக்கல் பேச்சு, தேசிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. பதவி விலக வேண்டும் என, சமூக வலைதளங்களில், அவருக்கு எதிரான கருத்துக்களும் பரவி வருகின்றன.

விரைவில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் அடுத்த கூட்டம் நடக்க உள்ளது. அதற்காவது தியாகராஜன் செல்வாரா அல்லது புறக்கணித்து விட்டு, 'பிரசவம், பெயர் சூட்டு விழா' என ஏதாவது காரணம் சொல்வாரா என்றும் வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுகிறது.இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதால், 'மத்திய அரசுக்கு எதிராக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல், அமைதி காக்க வேண்டும்' என தியாகராஜனுக்கு, தி.மு.க., மேலிடம் வாய்ப்பூட்டு போட்டு உள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...