Friday, September 24, 2021

*ஏழுமலையான்*

 திருவேங்கடமுடையான் ஏழு மலைகளில் இருந்து அருள்பாலிப்பதால் *ஏழுமலையான்*!

*வேங்கட மலை*
*வேம்* என்றால் பாவம்;
*கட* என்றால் போக்கும் -
பாவங்களை போக்கும் மலை என்பதால் வேங்கட மலை!
*சேஷமலை*
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.
அவதாரத்திற்காக வந்த ஆதிசேஷன் பெயரால் *சேஷமலை!*
*வேத மலை*
வேதங்கள் அனைத்தும் இங்கு மலைவடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே *வேத மலை!*
*கருட மலை*
ஸ்வாமி ஶ்ரீனிவாசனை சேவிக்க வந்த கருடாழ்வார், வைகுண்டத்திலிருந்து ஏழு மலையை தாங்கி வந்தார்.
ஆக, இது *கருட மலை!*
*விருஷப மலை*
விருஷபன் என்ற அரசன் இங்கு ஸ்வாமியை வணங்கி மோக்ஷம் பெற்றதால் *விருஷப மலை!*
*அஞ்சன மலை*
அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிட்ட இங்கு எழுந்தருளியுள்ள ஆதிவராஹரை பிரார்த்தித்தாள். அதன் பயனாக ஆஞ்சனேயரை பெற்றாள்.
இவளது பெயரால் *அஞ்சன மலை!* ஆயிற்று.
*ஆனந்த மலை*
ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் இடையே போட்டி ஏற்பட்டபோது, எம்பெருமான் ஶ்ரீனிவாசனே மத்யஸ்தராக இருந்து, இருவருமே பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார்!
இதனால் வாயுவும்-ஆதிசேஷனும் ஆனந்தமடைந்தனர்!
இதனால் இந்த மலைக்கு *ஆனந்த மலை* என்று பெயர் பெற்றது!
*இந்த ஏழு மலைகளின் காரணமாக, திருப்பதி வேங்கடவனுக்கு "ஏழுமலையான்" என்று பெயர் வந்தது!*
May be an image of 1 person, outdoors and Batu Caves

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...