Saturday, June 18, 2022

♥ தந்தையர் தினம் ♥

 

♥ 1882-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரரான வில்லியன் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் மற்றும் எல்லன் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் சொனாரா ஸ்மார்ட் டோட். சொனாரா 16 வயதை தொடும் போது ஆறாவது பிரசவத்திற்கு சென்ற அவரது தாய் எல்லன் மரணமடைந்தார். அன்று முதல் வில்லியம் ஜாக்சன் மறுமணம் செய்து கொள்ளாமல் தனது ஆறு பிள்ளைகளுக்கும் தாயும், தந்தையுமாக இருந்து காப்பாற்றினார் .
♥ தன் தந்தையின் அர்ப்பணிப்பு உணர்வும் தியாகமும், அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை; தன் தந்தையின் பிறந்தநாள் தந்தையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என சொனாரா தேவாலயத்தில் வாதிட்டார்.
♥ இதற்கு ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினம் அனுசரிக்க. தேவாலய அனுமதி வழங்கப்பட்டது. 1913 ஆம் ஆண்டில் இதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் 1924 ஆம் ஆண்டில் இந்த யோசனைக்கு ஆதரவளித்தார்.
♥ கிட்டத்தட்ட 85 ஆண்டுகள் சென்றபின்பு 1966 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இதற்கு பெடரல் விடுமுறை அனுசரிக்கப்படப் போவதாக பொது அறிவிப்பை வெளியிட்டார்.
♥ அன்று முதல் பெரும்பாலான நாடுகளில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 3 வது ஞாயிறுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
♥ இந்த வருடம் ஜூன் மாதம் 19 வது நாள் ஞாயிறுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ளது .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...