Friday, June 17, 2022

*'அக்னிபத்' - எதிர்க்க காரணம் என்ன?*

 பொதுவாகவே இராணுவவீரர்களுக்கு அவர்களது பயிற்சிகளால் சில பழக்கங்கள்தானாக அமைந்துவிடும் ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, நேரம்தவறாமை, உடற்பயிற்சி, நீட்டாக உடை உடுத்துதல் முடிவெட்டுதல் போன்றவை, மிகச்சிலர் விதிவிலக்காக இருக்காலாம், ஆனால் பெரும்பான்மையானவர்கள் தினசரி பழக்கவழக்கங்களால் சாதாரணமக்களைவிட மேற்குறிப்பிட்ட விஷயங்களில் சரியாகவே நடந்துகொள்வார்கள் -

எல்லாவற்றையும் விட முக்கியமாக அவர்களில் பெரும்பாலானவர்களிடம் தேசபக்தி இயல்பாகவே வந்துவிடும் -
இங்கே உடுமலை அமராவதியில் ஒரு சைனிக் பள்ளி அதாவது இராணுவத்திற்கு எதிர்கால அதிகாரிகளை உருவாக்கும் பயிற்சிக்காக மாணவர்களைத் தயார் செய்யும் பள்ளி ஒன்று உள்ளது -
இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன -
6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு (அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு- AISSEE) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொதுப் பள்ளி கல்வி வழங்கப்படுகிறது. தலைமைத்துவ திறன் கொண்ட மாணவர்கள் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் அதிகாரிகளாக ஆக பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்-
இந்தப்பள்ளியில் நடக்கும் நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெற வைப்பதற்காக இங்கே பல தனியார் பயிற்சிப்பள்ளிகள் உள்ளன, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான குழந்தைகள் இங்கே தங்கிப்படித்து வருகின்றனர், இவர்களது குறிக்கோள் சைனிக் பள்ளியில் 6 அல்லது 9-ம் வகுப்புகளில் நடக்கும் நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெற்று இராணுப்பள்ளியில் நுழைந்து அதிகாரிகளாக வேண்டும் என்பது -
இந்தப் பயிற்சிப் பள்ளிகளின் சிறப்பம்சங்கள் என்னவென்றால் இங்கே குழந்தைகளுக்கு வழக்கமான பள்ளிப்படிப்புகளோடு கூடவே இராணுவத்தில் வழங்கப்படும் கடுமையான பயிற்சிகளுக்குத் தயார் செய்யும் வகையில் உடற்பயிற்சிகள், மலையேற்றம், குதிரைசவாரி உட்பட அணைத்துப்பயிற்சிகளும் தரப்படுகின்றன -
இங்கு சேர்க்கும் பெற்றோர்களின் நோக்கம் ஒருவேளை சைனிக் பள்ளியில் சேர முடியவில்லை என்றாலும் இதே பயிற்சிப் பள்ளிகளில் +2 வரை படித்த மாணவர்கள் எதிர்காலத்தில் எந்தக் கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயின்றாலும் தனித்திறமையுடன் திகழ முடியும் என்று நம்புகிறார்கள், ஒழுக்கத்திலும், உடற்திறனிலும் மற்ற மாணவர்களைவிட இவர்கள் சிறிது உயர்வாகத்தான் திகழ்வார்கள் இது இவர்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படும் என்பதுதான் உண்மை -
இப்பொழுது மத்திய அரசு அறிவித்திருக்கும் "அக்னி பத்" திட்டமும் இன்றைய மாணவ, மாணவியருக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும் -
17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட முக்கியமான பருவத்தில் இந்திய பாதுகாப்புப் படைகளின் பயிற்சியை, ஊதியத்துடன் (வருடம் அதிகபட்சமாக 6.70 லட்சம் வரை) பெருவதற்கான அரியவாய்ப்பு இது, அதுமட்டுமல்லாமல் வழக்கமான பட்டப்படிப்புகளையும் பயிற்சியுடன் படிக்கலாம், மேலும் பயிற்சியின்போது திறமையாகச் செயல்படும் வீரர்களில் 25% பேர் விருப்பப்பட்டால் தொடர்ந்து படைகளில் செயல்பட்டு உயர்ந்த பதவிகளுக்கும் வரலாம், நான்காண்டுகள் முடிவில் பயிற்சி முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு கைநிறைய (குறைந்தது 11 லட்சம்) ஒரு தொகையும் வழங்கப்படுகிறது, (அதை வைத்து சுயதொழிலும் செய்யலாம்) அதுமட்டுமல்லாமல் மாநில வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படும் -
நினைத்துப்பாருங்கள் இது எவ்வளவு
அருமையான
திட்டம்?, எதிர்காலத்தில் சிறந்த ஒரு ஒழுக்கமான தலைமுறையை உருவாக்கும் திட்டம்?-
இதை ஏன் சிலர் எதிர்க்கிறார்கள்?-
சிலர் என்பதைவிட எந்தவொரு வகையிலும் இந்தநாடு முன்னேறிவிடக்கூடாது, இளைஞர்கள் இராணுவம் மாதிரியான தேசத்தைப்பாதுகாக்கும் அமைப்புகளில் சேர்ந்துவிட்டால் நாட்டுப்பற்று வந்துவிடும் பிறகு தேசியக்கொடியை நேசிக்க ஆரம்பித்துவிடுவான், தானாகவே பாரதமாதாவை நேசிக்க ஆரம்பித்துவிடுவான், மிக முக்கியமாக இங்கே பொருளாதாரத்திலும், ஆரோக்கியத்திலும் நிமிர்ந்த ஒரு தலைமுறை உருவாகிவிடும், இராணுவப் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொண்டநாடு வலுவானதாக இருக்கும் என்பதுதான் -
சரி இவைகளால் அவர்களுக்கென்ன பிரச்சினை என்று கேட்டால்-
இளம்வயதில் ஒழுக்கமில்லாமல், குருவிக்கூடுதலையுடன், நடிகர்களுக்குப் பாலபிஷேகம் செய்யும் ஒரு பாழ்பட்ட தலைமுறையை வைத்திருப்பதுதான் இங்கே காலங்காலமாக அரசியல் பிழைப்புப் பிழைப்பவர்களுக்கு நல்லது, அவன்தான் குவாட்டருக்கும், பிரியாணிக்கும் போஸ்டர் ஒட்டுவான், 200 ரூபாய்க்கு ஓட்டுப்போடுவான், வறுமையில் இருந்தால்தான் மதம்மாற்றமுடியும், -
ஒருவேளை தேசியக்கொடியை நேசிக்கக் கற்றுக்கொண்டவன் தேசத்தையும் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிடுவான், பிறகு இயற்கையாகவே இந்த மண்ணின் பெருமைகளையும் ஆன்மீகத்தையும் புரிந்துகொள்வான் பிறகு அவனை மதம்மாற்ற மூளைச்சலவை செய்யமுடியாது இதுதான் காரணம், அதனால்தான் பதறுகிறார்கள் -
மற்றபடி இந்த
அருமையான
திட்டத்தை எதிர்க்க ஒரேயொரு உருப்படியான காரணம் காட்டச்சொல்லுங்கள் பார்க்கலாம் -
ஒழுக்கமான, தேசப்பற்றுள்ள குழந்தைகளை உருவாக்க நினைக்கும் பெற்றோர்க்கு இது ஒரு நல்வாய்ப்பு, குறிப்பாக 10, 12ற்குப் பிறகு மேற்படிப்புப் படிக்கவைக்க வசதியில்லாத பெற்றோர்களுக்கு இது மிக, மிக நல்லவாய்ப்பு-
போராடுபவர்கள் அடையாளங்களைப் பார்த்து அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள், புறக்கணியுங்கள் -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...