Tuesday, September 6, 2022

இவர்கள் நாடகம் முடியவே முடியாது!

  'மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு பயந்து, அதை நாங்கள் எதிர்க்கவில்லை. அது, உயர்த்தும் ஏணியாக இல்லாமல், தடைக்கல்லாக இருக்கிறது. 'படிப்பு தான் தகுதியை தீர்மானிக்க வேண்டுமே தவிர, தகுதியிருந்தால் தான் படிக்கவே வர வேண்டும் என்பது,இந்த நுாற்றாண்டின் மாபெரும் அநீதி; எனவே, எதிர்க்கிறோம்' என, 'நீட்' தேர்வை எதிர்ப்பதற்கான காரணத்தை, 'அழகாக' விளக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். மருத்துவம் போன்ற தனித்துவம் வாய்ந்த படிப்புக்கு, மாணவர்கள் தயாராக இருக்கின்றனரா என்பதை பரிசோதித்து பார்ப்பதில், என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில், சான்றோர் குழுக்கள் பல நாட்கள் சிந்தித்து, அதன் பிறகே நடைமுறைக்கு வந்தது நீட் தேர்வு.பிளஸ் ௨ மதிப்பெண் அடிப்படையில், யார் வேண்டுமானாலும் மருத்துவம் படிக்க சேரலாம் என்றால், கல்வியின் தரம் நீர்த்துப் போவதுடன், இடைநிற்றலும் மிக அதிகமாகும். அத்துடன், தனியார் மருத்துவக் கல்லுாரிகள், கட்டண கொள்ளையில் ஈடுபடும் என்பதிலும் சந்தேகமில்லை. அப்படிபட்ட நிலைமை உருவானால், அது நாட்டிற்கும், மாநிலத்தின் நலனுக்கும் நல்லதல்ல.அரசுக்கு தகுதியான பணியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகவே, அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, தமிழக அரசு தேர்வு நடத்தி, ஊழியர்களை தேர்வு செய்கிறது. 'நீட்' தேர்வே வேண்டாம் என்பவர்கள், இந்தப் போட்டித் தேர்வை மட்டும் ஆதரிப்பது ஏன்? கல்வித் தகுதி அடிப்படையில், அரசுப் பணியில் சேர்க்கலாமே? 'நீட்' தேர்வு எதிர்ப்புக்கு, முதல்வர் தந்துள்ள விளக்கம், மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல உள்ளது. இது போன்ற அபத்தமான பேச்சுக்களை, இன்னும் எத்தனை நாளைக்கு தான் கேட்க வேண்டுமோ தெரியவில்லை.போகிற போக்கை பார்த்தால், 'நீட்' தேர்வு ரத்தாகப் போவதும் இல்லை. அதை வைத்து, தி.மு.க.,வினர் நடத்தும் நாடகம் முடியப் போவதும் இல்லை என்பது மட்டும் உண்மை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...