Thursday, September 29, 2022

சாதி மதவேர்களை உபயோகப்படுத்தி கன்சாலிடேட் ஓட்டு வங்கி ஆக்கிஉள்ளார்கள்...

 தொழில்சாலைகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய சென்றிருந்த காமராஜர் திகைத்து நின்றார்... மனு கொடுக்க காத்திருந்த மக்களிடையே ஒருவர் மட்டும் மனு எதுவும் கொடுக்காமல் கையெந்தியபடி காமராஜரிடம் அய்யா ரொம்ப சிரமபடுகிறேன் ஏதாவது வேலை போட்டுக் கொடுங்கள் என கண்கள் கலங்கியபடி பரிதாபமாக நின்றார்..

அதைக்கண்ட காமராஜர் அதிகாரிகளிடம் அவரை பற்றி விசாரிக்க சொன்னார். விசாரித்த அதிகாரிகளும் அவர் மிகவும் எழை, மற்றும் படிப்பறிவு இல்லாதவர், அரசு வேலைக்குரிய வயது வரம்பை தாண்டியவர்.. அதனால் அரசாங்க வேலை தர இயலாது என்று காமராஜரிடம் கூறினர். காமராஜருக்கோ அந்த ஏழைக்கு வேலை இல்லை என்று சொல்லி அனுப்ப மனமில்லை. அந்த ஏழை மனிதனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார்.
ஆனால் அந்த ஏழைக்கு சட்டரீதியாக வேலை கொடுக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெளிவு படுத்தினர்... உடனே காமராஜர் இல்லாத ஓர் ஏழைக்கு மாநில முதல்வரே வேலை போட்டு கொடுத்து உதவ முடியாத அதிகாரம் இல்லாமல் ஒரு சட்டமா என்று அதிகாரிகளிடம் விசனபட்டபடியே கேட்டுக்கொண்டு யோசித்தார்...
இதை கேட்ட அதிகாரியில் அனுபவமிக்க ஒருவர் உடனே, அய்யா தாங்கள் விரும்பினால் முதலமைச்சர் பொது நலன் கருதி தனது சுயசிந்தனை மூலம் அச்சட்டத்தை மீற அச்சட்டமே இடம் தர வழியும் இருக்கிறது என்பதனை எடுத்து கூறினார்.... உடனே அதையே பிடித்துக் கொண்ட காமராஜர் ஏழைகளுக்கு உதவுறதுன்னா என்ன? பொது நலன்னா என்ன? இரண்டும் ஒன்னுதானே என்றார் மிகவும் வேகமாக.. அதற்கு அந்த அதிகாரியும் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஆமாம் என்று தலையசைக்க... இவருக்கு அரசு அலுவத்தில் வாட்ச்மேன் வேலை போட்டு ஆடர் அடிச்சு கொண்டு வாங்க நான் கையெழுத்து போடுகிறேன் என்றார் காமராஜர்.. அதிகாரியும் அவ்வாரே செய்து தர.. அந்த ஏழைக்கும் அரசு வேலை கிடைத்தது..
ஏழையின் துயர் துடைக்க முன்னிர்க்கும் முதல்வராகவும் தலைவராகவும் காமராஜர் திகழ்ந்ததாலையே அவரை ஏழைப்பங்காளன் என நாடே போற்றியது...
May be an image of 5 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...