Thursday, September 29, 2022

துணை பொதுச்செயலர் பதவி தி.மு.க.,வில் ஏழாக உயர்கிறது?

 தி.மு.க.,வில் துணை பொதுச் செயலர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்த்தப்பட உள்ளது.

தி.மு.க., உட்கட்சி தேர்தலின் இறுதி கட்டமாக, மாவட்டச் செயலர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள, 72 மாவட்டச் செயலர் பதவிக்கு, 71 பேர் மட்டும் அறிவிக்கப்பட்டனர்.

DMK,திமுக, துணை பொதுச்செயலர் , ஏழு



தென்காசி வடக்கு மாவட்டத்தில் மட்டும், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான பஞ்சாயத்து நடந்து வருவதால், அறிவிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.துாத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் பதவிக்கு தேர்வாகியுள்ள அமைச்சர் கீதா ஜீவன் ஒருவர் மட்டுமே, பெண் மாவட்டச் செயலராக உள்ளார். மற்ற மாவட்டங்களில், பெண்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மேலும், ஐந்து துணை பொதுச் செயலர்கள் பதவிகளில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராஜா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நீடிக்கின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக, மகளிரணியை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.
மேலும், துணை பொதுச் செயலர் பதவிகளை, ஏழாக உயர்த்த தலைமை ஆலோசித்துள்ளது.வட மாவட்டங்கள் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரில் ஒருவரும், கொங்கு மண்டலத்தில் அமைச்சர்கள் சாமிநாதன், சக்கரபாணி ஆகியோரில் ஒருவரும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில், இப்பதவிகள் அறிவிக்கப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இடமாற்றம் ஏன்?



கருணாநிதி காலத்தில், கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் உள்ள அரங்கத்தில் பொதுக்குழு நடக்கும்; சைவ உணவு மட்டும் பரிமாறப்படும்.தி.மு.க., தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடந்த பொதுக்குழு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது; அசைவ உணவு பரிமாறப்பட்டது. தற்போது, ராயப்பேட்டையில் மெட்ரா ரயில் பணிகள் நடப்பதால், அந்த இடத்தை தேர்வு செய்யவில்லை.


மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.எனவே அறிவாலய அரங்கத்தில் இடம் பற்றாக்குறை உள்ளது. மேலும், அங்கு அசைவ உணவு பரிமாற முடியாது.எனவே, அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...