நெல்லை மாநகர பகுதியில் செல்லப்பிள்ளையாக வளரும் சேட்டன் ..
இவரை சிலர் மனநிலை சரியில்லாதவர்கள் என்று நினைக்கிறார்கள் ..
ஆனால்
இவர் ஒரு நல்ல மனிதர் ...
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ..
இவர் யாரிடமும் தருமம் எடுப்பது கிடையாது ...
அவருக்கு தெரிஞ்சா மனிதர்களிடம் மட்டுமே காசு தேவைப்பட்டால் வாங்கிக்கொள்வார் ...
கடைகளில் அவர் பொருள் வாங்கினாலும் அந்த காசை கொடுத்து தான் வாங்குவார் ...
அவர் எல்லாரிடமும் சாப்பாடு வாங்கி சாப்பிட மாட்டார் ...
இவர் சாப்பிடும் சாப்பாடு ..
புரோட்டா சிக்கன் மட்டன் சாப்பாடு இதை தான் விரும்பி சாப்பிடுவார் ...
இவருக்கு என்று சில மனிதர்கள் இதே போன்ற சாப்பாடு களை வாங்கி கொடுத்து சென்று அவரிடம் ஆசி பெற்று செல்கிறார்கள் ...
ஆனால் அவர் சாமியார் அல்ல அவர் சாதாரண மனிதன் தான் நல்ல மனிதன் ...
இந்த கெரானோ காலகட்டத்தில் தனிமனிதனாக இந்த மாநகரத்தில் வளம் வந்தார் ...
ஆனால்
இவரை ஒரு நோயும் தாக்கவில்லை ...
மூன்று ஆண்டுகளாக இந்த பகுதியில் செல்லப்பிள்ளையாக இருக்கிறார் ...
ஆனால் இவர் வசதி படைத்த மனிதராக தெரிகிறார் ...
ஏதோ கர்ம வினையால் பகுதியில் சுற்றித் திரிகிறார் இவரை நேசிப்போம் ...


சக மனிதர்களை நேசிப்போம் 

இவரைப் பத்தி ஒரு பதிவு போட வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை அது இன்று நிறைவேறியது ...
நல்லதை நினைத்து இதேபோன்ற மனிதர்களுக்கு உதவுவோம் ...
இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு உதவுவோம் ..
நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும் ..
மனிதநேயத்துடன் நெல்லை புகைப்படக்காரர் டெலி ராஜா ....





No comments:
Post a Comment