பண்டரிபுரத்தில் ஒரு பிராமணர். அவர் ஒரு தீவிர விட்டல பக்தர். குடும்பம் பெரியது என்பதால் அவருக்கு பணத்தை தேடுவதற்கும் இடையிடையே நேரம் தேவைப்பட்டது.


காவலாளி " யார் நீங்கள்?" என்றான்.
"நான் பண்டரிபுரத்திலிருந்து ஒரு விட்டல பக்தன் வந்திருக்கிறேன் என்று ராஜாவிடம் சொல்லு" என்றார்.

ராஜா அவரை உபசரித்தான்... " நான் அருகே இருக்கும் அம்பிகையின் ஆலயம் சென்று அம்பாளுக்கு தானே பூஜை செய்து விட்டு புசிப்பது வழக்கம். தாங்களும் தரிசனத்துக்கு வாருங்கள்" என்று அவரை அழைத்து சென்றார்.

"இதோ இந்த நந்தவனத்தில் தான் அம்பிகைக்கு தேவையான பூஜைக்குகந்த புஷ்பங்கள் தரும் செடி கொடிமரம் எல்லாம் வளர்க்கிறேன்" இது போன்ற நந்தவனம் செழிப்பாக இருப்பது அபூர்வமானது அல்லவா?

இதோ கோவில் தெரிகிறது பாருங்கள்... தக தக பள பள வென்று (முழுதும் வெள்ளியாலேயே சுவர்கள் கட்டப்பட்டு பிரம்மாண்டமாக அம்பிகை கோவில் காணப்பட்டது).
உள்ளே நிறைய பிராமணர்கள் வேதகோஷம், பூஜைக்கு எல்லாம் ரெடியாக இருந்தது,

நிறைய ஆபரணங்கள் அலங்கார பட்டு வஸ்திரங்களோடு அம்பாள் ஜகஜோதியாக தரிசனம் தந்தாள்.
ராஜா பூஜைக்கு அமர்ந்தார்...
விஸ்தாரமாக பூஜை நடந்து நைய்வேத்யம் முடிந்து அனைவருக்கும் கை நிறைய பிரசாத விநியோகமும் ஆனது.

அய்யா....இது போல உசத்தியான கோவில், அம்பாள், அலங்கார பூஜைகள் எல்லாம் எங்காவது பார்த்ததுண்டா? உங்கள் பண்டரிபுரத்தில் இப்படி எல்லாம் சிறப்பாக விட்டலனுக்கு பூஜை உண்டா?"



"இன்னும் இல்லை"
"அதனால் தான் இவ்வாறு பேசுகிறீர்கள். விட்டலன் ஆலயம் பண்டரிபுரத்தில் தங்கத்தாலேயே கட்டப்பட்டது. நீங்கள் கட்டினது போல் வெறும் வெள்ளியால் அல்ல.
இது நீங்கள் கட்டிய ஆலயம்... அது தேவ சிற்பி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது.

சந்திரபாகா என்று ஒரு நதி ஓடுகிறதே கேள்விபட்டிருக்கிறீர்களா? அதில் ஸ்நானம் செய்தால் பல ஜென்மங்களின் பாவம் ஒழியும்.

இந்த பிராமணனுக்கு கடுந்தண்டனை கொடுக்க முடிவெடுத்தான்.
"நீ சொல்வது உண்மையா"
"நான் சொன்னது கொஞ்சம் தான்"...

ஒரு சிறிய படையே நிறைந்து விட்டது. ராஜாவின் பின்னால் பிராமணன் அழைத்து செல்லப் பட்டான் .

நான் சொன்னது போல் இல்லையென்று தெரிந்தவுடன் என் கழுத்தை ராஜா வெட்ட போகிறான். வெட்டட்டும்!, பரவாயில்லை

இந்த ராஜாவுக்கு நீயே வழிகாட்டு" வழியெல்லாம் விட்டலனை தியானம் பண்ணிக்கொண்டே வந்தார் பிராமணர்.

யானை மீது அமர்ந்திருந்ததால் தூரத்திலேயே விட்டலன் ஆலயம் கண்ணில் பட்டது.
ராஜா திகைத்தான்...

தங்கத்தால் கட்டப்பட்ட கோவில் கோபுரம் கண்ணை குருடாக்குகிறதே...
சுற்றிலும் அடர்ந்த பசுமையான காடு நிறைய பூத்து குலுங்கும் வித விதமான புஷ்பங்கள், பழங்கள்..

ராஜா யானைமீதிருந்து கீழே இறங்கினான்.
பிராமணரிடம் ஓடி வந்தான்...

"உள்ளே விட்டலன் ஸ்ரீ கிருஷ்ணன் வடிவில் சிரித்துக்கொண்டு காட்சி தந்தான்".

இந்த ஏழை பிராமணனின் வார்த்தை பொய்க்க கூடாது என்று என்னமாக தரிசனம் கொடுத்தாய். "நான் பாக்யவான்" என்று நெஞ்சுக்குள்ளேயே ஆனந்தம் அடைந்தார் பிராமணர்.


இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைதியாக அமோகமாக அமைய
வாழ்த்துகள்
.
No comments:
Post a Comment