Tuesday, September 6, 2022

டெமிடோ போல மாறுவரா அமைச்சர்கள்?

 இந்தியாவைச் சேர்ந்த, 34 வயது பெண், போர்ச்சுகல் நாட்டிற்கு சுற்றுலா சென்றார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, லிஸ்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அங்கு, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.போர்ச்சுகலுக்கு சுற்றுலா வந்த இடத்தில், இந்திய கர்ப்பிணி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், போர்ச்சுகலில் சுகாதாரத் துறை கட்டமைப்பு வலுவாக இல்லை என்றும், சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன.இந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று, போர்ச்சுகல் நாட்டின் சுகாதாரத் துறை பெண் அமைச்சர் மார்த்தா டெமிடோ பதவி விலகிஉள்ளார். கொரோனா பரவலை திறம்பட கட்டுப்படுத்தியதற்காக, அவரை பலரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், கர்ப்பிணி உயிரிழந்ததால், மார்த்தா டெமிடோ பதவி விலகியது, உலகையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. திருவாரூரில் அரசனின் மகன் ஓட்டி வந்த தேர் சக்கரத்தில் அகப்பட்டு, இறந்த கன்றுக்குட்டிக்கு நீதி கேட்ட தாய் பசுவிற்கு, அதே தேர்க்காலில் தன் மகனையே பலியிட்டு நீதி வழங்கினான் மனுநீதி சோழன். அதுபோல, தன் கணவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்காக, மதுரையையே சாபமிட்டு தீக்கிரையாக்கினாள் கற்புக்கரசி கண்ணகி. அவளின் கணவன் கோவலனுக்கு தவறான நீதி வழங்கியதால், உயிர் நீத்தான் பாண்டிய மன்னன். அந்த வரிசையில், போர்ச்சுகல் சுகாதாரத் துறை பெண் அமைச்சர் மார்த்தா டெமிடோ, தன் நிர்வாகத்தில் உள்ள சுகாதாரத் துறையை, திறம்பட செயல்பட வைக்க முடியாததால், இந்திய பெண் இறந்து விட்டாரே என்று மனம் வருந்தி, தன் அமைச்சர் பதவியை உதறியிருப்பது, பலரும் போற்றும் வகையில் அமைந்துள்ளது.நம் நாட்டு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், போர்ச்சுகல் அமைச்சர் மார்த்தா டெமிடோவை பார்த்தாவது மன மாற்றம் அடைந்து, தங்களின் நிர்வாகத்தில் குறை ஏற்படாமல், முறையான வகையில் சேவையாற்றிட முன்வர வேண்டும்.

டெமிடோ போல மாறுவரா அமைச்சர்கள்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...