Wednesday, September 28, 2022

ஸ்ரீசக்கரத்தில் எத்தனையோ இரகசியங்கள் உண்டு.

 ஆதிசங்கரர் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தில் நிர்மாணித்த

.... ஸ்ரீசக்கரம் பவசாகர ஸ்ரீசக்கரம் எனப்படும். மக்கள் மீண்டும் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுத்து துன்பப்படாமல் அவர்களை ஆபத் பாந்தவனாய் இறைவன் கை தூக்கி காக்கும் ஸ்ரீசக்கரத்தை இங்கு ஆதிசங்கரர் ஏற்படுத்தி உள்ளார்.
அற்புத நோய் நிவாரண சக்திகளைக் கொண்டது.
ஆதிசங்கரரின் குருநாதர் ஆதிசேஷனின் அவதாரமான கோவிந்த பகவத் பாதாள். தன்னுடைய குருநாதரை மறவாத செய்நன்றி தொண்டாக ஆதிசேஷன் சிவபெருமானின் திருநாட்டிய தரிசனம் பெற்ற
சிதம்பரத்தில்
.....ஆதிசேஷ ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்து உள்ளார்.
குருவையும் நிந்திக்கும் தகாத செயலைச் செய்தவர்களுக்கு பிராய சித்த வழிமுறைகளை சுட்டிக் காட்டக் கூடியதே இந்த ஸ்ரீசக்கரத்தின் மகத்துவமாகும்.
செய்நன்றி மறந்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தி வாழ வழி காட்டும் அற்புத சக்கரம் இதுவே.
.....ஆதிசேஷ அருட் கொடை என்ற இனிய நாமத்துடன் திகழ்வதே சிதம்பர நடராஜ கோயில் ஸ்ரீசக்கரமாகும்.
எத்தனையோ பெண்கள் திருமண வயதைத் தாண்டியும் திருமணமாகாமல் வேதனை கடலில் மூழ்கி உள்ளார்கள். திருமணமான பெண்களும் புகுந்த வீட்டு உறவு முறைகளாலும், சந்தேகம், நோய் போன்ற தாக்கங்களாலும் பலவிதமான மன, உடல் வேதனைகளை சுமந்து வாழ்கிறார்கள்.
இவர்கள் வேதனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் அன்புமயமான திருமண வாழ்க்கையை உருவாக்கவும் ஆதிசங்கர பகவான்
..... திருவிடை மருதூர் திருத்தலத்தில்
....மேரு ஸ்ரீசக்கரத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.
..... இது ஜீவ ஐக்ய மங்கள ஸ்ரீசக்கரம் என்று வழங்கப்படும்.
மார்பக பிரச்சினையால்
குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட தயங்குகிறார்கள். இவ்வாறு கலியில் தோன்றிய சீர்கேடான நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்றும் சேவையாக
....தாயுமான சுகசித்தர் மணப்பாறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயத்தில் #தன ஸ்ரீசக்கரத்தை நிர்மாணித்துள்ளார்.
மணப்பாறையிலிருந்து
உலக உருண்டையின் மறு பக்கத்திற்கு சென்றால் நீங்கள் அடையக் கூடியது அமெரிக்காவில் உள்ள ஓரிகான் ஏரிப் பகுதி
. இங்கும் ஓர் அற்புத ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது.
...... #வராஹ #பிருத்வி ஸ்ரீசக்கரம் என்றழைக்கப்படும்
இந்தச் சக்கரம் எத்தனையோ வாஸ்து தோஷங்களை நிவர்த்தி செய்யும் வாஸ்து சக்திகளுடன் பொலிகின்றது.
அதே போல ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் இரவு பகல் என்றில்லாமல் எந்நேரமும் நீராடக் கூடிய கடற் கரைப் பகுதியில்
.... மகரிஷி மேரு ஜ்வாலா என்ற அற்புத ஸ்ரீசக்கரத்தை நிர்மாணித்துள்ளார்
. கோடிக் கணக்கான மக்கள் இது வரை ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் நீராடி இருந்தாலும் இன்றும் இங்கு நீராடும் மக்கள் உடல் மன உற்சாகத்தையும் ஆன்மீகப் புத்துணர்ச்சியையும் பெறுவதற்குக் காரணம் இந்த மேரு ஜ்வாலா சக்கரத்தின் ஆன்மீக அருட் சுடர்களே.
இவ்வாறு எத்தனையோ திருத்தலங்களில் அற்புதமாக ஸ்ரீசக்கரங்களை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர் தன்து உத்தம சீடரை அனுப்பி
...... ராச்சாண்டார் மலையில் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார் என்றால் அதன் பின்னால் உள்ள ஆன்மீக இரகசியம் மிகவும் சுவையாகத்தானே இருக்கும் ?
தோடகச்சாரியார் இத்தலத்தில்
.....நிதம்ப நிஷ்கண்ட ஸ்ரீசக்கரத்தை சூட்சுமமாகப் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இந்த சூட்சும சக்கரத்தை தரிசனம் செய்யும் ஆன்மீக சக்தியைப் பெற்றவர்கள் வெகு சிலரே. அதில் ஒருவரே சேஷாத்ரி சுவாமிகள் ஆவார்.
இந்த அற்புத ஸ்ரீசக்கரத்தை தோடகச்சாரியர் பிரதிஷ்டை செய்வதற்காக இரண்டு வருட காலம் இத்தல
....விஸ்வ சிலா பாறைகளின் மீது தோடக முகூர்த்த காலத்தில் ஒரே காலில் நின்று தவமியற்றினார்.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...