Friday, September 30, 2022

தன்னடக்கம், பணிவு, பெருந்தன்மை.

 "எஸ்.பி.பியிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என எதைச் சொல்வீர்கள் ?"

இந்தக் கேள்வியை சித்ராவிடம் கேட்ட போது, அதற்கு அவர் சொன்ன பதில்.
"கூட வேலை செய்பவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருப்பார் எஸ்.பி.பி. சார்.
வெளிநாடுகளில் சில நாட்கள் இசை நிகழ்ச்சிகள் நடக்கும்போது, ஓய்வுக்கான நேரம் குறைவாகவே இருக்கும். எங்களை விட, கூட வரும் இசைக் கலைஞர்களது வேலை இன்னும் அதிகமாக இருக்கும். நிகழ்ச்சி அரங்கில் முதலில் நுழைபவர்களும் கடைசியாக வெளியேறுபவர்களும் அவர்கள்தான்.
ஒருமுறை, எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அறைக்கு செல்லும்போது, பாடகர்களை முதலில் அறைக்கு செல்ல சொன்னார்கள்.
இசைக் கலைஞர்களுக்கான அறை தயாராகவில்லை.
அப்போது நள்ளிரவு 12 மணி.
பாலு சாரிடம் 'நீங்கள் வேண்டுமானால் உங்கள் அறைக்கு போகலாமே சார்' என்று சொன்னார்கள்.
ஆனால், அவர் உறுதியாக மறுத்துவிட்டார்.
இசைக் கலைஞர்களுக்கான அறை தயாரான பிறகுதான் என்னுடைய அறைக்கு செல்வேன் என அங்கேயே அவர்களுக்கு அறை தயாராகும்வரை காத்திருந்தார். எந்த ஒரு பெரிய பாடகரும் இவ்வளவு மனிதாபிமானத்தோடு இருப்பார்களா என எனக்குத் தெரியவில்லை.
இப்படி எஸ்.பி.பி.சாரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கின்றன."
சித்ரா கற்றுக் கொண்ட விஷயம் அது.
எஸ்.பி.பி. அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட விஷயம்
தன்னடக்கம், பணிவு, பெருந்தன்மை.
எந்த ஒரு மேடையிலும்
எஸ்.பி.பி. அவர்களிடம், கர்வத்தை நான் கண்டதே இல்லை.
அது என்னவோ,
எஸ்பிபி என்றாலே
தானாகவே நினைவுக்கு வந்து,
தாலாட்டாக நெஞ்சில் ஒலிக்கிறது இந்தப் பாடல் !
"போகும் பாதை தூரமே
வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமணமே... ஹோ..."
எஸ்.பி.பி பற்றிய நினைவுகள்...
அது என்றென்றும் நிலைத்திருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...