Wednesday, September 28, 2022

மானத்தை வாங்கிய பஞ்சாப் முதல்வர்!

  'ஆம் ஆத்மி' கட்சியைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மது குடித்து விட்டு பொற்கோவிலுக்குள் நுழைந்ததாக முதலில் குற்றச்சாட்டு கூறப்பட்டது. பின், அவரது வீட்டு குப்பை கழிவுகளை தெருவில் போட்டதால், மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது, இரண்டாவது குற்றச்சாட்டு. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், குடித்து விட்டு முழு போதையில் தள்ளாடியபடி, விமானத்தில் பயணிக்க இருந்த இவர், சக பயணியரின் வற்புறுத்தலால், விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டார் என, எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல மூன்றாவது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இவரின் அநாகரிக செயல், ஆம் ஆத்மி கட்சி, அவரை முதல்வராக்கிய கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இவருக்கு ஓட்டு போட்ட பஞ்சாப் மக்களுக்கு மட்டுமின்றி, நாட்டிற்கே பெருத்த அவமானம் மற்றும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதும் கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், 'எதிரிகள் எங்களை புதைக்க நினைத்தனர். அவர்களுக்குத் தெரியாது... நாங்கள் விதைகள் என்று' என கர்ஜித்தார். ஆனால், ஆம் ஆத்மியை வரும் தேர்தல்களில் தோற்கடிக்க, அக்கட்சியை குழி தோண்டி புதைக்க எதிரிகளே தேவையில்லை; பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஒருவரே போதும். பகவந்த் மான், சினிமாவில் வேண்டுமானால் காமெடி நடிகராக இருக்கலாம். ஆனால், அரசியலில் இவர் கெஜ்ரிவாலுக்கு வில்லனாக மாறுவது நிச்சயம். இவரை, பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கி, வேறு ஒரு நல்ல நபரை முதல்வர் பதவியில் அமர்த்த, கெஜ்ரிவால் தைரியமாக முன்வர வேண்டும்.

இல்லையெனில், வரும் சட்டசபை தேர்தல்களில், ஆம் ஆத்மி கட்சி மண்ணை கவ்வும் என்பது உறுதி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...