Thursday, September 29, 2022

கடைசியாக மீந்து போன சோப்பை என்ன செய்வீர்கள்? இப்படி செஞ்சு வச்சுக்கோங்க ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்!

 நம் உடலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க சோப்பு போட்டு குளிப்பது உண்டு. இந்த சோப்பு துண்டுகள் புதிதாக வாங்கும் போது நல்ல வாசமாகவும், போட்டவுடன் நிறைய நுரையும் வரும். ஆனால் சோப்பு கட்டி கரைய கரைய கடைசியாக இருக்கும் துண்டுகளை பயன்படுத்த கூட முடியாது. சுத்தமாக அதிலிருந்து நுரை வரவே செய்யாது. இதை பெரும்பாலும் தூக்கி குப்பையில் தான் எரிவது வழக்கம் ஆனால் இந்த சோப்பு துண்டுகளை வைத்து என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். சோப்பு கட்டிகளில் பல வகைகள் உண்டு. உடலுக்கு பயன்படுத்தும் சோப்பு கட்டிகள் வேறு, மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் சோப்பு கட்டிகள் வேறு அது மட்டுமல்லாமல் துணி துவைக்கும் சோப்பு, பாத்திரம் கழுவ பயன்படுத்தும் சோப்பு என்று விதவிதமான சோப்பு வகைகள் வேறு நம் வீட்டில் கொட்டி கிடக்கும். இப்படி கிடக்கும் சோப்புகளை வீணாக்காமல் இது போல செய்யலாம்.  முதலில் உடலுக்கு பயன்படுத்தும் சோப்பு கட்டிகளை சிறுசிறு துண்டுகளாக சேகரித்து வாருங்கள். நாலைந்து சோப்பு கட்டிகள் சேர்ந்தவுடன் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து உருக்குங்கள். மிதமான தீயில் வைத்து உருக்க வேண்டும். சோப்பு கட்டி உருகி கரைந்து நீர்க்க நீர்த்து போனதும் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த சோப்பு கலவை சூடாக இருக்கும் பொழுதே ஒரு A4 சீட் பேப்பர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் டூத் பிரஷ் அல்லது பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் பழைய பிரஸ் ஏதாவது இருந்தால் அதில் இந்த கலவையை தொட்டு ஏ4 சீட்டுக்கு முன்புறமும், பின்புறமும் நன்கு தடவி காய விட்டு விடுங்கள். நன்கு திக்கான லேயராக தடவி விடுங்கள். இந்த பேப்பர் நன்கு காய்ந்ததும் ஆறு, ஏழு துண்டுகளாக சதுர வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளுங்கள். வெளியிடங்களில் பயணிக்கும் பொழுது திடீரென கை கழுவ வேண்டும் என்றால், இந்த துண்டு பேப்பர் ஒன்றை எடுத்து லேசாக தண்ணீர் ஊற்றி கழுவினால் போதும், கை சுத்தம் ஆகிவிடும். இன்ஸ்டன்ட் ஹாண்ட் வாஷ் போல இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போல துணி துவைக்க பயன்படுத்தும் சோப்பு கட்டிகள் மீந்து போனால், அதை நீங்கள் பாத்திரம் கழுவ பயன்படுத்திக் கொள்ளலாம், வீணாகி போகாது, அப்படி இல்லை என்றால் துணி துவைக்கும் சோப்பு கட்டிகள் உடன் மீந்து போன பாத்திரம் கழுவ பயன்படுத்தும் சோப்புகளும் இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நான்கைந்து கட்டிகள் சேர்ந்ததும், இதையும் அடுப்பில் வைத்து உருக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உருக்கிய இந்த கலவையை ஐஸ் ட்ரே அல்லது குல்பி மோடு போன்றவற்றில் ஊற்றி காற்றில் வைத்து விட்டால் கெட்டியாகிவிடும். அதன் பிறகு இதை தட்டினால் சோப்பு கட்டிகள் புதிது போல தயாராகி விட்டிருக்கும். இதை மீண்டும் எடுத்து பாத்திரம் தேய்க்க நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இனி சோப்பு கட்டிகள் மீந்து போனால் தூக்கி போடாதீங்க, இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க யூஸ்புல்லா இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...