Tuesday, September 27, 2022

எங்கேயும்..எப்போதும்..எஸ்.பி.பியே.,

 இந்தக்காலத்தில் ஒரு இசைக்கச்சரேிக்கு அதுவும் முழுமையான வீணை இசைக்கச்சேரிக்கு அரங்கம் நிறையும் அளவிற்கு ரசிகர்கள் வருவார்களா? என்றால் வந்திருந்தனர்.

இரண்டு காரணங்கள் ஒன்று வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யா தன் வீணையால் நிகழ்த்தப்போகும் மாயஜாலங்களை காண, இரண்டாவது தனது திறமை முழுமையையும் தனக்கு பிரியமான மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடல்களாக பாடி அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்ப்பதாக சொன்னது.
‛பாடும் நிலா பாலு‛ என்று மக்கள் கொண்டாடிய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இரண்டாவது ஆண்டு நினைவை போற்றும் வகையில் வீசை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யா ‛என் இதய வீணை' என்ற தலைப்பபில் பிரமாதமான வீணை இசைக்கச்சேரியை நிகழ்த்தினார்.


latest tamil news


கச்சேரியை பல விதமாக பிரித்துவைத்துக் கொண்டு நிகழ்ச்சியை சுவராசியம் குறையாமல் பார்த்துக் கொண்டார்.எஸ்.பி.பி.,யின் பாடல்கள்,எஸ்.பி.பி.,ரசித்து அடிக்கடி பாடும் பாடல்கள்,அவருக்கு பிடித்த பழைய பாடல்கள்,அவர் பாடிய பிற மொழி பாடல்கள் என்று நிறைய பாடல்களை தனது வீணையால் வாரிக்கொடுத்தார்.
நிகழ்ச்சியின் பின்பாதியில் ரசிகர்கள் விருப்பம் என்று ரசிகர்கள் கேட்ட பல பாடல்களை வீணையால் இசைத்தார் நிகழ்ச்சியின் நடுவில் எஸ்.பி.பிக்காக ஓரு நிமிடம் என்று அனைத்து ரசிகர்களின் மொபைல் போன் டார்ச்லைட்டையும் ஒளிரச்செய்து வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தினார்.
ஒரு கையால் வீணையை இசைத்து அசத்தினார்,தொன்னுாறுகளில் பாடிய குத்துப்பாட்டு கேட்போமா எனச்சொல்லி ‛சிங்காரி சரக்கு பாட்டில்' ஆரம்பித்து ‛எங்கேயும் எப்போதும்' வரை என்று வீணையில் தனி தர்பாரே நடத்தினார்.


latest tamil news


நாளை திங்கள் கிழமை எழுந்து போற ஐடியாவே இல்லையா என்று கேட்டுவிட்டு மேலும் ஒரு ‛பினாலே' என்று சொல்லிவிட்டு மிகப்பிரமாதமாக ஒட்டுமொத்த திறமையையும் வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சி முடிந்த ரசிகர்கள் கைதட்டலோடு வெளியே கிளம்பும் போது,‛ தென்றல் வந்து தீண்டும் போது என்ன இன்பமோ மனசில' என்ற ஒரு ஒரு பாடலை மட்டும் நாங்கள் கேட்டு நீங்கள் இசைக்கவில்லை என்று சொல்ல அடுத்த நொடியே அந்தப்பாடலையும் இசைத்து பாடலைக்கேட்ட ரசிகரை மட்டுமின்றி மொத்த ரசிகர்களையுமே மகிழ்ச்சியில் திளைக்கவைத்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...