Sunday, September 25, 2022

நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல!

 பாலின சமத்துவத்தை உருவாக்கவும், குழந்தை திருமணத்தை தடுக்கவும், உயர் கல்வியில் இடைநிற்றலை குறைக்கவும், வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவியருக்கு பொருளாதார ரீதியாக உதவவும் துவக்கப்பட்டது தான், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்.

இத்திட்டத்தில் பயன்பெற, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் ௨ வரை அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்று, தமிழக அரசு அறிவித்திருப்பது, திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைப்பதாக உள்ளது. இதனால், எந்த நோக்கத்திற்காக, இந்த திட்டம் உருவாக்கப்பட்டதோ, அது முழுமையாக நிறைவேறாது. அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரி விண்ணப்பித்த மாணவியரில், சில பிரிவினரை தேர்ந்தெடுத்து விட்டு, மற்றொரு பிரிவினரை வடிகட்டுவது, அதாவது, திட்டத்திலிருந்து விலக்குவது, மாணவியர் இடையே ஏற்றத்தாழ்வையும், பாகுபாட்டையும் உருவாக்கும்.

சத்துணவு, சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள் என, எந்த இலவசமாக இருந்தாலும், பாகுபாடு எதுவும் இன்றி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கி வருவது போல, இந்த உதவித் தொகையையும், அனைத்து மாணவியருக்கும் கிடைக்கச் செய்வதே முறையாகும். ஜாதி, மத, கட்சி வேறுபாடு இன்றி, டவுன் பஸ்களில் அனைத்து பெண்களும் இலவசமாக பயணிக்க அனுமதித்தது போல, அனைத்து மாணவியருக்கும், ௧,௦௦௦ ரூபாய் உதவித்தொகை வழங்குவதே சாலச் சிறந்தது. இதில், ஒரு பிரிவு மாணவியரை வடிகட்ட நினைப்பது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல. முதல்வரே உங்களின் முடிவை மாற்றுங்க!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...