Tuesday, September 27, 2022

யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள் .

 பாரதப் போர் முடிந்ததும் திரௌபதிக்கு தனக்கு மிகவும் வயதானதைப் போல உணர்ந்தாள்...

உடல் ரீதியாக
மற்றும் மன ரீதியாகவும் கூட அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி
விதவைகள் அதிகமாக இருந்தனர். ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர்.
அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி,
அஸ்தினாபுரம் அரண்மனையில் அசையாமல் வெற்றிடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஸ்ரீ கிருஷ்ணர் அறைக்குள் நுழைய திரௌபதி கிருஷ்ணரைப் பார்த்ததும் ஓடி வந்து அவரைச் சேவித்துக் கொண்டாள்...
கிருஷ்ணர் அவள் தலையைத் தடவிக் கொடுக்கிறார். அவளோ அழத்தொடங்கினாள். நேரம் மெல்ல நகருகிறது. அவளிடமிருந்து விலகி பக்கத்து படுக்கையில் உட்கார்ந்த கிருஷ்ணன் கேட்டார்.
திரௌபதி, என்ன நடந்துவிட்டது..
ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா!
கிருஷ்ணர்: விதி மிகவும் கொடூரமானது பாஞ்சாலி..
நாம் நினைப்பது போல் வேலை செய்யாது! அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது. முடிவுகளையும் மாற்றுகிறது.
நீ பழிவாங்க நினைத்தாய்... வெற்றி பெற்றாய் திரௌபதி! உன் பழிவாங்கல் முடிந்தது...
துரியோதனனும்துச்சாதனனும் மட்டுமல்ல, கௌரவர்கள் அனைவரும் மடிந்துவிட்டனர். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!",
திரௌபதி: "சகோதரா, என் காயங்களை ஆற்றவந்தீர்களா.. அல்லது அதன் மீது உப்புத் தூவ வந்தீர்களா?"
கிருஷ்ணர்: இல்லை, திரௌபதி... உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன்.
எல்லாம் நமது தொலைநோக்குப் பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன்.
திரௌபதி: அதனால் என்ன?
இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பு கிருஷ்ணா?
கிருஷ்ணர்: இல்லை திரௌபதி.. நீ மட்டுமே காரணம் என்று கருதாதே...
ஆனால், உன் செயல்களில் நீ கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்திருப்பாயேயானால், நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய்..
திரௌபதி: நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா?
கிருஷ்ணர் :
நீ நிறைய செய்திருக்க முடியும் பாஞ்சாலி.
உனது சுயம்வரம் நடந்தபோது கர்ணனை அப்படி அவமானப்படுத்தாமல், போட்டியில் கலந்து கொள்ள அவருக்கும் வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்கக் கூடும்!
அதற்குப் பிறகு குந்தி உன்னை ஐந்து கணவர் களுக்கு மனைவியாகும்படி கட்டளையிட்டதை... அப்போது ஏற்றுக் கொள்ளாதிருந்தாலும் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும்.
அதற்குப் பிறகு உன் அரண்மனையில் துரியோதனனை அவமானப்படுத்தினாய்... பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று. அவ்வாறு நீ சொல்லாதிருந் திருந்தால், நீ மானபங்கப்பட்டிருக்க மாட்டாய்...
அப்போதும், ஒருவேளை, சூழ்நிலைகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.
"நம் வார்த்தைகள் கூட விளைவுகளுக்குப் பொறுப்பு திரௌபதி..."
"நீ பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுதல் மிகவும் முக்கிய மானது"...
இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டு மல்ல, உனது சுற்றுப்புறத் தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்..
பற்களில் விஷமில்லாமலேயே பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே இனம் இவ்வுலகில் மனிதன் மட்டுமே...
எனவே, வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். அதாவது,
யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்
ஏனென்றால் மகாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.
May be an image of 2 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...