Friday, February 10, 2023

மடத்தமிழ் மக்களே! உண்மையை 60 ஆண்டுகள் கழித்து இப்பவாவது உணருங்க!!

 கலைஞர் நினைவாக கடலுக்குள் பேனா சிலை அமைப்பதற்கு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பல கட்சிகள் தங்களது ஆதரவினை வழங்கியுள்ளதோடு, மக்களின் ஆதரவை பெற்று அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் எந்தவிதமான நியாயத்தையும் காண முடியவில்லை.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய பணிகளுக்காக நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று அவரது வாரிசுகள் விரும்பினால் தாராளமாக
அவர்களது சொந்த செலவில், கலைஞர் வாழ்ந்த இல்லத்தில் ஒன்றினை நினைவகமாக மாற்றி கொள்ளலாம்.
அல்லது அரசு சார்பில், மக்கள் வரிப்பணத்தில் தான் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்
ஏற்கனவே கலைஞரின் சமாதியை அமைக்க மெரினாவில் பெரும் நிலத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் பயன்படுத்தி கொண்டது போல
பரந்து விரிந்துள்ள தமிழகத்தின் ஏதாவது ஓர் பகுதியை தேர்ந்தெடுத்து, எந்தவிதமான தடைகளும் எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றி இருக்கலாம்.
ஆனால் கலைஞருக்கு கடலுக்குள் தான் நினைவு சின்னத்தை அமைப்போம் என்றால் அதற்கான நியாயமான காரணங்களையும், என்ன மாதிரியான - யாரும் செய்யாத அரிய பெரிய விஷயங்களை அவர் சாதித்தார் என்பதனையும் தமிழக அரசு விளக்கம் தரவேண்டியது மிகவும் அவசியம்.
ஏனெனில் ஒரு அரசியல்வாதியாக தனது அரும்பெரும் செயல்களால் மக்களின் பேராதரவினை பெற்றிருந்தார் என்பது உண்மையாக இருந்தால், ஒருமுறையேனும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பினை மக்கள் தந்திருப்பார்கள். ஆனால் அப்படி ஒரு போதும் நடக்கவில்லை.
மிகப்பெரிய அளவில் எழுத்துலகில் அல்லது கலையுலகில் புரட்சி செய்திருக்கிறாரா என்றால்
அவரை விஞ்சியும் சாதனைகளை செய்தவர்கள் ஏராளம்.
விஷயம் இப்படி இருக்கையில்,
கடலுக்குள் நினைவு சின்னம் அமைக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதற்கு ஏதாவது ஒரு சிறப்பான காரணமாவது இருந்தே ஆக வேண்டும்.
அப்படி கலைஞர் பற்றிய சிறப்புகளை மக்களிடம் எடுத்து சொல்லி, தமிழக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி அதில் ஏகோபித்த ஆதரவு இருந்தால் மட்டுமே கடலுக்குள் கால் வைக்க வேண்டும்.
ஆனால் மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக மட்டுமே,
திமுக தங்களது தலைவருக்கு கடலுக்குள் நினைவு சின்னம் அமைப்போம் என்ற நிலைப்பாட்டினை எடுத்தால் மக்களும் பிற அரசியல் கட்சிகளும் அதை கண்டிப்பாக எதிர்த்து தடுக்க குரல் கொடுக்க வேண்டும்.
இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அல்ல.
வாய்ப்பு கிடைத்திருந்தால் எல்லோரும் செய்திருக்க கூடிய இயல்பான பணிகள், துறை ரீதியாக ஏராளமானோர் எண்ணற்ற விஷயங்களை சாதித்திருப்பது போன்ற சராசரி செயல்பாடுகளை செய்து முடித்த ஒரு தலைவருக்கு, அவரின் வாரிசுகள், தொண்டர்களின் விருப்பப்படி ஊருக்குள் எங்கே வேண்டும் என்றாலும் நினைவு சின்னம் அமைத்துக் கொள்ளட்டும், அதை எதிர்க்க எவரும் வரப்போவதில்லை.
ஆனால்
வழக்கத்திற்கு மாறான, சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்ட மிகப்பெரிய கௌரவத்தை ஒரு தனி மனிதருக்கு ஓர் அரசாங்கம் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தால்
அதற்கான காரண காரியங்கள், அவர் பணியாற்றிய காலத்தில் நிலவிய அசாதாரண சூழல், கடினமான காலகட்டத்தில் அவர் செய்த தனித்துவம் வாய்ந்த, யாரும் செய்திருக்க முடியாத செயல்கள் என பல்வேறு காரணிகள் நியாயம் சேர்ப்பவையாக இருக்க வேண்டும்.
உலகில் அமைக்கப் பெற்றுள்ள பிரமாண்ட சிலைகளின், நினைவு சின்னங்களினுடைய வரலாறுகளை புரட்டி பாருங்கள். உங்களுக்கு உடன்பாடு இருந்தால் ஆதரியுங்கள்.

நினைவுச் சின்னம் வித்தியாசமாக இருக்க வேண்டும் அது அரசு செலவில் இருக்க வேண்டுமென்ற திமுக தலைவர்களின் விருப்பம் திட்டமிட்ட யுக்திாகும். பிற்கால சந்ததிகளின் மனதில் கருணாநிதியைப் பற்றி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே இந்த திட்டம்.
கோபாலபுரத்தின் அடுத்த வாரிசுகளுக்கு அரசியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்ள இது உதவும்.
இதை கட்சிப் பணத்தில் வேறொரு இடத்தில் வைத்தால் பெரிய தாக்கம் இருக்காது என்பது திமுகவின் முதல் குடும்பத்திற்குத தெரியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...