Wednesday, February 22, 2023

அதற்காக விலகிவிட முடியுமா.

 ஒரு பிராமணப் பையன் அந்நிய ஜாதியில் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவர் பித்ரு காரியங்களுக்கு செய்ய அனுமதி உண்டா. இதற்கு பலபேர் தற்கால நிலையை கருத்தில் கொண்டு முடியும் என்று சொல்கிறார்கள். இது மனித நேயத்தின் அடிப்படையில் சொல்லப் படுவது. அவர்களை பொருத்தவரை அது சரி.

இப்பொழுது நாம் தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். பிராமணனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தர்ம சாஸ்திரம் வாழ்க்கைமுறை அடிப்படை. அதனால் நாம் அதை கூடுமானவரை பெரும்பகுதி பின்பற்றவேண்டும் நமக்காக உள்ள சட்டத்தை நாம் மதிக்காவிட்டால் யார் மதிப்பார்கள்?? தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றால் ஒரு பிராமணப் பையன் உபநயனம் எல்லாம் செய்யப்பட்டு ஒரு அந்நிய ஜாதி பெண்ணை திருமணம் செய்யும் பொழுது அந்த பிராமணன் இடத்தில் உள்ள அக்கினி அவனை விட்டு விலகிவிடுகிறது. பிறப்பிலேயே பிராமணனுக்கு மட்டுமே பிறப்பிலிருந்து இறப்பு வரை அக்னி அவன் கூடவே இருக்கிறது. அப்படி அக்னி விலகி விட்டால் அவன் ஔபாசன அக்னி மற்றும் பலவிதமான யாக செயல்கள் செய்வதிலிருந்து விலக்கி வைக்க படுகிறான். அதனால் அக்னி இல்லாமல் எந்த ஒரு பித்ரு காரியமும் செய்யவே முடியாது . அதனால் தர்ம சாஸ்திரம் மிகவும் தெளிவாக என்ன சொல்கிறது என்றால் அந்தப் பையன் எந்தவிதமான பித்ரு காரியம் செய்வதற்கும் கடுகளவு கூட அருகதை இல்லை அது இறப்பில் ஆரம்பித்து எந்த ஒரு பித்ரு காரியமும் செய்வதற்கு அவனுக்கு அடிப்படை தகுதி இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக சொல்கிறது நாம் நம்முடைய சூழ்நிலைக்கு தகுந்தபடி பல்வேறு சப்பைக்கட்டு விதண்டாவாதம் களை சொல்லலாம் ஆனால் தர்ம சாஸ்திரப்படி என்று பார்த்தால் அதற்கு வழி இல்லை அப்படி அந்தப் பையன் பித்ரு காரியம் செய்தால் பித்ருக்கள் ஒருநாளும் அவனால் கொடுக்கப்படும் பிண்ட அர்க்கிய இத்யாதிகளை ஏற்றுக்கொள்ள வரமாட்டார்கள். அவன் எவ்வளவு செலவு செய்து பித்ரு காரியங்கள் செய்தாலும் அது செய்யாததற்கு சமம். நம் மன திருப்தி என்று சாஸ்திர அங்கீகாரம் இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு கர்மாவும் அதற்கு உண்டான பலனை கொடுக்காது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நிறைய பேர் சொல்கிறார்கள் என் தாய் தந்தை நான் எப்படி செய்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்று. அவர்கள் உயிரோடு இருக்கும் வரை அது சரி. அவர்கள் இறந்து பித்ரு என்கிற ஒரு ஸ்தானத்தை அடையும்போது அவர்கள் இந்த மனிதாபிமான அடிப்படைகள் எதுவுமே அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. விதிப்படி இருக்கிறதா என்று மட்டுமே பித்ருக்கள் சீர்தூக்கி பார்த்து அதற்குண்டான பலாபலன்களை செய்வார்கள். தர்ம சாஸ்திரம் பித்ருக்கள் தங்கள் சந்ததிகள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிராக செய்யும் எந்த ஒரு செயலையும் பார்த்து பெருமூச்சு விட்டா லெயே குடும்பம் பலவித இன்னல்களை அனுபவிக்கும் என்று தர்ம சாஸ்திரம் தெளிவாக சொல்கிறது அதனால் அந்தக் கேள்விக்கு இதுவே உறுதியான விடை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...