Wednesday, February 8, 2023

பிராமண சமூகம்.

 எப்பவுமே எனக்கு இந்த பிராமண சமூகத்துமேல ஒரு பிரம்மிப்பும், ஆச்சர்யமும் இருந்துகிட்டே இருக்கும். கடந்த ரெண்டுமூணு தலைமுறையா, திராவிடம் ன்ற பேர்ல அவங்கள ஒதுக்கி, ஒடுக்கி, நசுக்கி, கேவலப்படுத்தி, அரசாங்கத்தோட எந்த உதவியும் இல்லாம பண்ணி, ஓடஓட விரட்டியும் கூட... தோற்கடிக்கவே முடியாத, 'படிப்பு' ன்ற பிரம்மாஸ்திர ஆயுதத்த கையிலெடுத்து இன்னைக்கு பெரும்பாலான பிராமணர்கள், வெற்றிக்கோட்டை எட்டினது மிகப்பெரிய ஆச்சர்யம்னாலும் கூட, அவங்களோட குழந்தை வளர்ப்பு முறைதான், என்னை அசத்திய மிகப்பெரிய ஆச்சர்யம்.

எங்க ஏரியால வந்து பாருங்க... SC-லிருந்து FC-வரைக்கும், ஏழைவீட்டு பசங்கள்லிருந்து பணக்கார வீட்டுபசங்க வரைக்கும், 10/12 வயசுலிருந்து, 20/22 வயசு வரைக்கும்... 60 to 80 சதவீதம் பேர் கெட்டு குட்டிச் சுவரா திரியுறாங்க. சிகரெட், தண்ணி, சிலபேர் கஞ்சான்னு.. அத்தனை கெட்ட பழக்கங்களும் இருக்கு. அத்தனை பேர்ட்டையும் 1 to 2 லட்சரூபா பைக் & ஆண்ட்ராய்டு போன் இருக்கும். கொஞ்சம்கூட பெரியவங்க மேல மரியாதையோ, பயமோ கிடையாது. பப்ளிக்கா சிகரெட் பிடிக்கறாங்க. ராத்திரி பதினோரு மணிக்கு மேலதான் வீட்டுக்கே போறாங்க. அதுவும் சனிக்கிழமைன்னா... சுத்தம். எத்தனை மணிக்கு போறாங்க, இல்ல வீட்டுக்கு போறாங்களான்னே தெரியாது. இந்த கூட்டத்துல சல்லடபோட்டு தேடிப் பாத்தாலும், ஒரேவொரு பிராமண பையனகூட பாக்க முடியாது.
அவங்க குழந்தைகள வளர்க்குற அந்த நேர்த்தி, குழந்தைகள மோல்ட் பண்ணுற அந்த கைப்பக்குவம்... வேற எந்த சமூகத்துக்கும் வராது. பிராமணர்கள் மட்டுமே லாவகமா கையாளுற மிகஅழகானக் கலை. இப்ப மத்த குழந்தைகள் படிக்குற அதே பள்ளி கூடங்கள்லதான பிராமண குழந்தைகளும் படிக்கிறாங்க. அப்படி இருக்கும் போது... ஒரே வயசுல இருக்குற மத்த பசங்கள கவனிச்சு பாருங்க. 'அப்பாவுக்கு சம்பளம் கம்மி, வீட்ல கஷ்ட ஜீவனம், அப்படி இருக்கும் போது பணத்துக்கு எங்கபோறது' ன்றத பத்தியெல்லாம் யோசிக்காம தன் வசதிக்கு சம்மந்தமே இல்லாத, வசதி வாய்ப்புகளுக்கு கூட ஆசைப் படுவாங்க. அதை அடைய, எந்த எல்லைக்கும் போகத் துணிவான். ஆனா பிராமண பசங்கள நல்லா கவனிச்சு பாருங்க, தன்குடும்ப சக்திக்கு மீறின விஷயங்களுக்கோ, தனக்கு தேவையில்லாத விஷயங் களுக்கோ ஆசைப்படமாட்டாங்க.
முக்கியமா... ஒழுக்கம், பக்தி, நேர்மை, மரியாதை, கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை, எளிமை, பாசம், சிக்கனம், சுத்தம்... இதெல்லாமே சின்ன வயசிலிருந்தே பழக்கப் படுத்தப்பட்டிருக்கும். மிகமுக்கியமா மத்த பசங்கமாதிரி, 'Updated Society-ல கலக்கலேன்னா நம்மள ஒதுக்கிடுவாங்க' ன்ற பேர்ல, பேண்ட் சட்டைய கழட்டிட்டு... ரோட்ல பனியன் ஜட்டியோட அலைய மாட்டாங்க. எனக்கு தெரிஞ்சு இந்தியால, பிராமணர்கள் அளவுக்கு Updated version-ஸ் பத்தி, மத்த சமூகத்துகாரங்க தெரிஞ்சு வெச்சிருப்பாங்களானு தெரியல. ஆனா பிராமணர்கள், மொத்தமா பழசத் தூக்கி போட்டுட்டு, புதுசுக்கு பின்னாடி ஓடமாட்டாங்க. பொம்பளங்க பொட்டு வெக்குறத கேலிபேசுற இந்த காலத்துலயும் கூட... நெத்தில திருநாமம், திருநீறு வெச்சுட்டு ஸ்கூலுக்கு போற பிராமணப் பசங்கள, இன்னைக்கும் பாக்கலாம். எந்த கேலி, கிண்டலும் அவங்கள பாதிக்காது. பைக் வாங்கி தரலேன்னு தற்கொலை பண்ணிக்குற மத்த பசங்களுக்கும், குடுமி வெச்சு குருகுலத்துல படிக்குற பிராமண பசங்களுக்கும், நிச்சயம் மனோரீதியான வேறுபாடு இருக்குசார். இதெல்லாமே அசாத்தியம்தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...