Wednesday, February 22, 2023

சிவராத்திரி #மகாசிவராத்திரி .

வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும் போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது “சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக் கொள். சுடுகாட்டுச் சாம்பலை வைத்து‌ அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறி விட்டான். இறை வழிபாடுஎன்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஒரு நாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது. சிவலிங்கத்துக்கு அபிஷேகம்செய்யச் சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் வறட்டிகளை அடுக்கித் தீயை மூட்டி விட்டுத் தனது மனைவியிடம், “நான் இந்தத் தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்” என்று கூறினான். ஆனால் மனைவியோ ”நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்குவரும் பிணங்கள் சீரழிந்து விடும், நானே தீயில் குதிக்கின்றேன்” என்று கூறிக் கொண்டே தீயில் வீழ்ந்தாள்.
இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன் பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை உயிர்ப்பித்து இருவரையும் முக்தி அடைய வைத்தார். இதைக் கேட்ட அரசனும் "தங்கத்தால் ஆன சிவலிங்கத்திற்குப்பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த எனக்குக் காட்சி தராத இறைவன், சுடுகாட்டுச் சாம்பலையும், பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு மோட்சம் அளித்துள்ளாரே" என்று வருந்தினாலும் #பக்தி என்பது ஆடம்பரத்தில் இல்லை, அன்பினால் தன்னையே அர்பணித்தலால் மட்டுமே மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்.
ஓம் நம சிவாய
साम्बो महादेव
சம்போ மஹாதேவா
Sambo Mahadeva
हर हर महादेव
ओम नमः शिवाय🙏🏻
No photo description available.
All re 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...