Wednesday, February 8, 2023

சலங்கை ஒலி(1983) .

 A film by k.vishwanath.

பல உணர்வு பூர்வமான காட்சிகளை மிக உன்னதமாக கூறிய படம்.
ஒரு பெண் நடனமாடியதை அனைவரும் பார்த்து பாராட்ட ஒருவர் மட்டும் அதில் இருக்கும் பல குறைகளை சுட்டி காட்டுகிறார், இதில் பலத்த அவமானம் அடையும் அந்த பெண் உனக்கு நடனத்தை பற்றி என்ன தெரியும் என்று கேட்க வரிசையாக ஒவ்வொரு நடன முத்திரையை ஆடி காட்டும் பாலு என்கிற பாலகிருஷ்ணன்.
இவ்வளவு திறமை இருந்தும் ஏன் ஒரு குடிகாரனாக இந்த கலைஞன் மாறினான்.
தன்னை ஏற்றி விட போகும் ஏணியை அதன் சொந்தகாரன் பாதியில் எடுத்து கொண்டு போனதன் விளைவாக இருக்கலாம், தான் நேசித்த தாய் இறந்த போது அந்த போட்டிக்கு போக முடியாமல் போனதன் விளைவாக இருக்கலாம், இந்த பரத நாட்டிய கலையை கமர்ஷியல் விஷயங்களுக்கு தான் அற்பனிக்க முடியாத நிலையில் இந்த சமுதாயம் பாலுவை ஒதுக்கியதன் விளைவாக கூட இருக்கலாம், கலைஞர்கள் ஆசை படுவது அரங்கத்தில் கிடைக்கும் அந்த பலத்த கரகோஷம் சத்தம் தான்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று பாலு குடித்து விட்டு இருப்பதனால் தன் நண்பன் வீட்டு உள்ளே வராமல் வாசலில் உட்கார்ந்து கொண்டு இருப்பார் பாலு, தன் நண்பன் ரகு எவ்வளவு சொல்லியும் உள்ளே வர மறுக்கும் பாலு, இதை புரிந்து கொண்ட நண்பனின் மனைவி தட்டில் தின்பண்டங்களை எடுத்து கொண்டு வாசலில் இருக்கும் பாலகிருஷ்ணனிடம் கொடுக்கும் காட்சி உன்னதம்.
மாதவிக்கும், பாலுவுக்கும் நட்பு ஏற்படுத்தும் காட்சி அட்டகாசம், தான் நடனம் ஆடுவதை புகைப்படமாக எடுக்க சொல்லி அந்த சிறுவன் சொதப்பி விட மன வருத்தத்தில் இருக்கும் பாலுவிடம் மாதவி ஒரு கவரை நீட்ட அதை திறந்து பார்க்கும் பாலுவுக்கு பேரானந்தம் ஒவ்வொரு நடன அசைவுகளை மாதவி புகைப்படமாக எடுத்து இருப்பதை கண்டு கண்கலங்கி நிற்கும் பாலு அந்த நிமிடத்தில் மாதவியை தன் மனதில் மிக பெரிய சிம்மாசனத்தை போட்டுவிட்டான்.
ஆல் இந்தியா பரத நடன போட்டிக்கு போக வேண்டும் என்ற ஆசையில் தவித்து கொண்டு இருக்கும் பாலுவுக்கு, மாதவி ஒரு அழைப்பு இதழை தருகிறாள் அதை வாங்கி பார்க்கும் பாலு வியந்து பார்த்து கொண்டே ஒவ்வொரு பக்கங்களில் இருக்கும் நடன ஜாம்பவான்களை பற்றி புகழ்ந்து கொண்டே பக்கங்களை திருப்பி கொண்டு இருக்கும் போது பாலகிருஷ்ணன் என்று தன் புகைப்படத்தை பார்க்கும் போது கமல்ஹாசன் என்ற அற்புதமான கலைஞனின் நடிப்பை என்னவென்று சொல்வது கண்கலங்கிய நிலையில் வாய் பேச முடியாமல் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போன நிலையில் மாதவி சொல்கிறாள் இவரும் பெரிய கலைஞர் தான் சார் என்று உடனே பதிலுக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக மாதவி கையில் முத்தம் தரும் காட்சி உன்னதம்.
தான் உயிருக்கும் மேலாக நேசிக்கும் மாதவியின் கணவர் வருகையும் அதன் தொடர்ச்சியாக இருவரையும் சேர்த்து வைத்து தனக்குள் இருக்கும் ஆசையை இரயில் நிலையத்தில் இருவரும் மாறி மாறி தங்கள் அன்பை வெளிப்படுத்தும் காட்சி அற்புதம், மாதவி சற்று குற்ற உணர்ச்சியில் பாலுவை கையெடுத்து கும்பிட்டு தாட்டா காட்டும் காட்சியில் கமல்ஹாசன் அவர்கள் அதற்கு தரும் ரியாக்ஷன் செம்ம, இன்டர் கட் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் மாதவி மற்றும் அவள் கணவரை ஒன்றாக நிற்க வைத்து புகைப்படம் எடுக்க பாலு ஆசை படுவார் இருவரும் ஒன்றாக நிற்கும் போது இன்டர் கட் ஷாட்டில் பாலு மாதவி புகைப்படம் எடுக்கும் போது பக்கத்தில் எனக்கு ஒரு இடம் விட்டுவெயங்க என்று சொல்லும் காட்சியை பயன்படுத்தி இருப்பார்கள் 🎩off to k. Vishwanath sir.
குடிகார பாலுவை மீட்டெடுக்க மாதவியின் முயற்சிக்கு நண்பன் ரகு மற்றும் அவரது மனைவி பாலுவை மாதவி இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள், தன் கணவர் இறந்த செய்தி பாலுவுக்கு தெரிந்தால் உடல் நிலை இன்னும் மோசமாக போகும் என்ற காரணத்தால் மாதவி பாலு கண்ணில் படாமல் இருக்க, பாலு குடித்து விட்டு தகிட ததிமி என்று கிணற்றில் மீது ஏறி ஆட வேறு வழி தெரியாமல் மாதவி குங்குமம் வைத்து கொண்டு கொட்டும் மழையில் பாலு முன் வந்து நிற்க பாலு ஒரு தேவதையை பார்த்து ஆச்சரியத்தில் அதிர்ந்து போன நிலையில் அப்படியே பார்க்க ஆஆஆஆ என்று இளையராஜா அவர்கள் ஒரு இசை ராஜாங்கத்தையே பின்னணியாக ஒலிக்க செய்து இருப்பார், மாதவியின் நெற்றி பொட்டு மழையில் அழிய அதை அழியாமல் தன் கைகளை கொண்டு மறைக்கும் போது கமல்ஹாசன் நடிப்பும், இளையராஜா இசையும் அந்த காட்சியை எங்கோ தூக்கி சென்று விட்டது.
மாதவி மகளை தான் திட்டி விமர்சனம் எழுதியது என்று தெரிந்து அதை சமாளிக்க, குழந்தை அவளுக்கு என்ன தெரியும் சொல்லி கொடுத்தத ஆடுறா மத்தபடி அந்த முத்திரை எல்லாம் சரியா பன்னா என்று சமாளிக்கும் காட்சி உன்னதம் இந்த படத்தை ரீமேக் செய்ய எவராலும் முடியாது.
படத்தின் இறுதி காட்சியில் பாலுவுக்கு அனைத்து திறமைகள் இருந்தும் மேடை ஏறி ஒரு கைதட்டல் கூட வாங்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கும் பாலுவுக்கு அந்த நடன மேடையில் அரங்கில் இருக்கும் அனைவரும் கரகோஷம் எழுப்பும் போது பாலு ஆனந்த தாண்டவம் பரவச நிலையில் தன் கைகளை உயர்த்தி இன்னும் தட்டுங்கள் என்று சைகை காட்டுவார் கலைஞர்களுக்கு கைதட்டல் மிக முக்கியமான ஒன்று.
மாதவி மகள் மேடையில் ஆடும் போது பாலுவுக்கு தான் ஆடுவது போல இருக்கும் இளமையான பாலு ஆடுவது போல காட்சிகளை அமைத்திருந்தார் k. விஸ்வநாத் அவர்கள்.
தன் பரத கலையை தான் நேசித்த ,தாயாக மதிக்கும் மாதவி மகளுக்கு அளித்து விட்டு விடை பெறுகிறார் பாலு.
இந்த படத்தை இன்னும் பார்க்காமல் இருப்பவர்கள் அவசியம் பார்த்து விடுங்கள் ஒரு உன்னதமான படைப்பு
K. Vishwanath சார் இயக்கிய படம்.
May be an image of 1 person
All reac

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...