Friday, February 10, 2023

இந்தியாவின்_வளர்ச்சி_ஏன்_உலகிற்கு_முக்கியம்?

 கடந்த 14/01/2023 அன்று துக்ளக் பத்திரிக்கையின் 53 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக, இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கலந்து கொண்டு, சிறப்பான ஆங்கிலத்தில் ஆற்றிய நீண்ட நெடிய உரையை, எளியோருக்கும் புரியும் வண்ணம் வழங்க அட்மின் Ravi Tds அவர்கள் விருப்பப்பட்டார்.

அதன்படி இயன்ற அளவு, எளிமையான தமிழில் பதிய முயல்கிறேன்.
.இதன் முன்னோட்டமாக, பலரின் மனதில் கடந்த 8 ஆண்டுகளாகத் தோன்றிய கேள்விகள் என் மனதிலும் தோன்றியதுண்டு. அதை குறிப்பிட்டபின் அவர் பேசியதை பார்ப்போம்.
ஆட்சியாளர்களில் பலவகை உண்டு.
சொல்வதைச் செய்வோம்.
செய்வதைச் சொல்வோம்..என்பர் சிலர்.
அதற்கு எதிராக ..
நாங்கள் சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்பார்கள் எதிரணியினர்.
.ஆனால், மக்களை இலவசம் மானியம் என்று அவர்களை யாசகத்திற்கு தான் எதிர்பார்க்க வைத்தனர்.
பாஜக இப்படி இலவசங்களையும், மானியங்களையும்தருகிறோம் என்று ஆசை காட்டாமல்,
நியாயமான வாக்குறுதிகளைக் கொடுத்து, அவற்றை நிறைவேற்றிக் காட்டிய திறனும், சாதனையும் கைக் கொண்ட
பாஜக- மோதிஜியின் தலைமையிலான ஆட்சி,
இவற்றை எப்படி, திட்டமிட்டது?
எப்படி வியூகம் வகுத்தது?
எப்படி செயல்படுத்தியது?....
என்பது, யாருக்கும் ஊகிக்கக் கூட இயலாத ஆச்சரியமாக உள்ளது.
நந்த வம்சத்தை ஒழித்து, மௌரிய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கத், தோன்றிய சாணக்கியன் என அழைக்கப்பட்ட கௌடில்யர் போல, இங்கே, மோதிஜிக்கு அமீத்ஷாவும், ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், போன்ற பல சாணக்கியர்கள் உறுதுணையாக இருக்கின்றனர்.
இவர்களின், ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஒரு தேர்ந்த ராணுவ தளபதியின் கீழ் இயங்கும் முப்படைகள் போல, செயல்பட்டு அதிரடியாக சாதித்து வருகின்றன.
கடந்த 65 ஆண்டுகளில் பாரதம் பல துறைகளில் சாதித்தாலும் , அதற்கென துணிச்சலான, முடிவு எடுக்கும் நிலைப்பாடு, பல காரணங்களால், திடமானதாக இல்லாமல், மற்ற நாடுகளின்
முடிவுகளை அல்லது அவர்களின் ஆலோசனைகளை, ஒட்டியோ அல்லது அவற்றிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் , விட்டுக் கொடுத்தோ, இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், வளர்ச்சி என்பதும்
கடைநிலை மக்கள் வரை சென்று சேராத நிலை. இதனால் வளர்ச்சியின் பலன் வீணானது.
எனவே, இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்த, பண்டைய பெருமைகளை மீட்க, நமது கலாச்சாரத்தின் தொன்மையை உலகிற்கு காட்ட, உற்பத்தி, அதன் பலன்கள் எல்லோரையும் சென்றடைய இந்தியாவின் தலைமை வலுவான ஒன்றாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சாணக்கியர்கள் செயல்படுத்த முயன்றனர்.
இதன் ஆரம்பம், முதலில், உலக நாடுகளோடு நம் நாட்டின் தொடர்புகளை நெருக்கமாக்குவது. விரிவாக்குவது. நம்பிக்கை ஊட்டுவது .
சில நாடுகளுடனான உறவுகள் பரஸ்பர தேவைகளின் அடிப்படையில் தொடர்வது.
சில நாட்டினரோடு கலாச்சாரத் தொடர்பு சிலவற்றோடு வியாபாரம், வேலை வாய்ப்புகள், உயர்கல்வி, ஆயுதங்கள்..இப்படி இருக்கும்.
ஆனால் சாமானிய மக்களுக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளின் தாத்பர்யம் தெரிந்து கொள்ள வேண்டியதை, அவசியமானதாகக் கருதவில்லை. அது அவர்கள் அறியாத ஒன்று.
இது ஏதோ படித்த சில அதிகாரிகள் ஆட்சியாளர்களோடு சம்பந்தப்பட்ட விஷயமாகவே இருந்து வந்துள்ளது.
இவற்றை சாமானிய மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுப் என்று கருதி அதை இந்த அரசு முன்னெடுத்துள்ளது.
இதன் பரிமாணங்கள் ,எப்படி நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், உற்பத்தி பெருக்கத்திற்கும் அதன் மூலமாக
சர்வதேச அளவில் இந்தியாவின்
ஆளுமையை அது எவ்வாறு முன்னிறுத்தும் என்பதையும் வெறும் வார்த்தைகளால் அன்றி செயல்களாலும் காட்டி வருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...