அற்புத ஆற்றல்கள் கொண்ட தமிழகத்தின் சிறந்த திரைப்பட நடிகர். தென்னிந்திய நடிகர் என்பதைவிட இந்திய தேசம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட கலைஞன்.
நடிக்கும் காலங்களில் அனைத்து வகையான திரைத்துறை ஞானம் கொண்ட, பன்முக திறமைகளை திரையுலகில் காட்டி, உழைத்து உயர்ந்த நின்ற கலைஞன்.
விதி என்பதா? இடையில் சென்று கொண்டிருந்த பாதையில் இருந்து திசை மாறி தவறான கால் பதித்து அரசியல் நுழைந்தது, எழுதவே மனம் வேதனை அடைகிறது.
தற்போது அந்தக் கலைஞன் புகழுக்கும் இகழுக்கும் சரிசமமாக யாருக்கும் கிடைக்கக்கூடாத, அனைவரும் வேதனைப்படும் இடத்தில் இருப்பதும், கேலிக்கு ஆளாகி தொடர்வதும் அந்தோ பரிதாபம்!
எண்ணற்ற ரசிகர்கள் மனதில் வாழ்ந்த நடிகர் கமலஹாசனின் ரசிகனான நானும் அவரை நினைத்து, என்னால் அழத்தான் முடியும். அழுகிறேன்.
காலம் மாறுமோ?
கலைஞன் மாற்றம் பெறுவானோ?
இத்தனை காலம் சம்பாதித்த
புகழை தக்க வைத்துக் கொள்வானோ?





வாழ வேண்டும் அவன் புகழ்!












ரசிகனாக
உங்கள்





No comments:
Post a Comment