Thursday, April 28, 2011

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

Karunanidhi வணக்கம்.


"இலங்கைப் பிரச்னைக்காக இங்குள்ள தமிழர் ஒன்றாதல் வேண்டும் என்று சொன்ன உங்களைப் பாராட்டுகிறேன். எல்லோரையும் ஒன்றாகச் சொல்லிவிட்டு நீங்களே பிரிந்தது ஏன்?

இன்னும் உங்களுக்கு ஒரு ஓரத்தில் மனசாட்சி என்று ஒன்று சிறிதளவேணும் இருந்தால் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றைத் துவங்கியிருக்கிறார்கள். அதை ஏன் துவங்கினார்கள்? ஈழத் தமிழர்க்காக உங்கள் தலைமையில் போராடுகிறோம், வாருங்கள் என்று வருந்தி வருந்தி அழைத்தார்கள். உடனே என்னை முன்னிறுத்திப் போராடச் சொல்லி என் ஆட்சியைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள் என்றீர்கள். சரி இவரை நம்பினால் ஈழத் தமிழனுக்கு விமோசனம் கிடைக்காது என்று நம்பித்தான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றைத் துவக்கினார்கள்.

அதிலும் குறிப்பாக ஏன் அப்படித் துவக்கினார்கள். இதில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும் தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் திரள வேண்டும் என்பதுதான் அதன் முதன்மையான நோக்கம். அப்படியே துவக்கினாலும் போராட்டத்துக்கு உங்களை விட்டுவிடாமல் உங்களுக்கும் முறையான அழைப்பை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அனுப்பினார்கள். ஆனால் நீங்களோ என்னை அழைக்கவில்லை என்று முழுப்பொய் சொன்னீர்கள். பழ.நெடுமாறன் உங்களுக்கு அனுப்பிய அழைப்பைச் செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்துக்காட்டி உங்கள் பொய்யை வெளிச்சம் போட்டுக்காட்டினார்!

உடனே மருத்துவமனையிலிருந்த உங்களுக்கு இலங்கை தமிழர் நல உரிமைப் பாதுகாப்புப் பேரவை என்ற ஒன்றைத் துவக்கியதாக அறிவித்தீர்கள். இதன் மூலம் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் வேண்டும் என்ற உங்கள் வாய்மொழியையே பொய்மொழியாக்கிவிட்டீர்கள். அழைத்தவர்களை விட்டுவிட்டு அதிமுகவுக்கு அழைப்பு விடுகிறீர்கள். என்ன அய்யா, இது நியாயம்? இதுவெல்லாம் உங்களின் கைவந்த கலை என்பது எனக்கு நன்கு தெரியும்.

மருத்துவமனையிலிருந்துகொண்டே குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி ஆட்சியாளர்களுக்கு உத்திரவு பிறப்பிக்கும் உங்களின் குடும்பப் பாசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டுதான், "அரசு கேபிள் நிறுவன" அதிகாரியான உமாசங்கரை பந்தாடும் உத்திரவு! பிழைக்கத் தெரியாத ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் ஜெயலலிதா ஆட்சியில் சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொணர்ந்தார்!

உங்களாட்சியில் சுமங்கலி வட இணைப்பு நிறுவனத்தின் கருங்காலித்தனத்தை வெளிக்கொணர்ந்தார்! ஆட்டைக் கடிச்சு மாட்டைக்கடிச்சு என் குடும்பத்தையே கடிக்க வந்தாயா? என்று ஒரு நேர்மையான முதுகெலும்புள்ள ஒரு அதிகாரியை தூக்கி வீசி எறிந்திருக்கிறீர்கள். இதையெல்லாம் மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அவர்களே! இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை! ஈழத் தமிழரென்றாலும், அரசுக்கட்டிலானாலும் ஆஸ்பத்திரிக்கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாலும் உங்கள் சிந்தனை உங்கள் குடும்பத்தைச் சுற்றியே என்பது எனக்குத் தெரியாதா? தமிழகத்து மூலை முடுக்கெல்லாம் இருக்கும் மக்களுக்குத்தான் தெரியாதா?

இலங்கை தமிழர் நல உரிமைப் பாதுகாப்புப் பேரவை அமைத்துள்ள உங்களுக்கு இன்னொன்றைச் சுட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஈழத் தமிழர்களுக்கு உங்களால் விடிவு ஏற்படப்போவதில்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஏனென்றால் அன்பழகனார் இலங்கைப் பிரச்னையில் எங்களால் எதுவும் செய்ய இயலாது; தில்லியால் தான் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியும்; நாம் அவர்களுக்கு உணர்த்த மட்டும்தான் முடியும் என்று உங்கள் ஒட்டுமொத்த கையாலாகத் தனத்தை பேரவைக் கூட்டத்திலேயே சொல்லிவிட்ட பிறகு பேரவையின் இலட்சணத்தையும் அதன் நோக்கத்தையும் புரிந்து கொண்டேன்.

இலங்கைப் பிரச்னையில் நாடகமாடுவது யார்? என்று நீங்கள் ஜெயலலிதாவை நோக்கி விரல் நீட்டியிருக்கிறீர்கள்? உங்கள் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக்கொண்டு ஜெயலலிதாவின் முதுகைப் பாருங்கள்.

இலங்கைத் தமிழர்களின் இன்னுயிர்காக்க தங்கள் இன்னுயிரை ஈகிவருவோர் மொழிப்போராட்டத்தை விட வலுவாக தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்துவருகிறது.
இந்திய அரசு திட்டவட்டமாக இப்போது கைவிரித்துவிட்டது? இனி என்ன செய்யப்போகிறீர்கள்?

இலங்கையரசு போரை நிறுத்தும் பேச்சே இல்லை என்று கொக்கரிக்கிறது

இன்னும் காங்கிரசை நம்பி நாடகமாடமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு உங்களைத் தள்ளிவிட்டுவிட்டது.

காலம்தாழ்ந்தாலும், நீங்கள் இந்த நெருக்கடியான நேரத்திலாவது ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு இது மிகச் சரியான நேரம், முதல்வர் அவர்களே!

சரி விஷயத்துக்கு வருகிறேன். ஈழத் தமிழர்கள் என்றால்தான் தில்லியைக் கைகாட்டுகிறீர்கள்; ஈழத்திலிருந்து உங்களையே நம்பி வந்த இலங்கைத் தமிழர்களை அகதிகள் முகாமில் நீங்கள் எப்படி வைத்திருக்கிறீர்கள்?

தமிழகத்தை நம்பி வந்த ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் நிலை மிகக்கொடுமையானதாக இருக்கிறது. அகதிகளாய் இங்குவந்து, ஏன் வந்தோம் என்ற ஆறாத் துயரில் ஆழ்ந்திருப்போர் குறித்து ஏன் தெரிந்து கொள்ள வில்லை?

தமிழக அரசும் சரி, மத்திய அரசும் சரி ஈழத் தமிழர்களை மனித நேயத்தோடு அணுக மறுக்கிறது? ஏன்? குற்றுயிரும் குலையுயிருமாய் இங்கு வந்து, அந்தக் குண்டுகளுக்கே இரையாகியிருக்கலாமோ என்று எண்ணுகிற சூழலை உங்கள் அரசும், மத்திய அரசும் ஏற்படுத்தியுள்ளது வேதனை தரும் ஒன்று; நெஞ்சுள்ளோர் பதறிப்போவார். ஈழத் தமிழருக்கு இராசபக்சே எமன் என்றால் இங்கிருப்போருக்கு நீங்கள் சார்ந்த அரசும்,நடுவணரசும் கொடுந்தீங்கிழைக்கிறது.

இந்திய அரசு அகதிகளைக்கூட ஒரே மாதிரி நடத்த முன்வராமல் ஈழ அகதிக்கு ஒரு நீதியும், திபெத்திய அகதிக்கு ஒரு நீதியும் செய்யும் கொடுமையும் நீங்கள் அறிந்தே நடக்கிறதா? தெரிந்தும் தெரியாததுபோல இதிலும் நடுவணரசுக்கு துணைபோகிறீர்களா?

திபெத்திய அகதி முகாம் எப்படி இயங்குகிறது? ஈழத் தமிழர் அகதிகள் முகாம் எப்படி இயங்குகிறது? அவர்களுக்கு என்னவெல்லாம் இந்திய அரசு சலுகைகளைச் செய்கிறது? திபெத்திய முகாம் உள்ள கர்நாடகாவில் கர்நாடக அரசு செய்யும் உதவிகள் என்ன? ஈழத் தமிழர் முகாம்கள் உள்ள தமிழகத்தில் தமிழக அரசு செய்யும் உதவிகள் என்ன? இத்தனைக்கும் கர்நாடகத்திற்கும் திபெத்தியருக்கும் எந்த ஒட்டுறவும் கூட்டுறவும் கிடையாது. ஆனால் தமிழகத்தில் இரத்த சம்பந்தம் உள்ளவர்கள், தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற பந்தம் உள்ளவர்கள் ஈழத் தமிழருக்காக ஈழத் தமிழர் நல உரிமைப்பேரவை வடிப்பது கண்ணீரா? நீலிக்கண்ணீரா? என்பதை இந்த மடலின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்!

இந்தியாவில் திபெத்திய அகதிகள் மற்றும் ஈழத்தமிழ் அகதிகள் பலர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு செய்யும் உதவி(?)களை இங்கு பட்டியலிடுகிறேன். ஒட்டும் உறவும் இல்லாத கர்நாடக அரசு செய்து தந்திருக்கும் ஏற்பாடுகளையும் ஓய்வாக மருத்துவமனையின் மலர்படுக்கையிலிருந்தவாறே வசதியாகச் சாய்ந்து கொண்டு படித்துப்பாருங்கள்.
கர்நாடகாவிலுள்ள திபெத்திய அகதிகள் முகாமில் 5,232 அகதிகள் உள்ளனர்.

தாங்கள் விரும்பியது போல் வீடுகளைக் கட்டிக் கொள்ளுவதற்கு அனுமதி (அனைத்தும் மாடி வீடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரப்படி கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்). தனியாக ஒவ்வொரு பகுதிக்கும் திபெத்தியர்களுக்கு 5 மருத்துவர்கள், 15 செவிலியர்களுடன் தரமான, நவீன வசதிகளுடன் தனி மருத்துவமனை; அவர்கள் தாங்களே வடிவமைத்துக் கொண்ட கழிப்பறை, குளியலறைகள்.

ஆனால் திபெத்திய அகதிகளுக்கோ தங்கள் புத்தமத கலாச்சாரத்தின்படி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவும், உடைகள் அணியவும், வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், தங்கள் மொழியை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. தனியாக நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட புத்த கோயில் மற்றும் தலாய்லாமா கோயில்கள் 1 ஏக்கர் பரப்பளவில் கட்டித்தரப்பட்டுள்ளது.

தனியாக சுமார் ஐம்பது மாணவர் படிக்கக்கூடிய மதப்பள்ளி ஒன்றும்,அதே போல் மதக் கல்லூரி ஒன்றும்,தனித்தனியான மாணவர் விடுதிகள் உள்பட ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

சகல வசதிகளுடன் CBSC பாடத் திட்டத்தில் - தில்லி அரசாங்கத்தின் அனுமதி பெற்ற. திபெத்திய அகதிக் குழந்தைகளுக்கு மட்டுமான பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது பத்தாம் வகுப்பு வரை மட்டும்.

பின் 11, 12 வகுப்பு பயில அரசே அனைத்து செலவுகளையும் ஏற்று சிம்லா அனுப்பி வைக்கிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க அரசு செலவுடன் முறையே 3, 5 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. திபெத்தியர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர அகதிகள் என்ற முத்திரையுடன், கர்நாடகத்தில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம்.
மொத்தமாக இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 5232 பேர்களுக்கு பண்படுத்தப்பட்ட, நீர் வசதியுடன் விவசாயம் செய்யத்தக்க 3,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியாக இணையவசதி இலவசமாக வழங்கப் படுகிறது. 22 பகுதிகளுக்கும் தனித்தனியாக செல்போன் டவர்கள் உள்ள தொலைபேசி வசதிகள். நான்கு வகையான வங்கிகள் சிண்டிகேட் வங்கி,ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்,கூட்டுறவு வங்கி,வெளிநாட்டு பணம் பெற்றுக் கொள்ள Western Union Money Transfer வசதிகள், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்;
சுயமாக பால்பண்ணை வைக்க, பொருட்கள் உற்பத்தி பண்ணை, கடை வைத்துக் கொள்ள அரசே வட்டி மற்றும் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்குகிறது.

அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியில் சென்று விற்கவும், கடையில் சென்று விற்கவும் அனுமதிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக (பணிமனை) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண உதவி மற்றும் பொருளுதவி குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது.

திபெத்திய அகதிகளுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்காக அமைக்கப்பட்ட அதிகாரி மாதமொருமுறை மைய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார். மற்றபடி முழு சுதந்திரமாக உள்ளனர்.

திபெத்திய அகதிகளுக்கு உள்ள மற்ற சிறப்பியல்புகள்

இளைஞர்களுக்கு தனியாக அமைக்கப்பட்ட Youth Congress
மக்கள் ஒன்றாக கூடுவதற்கு Multipurpose Hall.
அவர்கள் நாட்டில் இருந்து வருபவர்களை தங்கவைக்க அரசு ஓய்வு விடுதி
அவர்கள் விரும்பும் இடத்தில் மதவழிபாட்டுத் தலங்கள்.
வெளியில் சென்று தொழில் தொடங்க வசதி.
கர்நாடக மக்களுடன் இயல்பாக கலந்து கொள்ள அனுமதி. (ஆனால் ஈழ அகதிகள் அனுமதிக்கப்படுவதில்லை) ஆகியவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
திபெத்திய அகதிகள்முகாம் படங்களை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன். இதை படித்துவிட்டு படங்களைப் பார்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் அகதிகளாய் உங்கள் தலைமையில் இயங்கும் அரசு எப்படி வைத்திருக்கிறது என்று நீங்கள் பார்த்துப் புளகாங்கிதம் அடையப் போகிறீர்களா? வெட்கித் தலைகுனியப்போகிறீர்களா?

103 முகாம்களில் ஏழத்தாழ 75,000க்கும் மேல் ஈழத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். தினமும் தங்கள் உடைமைகளை இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு நூற்றுக்கணக்கான பேர் வந்து கொண்டும் இருக்கின்றனர். அரசாங்கங்கள் கட்டிக் கொடுக்கும் குடிசைகள் மற்றும் ஈழ அகதிகள் தாங்களாக கட்டிக் கொள்ளும் குடிசைகள். 90% வீடுகளில் மின்சாரமே இல்லை. பெரும்பாலும் மேற்கூரை சரியாக இல்லாத வீடுகள் அதிகமாக உள்ளன.

அருகில் உள்ள பொது மருத்துவமனைகளில் உடல் நலம் பாதிக்கப்படும் பொழுது, முகாம் பாதுகாவலர் அனுமதி பெற்றுப் போய் பார்த்துக் கொள்ளலாம்.

பாதி முகாம்களில் கழிப்பிட வசதி இல்லை. ஒரு சில முகாம்களில் இடிந்து போய் பராமரிப்பு அற்று நாய்களும், பன்றிகளும் (மனிதன் போக தகுதியற்ற) மலம் கழிக்கக்கூடிய கழிப்பறை, எதற்கும் மேற்கூரை கிடையாது. திறந்த வெளி கழிப்பிடம். பெண்கள் குளிப்பதற்கு நான்கு பக்கமும் ஓலைகளால் வேயப்பட்ட வானமே கூரையாய் குளியலறை.

அனைத்து உரிமைகளும் ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொதுவாக ஈழத்தில் உள்ள பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது வழக்கம்தானே. அதனை இங்குள்ள காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் நீங்கள் ஆபாசத்தை தூண்டுகின்றீர்கள் என்ற பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்கின்ற அவலங்களும் அரங்கேறுவது சாதாரணமானது.

மனித உரிமையே இல்லாத இடத்தில் மத சுதந்திரம் எதிர்பார்ப்பது அவர்கள் அறியாமை இல்லையா, முதல்வர் அவர்களே!?

அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஈழக் குழந்தைகள் 1 முதல் +2 வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். (ஆனால் மண்டபம் பள்ளியில் நேரடியாக +1 மற்றும் +2 வகுப்புகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. அதற்கு பள்ளி நிர்வாகம் சொல்லும் காரணம் என்னவெனில் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும் என அச்சம் கொள்வதாகச் சொல்கிறது. (மண்டபம் பள்ளியின் தற்போதைய நிலை என்னவெனில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 129 மேல்நிலைப் பள்ளிகளில் தர நிலையில் 128வது இடத்தில் உள்ள பெருமையான விதயத்தையும் தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

ஒருசில ஈழ முகாம்களில் 1 முதல் 5 வரையான வகுப்புகள் உள்ள பள்ளிகள் உள்ளன. அங்கு ஆசிரியர்களாக அகதிகளால் நியமிக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் உள்ள படித்த அதிகபட்சமாக இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளிக் கட்டிடம் பெரும்பாலும் பாழடைந்து ஓட்டை உடைசலாகத் தான் உள்ளது. உயர்கல்வியில் 2003 வரை இருந்த இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதால். உயர்கல்வி முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது வசதி உள்ளவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க அனுமதியை தாராளமாக வழங்கியிருக்கிறீர்கள். நம் நாட்டின் தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் எவ்வளவு என்று உங்களுக்கே தெரியும் முதல்வர் அவர்களே! ஈழத் தமிழர்கள் உயர் படிப்பு படித்து என்ன செய்யப்போகிறார்கள்? என்கிறீர்களா முதல்வர் அவர்களே!

குடியிருக்கவே ஏனோதானோவென்று இடம் கொடுத்த உங்கள் ஆட்சியில் கர்நாடக மாநிலம்போல விவசாய நிலம் கேட்பது சரியில்லை, இல்லீங்களா முதல்வர் அவர்களே!?

நாட்டுப் பிரச்சனைகள் பேசினாலே தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சூழ்நிலையில் மற்ற முகாம்களில் இருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள STD Booth-களையும், 1 ரூபாய் நாணயப் பெட்டியையும் பயன்படுத்துகின்றனர். அனால் அதையும்கூட முகாம் காப்பாளரின் அனுமதி வேண்டும், என்ற அதிபயங்கர நிபந்தனையல்லவா விதித்திருக்கிறீர்கள், முதல்வர் அவர்களே!

மண்டபம் முகாமில் மூன்று நாள் மட்டும் வெளியே சென்று கூலி வேலை பார்க்க அனுமதி அளித்திருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே, இதற்கே உங்களுக்க் நன்றி சொல்ல வேண்டும், முதல்வர் அவர்களே.

ஏனென்றால் மற்ற முகாம்களில் அருகிலுள்ள ஊர்களில் சென்று வண்ணமடித்தல், கல்லுடைத்தல், விவசாயத்தில் கூலி வேலை செய்ய சாதாரணமாக அனுமதிப்பதில்லை.
கடுமையான நிபந்தனையுடன் வேலைதான் பார்க்கப்போறியா புலிகளுக்கு ஏதேனும் மறைமுக தொடர்பு வைத்துக்கொண்டு போகிறாயா? என்ற நடுவணரசுக்கு விசுவாசமான கேள்விகணைகளுக்கப்பால் அல்லவா அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

குடும்பத் தலைவருக்கு ரூ. 72, பெண்ணுக்கு ரூ.50 மற்ற உறுப்பினருக்கு ரூ.45 சிறு குழந்தைகளுக்கு ரூ.12.50. 15 நாளுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றது. இந்தப் பணத்தை அகதிகள் வாங்குவதற்கும் உங்கள் அதிகாரிகள் கொடுப்பதற்கும், அடாடா அதுவும் மேன்மை தங்கிய தங்கள் ஆட்சியில் எனக்கே எழுதக் கூச்சமாக இருக்கிறது முதல்வர் அவர்களே!

மண்டபம் முகாம்களில் அறிவிக்கப்படாத தினம்தோறும் ஆய்வும் மற்ற முகாம்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆய்வும் என்று நடைபெறுகிறது. இந்த ஆய்வுக் கொடுமை இருக்கிறதே முதல்வர் அவர்களே அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.

ஆய்வின் போது தங்கள் சொந்த மண்ணைப் பற்றிப் பேசினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற கொடுமை இருக்கிறதே, சிங்கள இராணுவமாய் உங்கள் அதிகார வர்க்கம் அதட்டி,அடக்கி நடத்தும் போக்கு இருக்கிறதே, சிங்களரெல்லாம் எம்மாத்திரம்?

தன் நாட்டை விட்டு இங்கு வரும் அகதிகளிடம் மூன்று நாட்கள் மண்டபம் முகாமில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொள்கிறார்களா என்ற சந்தேகத்துடன் அவ்வாறு சோதனை செய்யும் போது சற்று வாட்டசாட்டமான இளைஞர்கள் கோபப்பட்டால் அவர்களை உடனேயே செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்பது அறிவிக்கப்படாத ஒரு சித்திரவதைச் சிறைக்கூடம். நடுவணரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், தங்கள் அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பார்ப்பதை எங்கு போய்ச் சொல்வது?

திபெத்திய அகதிகளைப் போல் ஈழத்தமிழர்களைப் பார்க்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை மனிதர்களாகவாவது பாவித்து, வாழ்வுரிமையைப் பாதிக்காத அளவு வாழ்வதற்கான உத்தரவாதத்தினை தமிழினத் தலைவரான நீங்களே தராதபட்சத்தில் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற
தங்கள் பம்மாத்து பாவ்லாக்கள் எல்லாம் யாரை ஏமாற்ற? யாரைத் திருப்திப்படுத்த முதல்வர் அவர்களே!

இந்தியாவை/ தமிழகத்தைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மற்ற நாடுகள் தன் நாட்டு குடிமகன் போல் மதித்து தனது அரசு பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளார்கள். ஆனால் உங்கள் அரசு ஈழத்தமிழர்களை மனிதர்களாகக்கூட நினைக்கமறுக்கிற சூழலை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்று பெத்தபேராக வைத்துக்கொண்டால் போதுமா? என்பதைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் முதல்வர் அவர்களே!

அப்படிப்பட்ட இந்திய அரசுக்கு நீங்களும் துணைபோய்க்கொண்டு நடுவணரசோடு சேர்ந்துகொண்டு ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும் இங்கு அகதிகளாய் வந்துள்ள தமிழர்கள் கண்களுக்கும் சுண்ணாம்பு தீட்டுகிறீர்களே, இது நியாயமா?

இராமதாசுக்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு இரண்டு முறை ஆட்சியைப் பறிகொடுத்தேன் என்று தேய்ந்துபோன இசைத்தட்டாக திரும்பத் திரும்பச் சொல்வதை விடுங்கள்; அப்போதும் கூட "இதேவேளை இலங்கை தமிழர் பிரச்னைகளுக்காக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்படுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் சொல்லி உங்களின் காங்கிரசு பக்தியை எடுதியம்பியிருக்கிறீர்கள். கடைசிகாலத்தில் அரசு அஹ்டிகாரிகளுக்கு துரோகம், ஈழத்தமிழர்களுக்குத் துரோகம், ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த நம் சகோதரத் தமிழர்களுக்கு துரோகம் என்று நீங்கள் பட்டியலை நீட்டிக்கொண்டே போவது உங்கள் பாவ மூட்டையின் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை மட்டும் மீண்டும்மீண்டும் நினைவு படுத்துகிறேன் முதல்வர் அவர்களே!

"சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இறங்கா ரடீ - கிளியே
செம்மை மறந்தா ரடீ...."

பாரதிகூட உங்களையே நினைத்து இதை பாடியிருப்பானோ என்று தோன்றுகிறது.

அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,

Wednesday, April 27, 2011

உப்பு சப்பு இல்லாத திமுக உயர்நிலை கூட்டம்

தப்பிய மனைவி...சிக்கிய மகள்.?-

கருணாநிதி நிருபர்களை சந்தித்த போது ,குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகவில்லை.தயாளு கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டால் ,காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறுமா..? என ஒரு பெண் நிருபர் கேட்டதுதான் தாமதம்..கருணாநிதி கொந்தளித்தார்.சில பெண்கள் இதயம் இல்லாமல் இருக்கிறார்கள்..நீயுமாம்மா..?என்றாராம்.ஆனால் அவருடைய பேட்டி டெக்ஸ்ட் அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டபோது ,பெண்ணாக இருந்துகொண்டு,இது மாதிரி பேசக்கூடாது.பெண் நிருபர்  இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டு பேசக்கூடாது’என கனிவாக மாற்றப்பட்டுவிட்டது.

(இதயம் இல்லாத பெண் என கலைஞர் யாரை சொல்கிறார்..ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது நடேசன் எதையாவது செய்து எம்மக்களை காப்பாற்றுங்கள் என கனிமொழியிடம் மன்றாடியபோது,சுரத்தே இல்லாமல் ஆயுதங்களை நீங்கள் கீழே போடுங்கள்..அவர்கள் தாக்குவதை நிறுத்திவிடுவார்கள் என கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டிருந்தாராமே..அந்த கனிமொழியையா கலைஞர் இதயம் இல்லாத பெண் என்கிறார்..? )


தயாளு அம்மாள் விடுபட்டது எப்படி..?

அவரை பொறுத்தவரை சிபிஐ அதிகாரிகளிடம் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கிறதாம்...எனக்கு எதுவும் தெரியாது...சரத்குமார் சொன்ன இடத்துல கையெழுத்து போட்டேன்...நீங்க சொல்ர போர்டு மீட்டிங்க்ல இதுவரை கலந்துகிட்டதே கிடையாது ...என் சொன்னதை சிபிஐ அதிகாரிகள் நம்பி,வயதை அனுசரித்தும், பெயரை நீக்கினார்களாம்..

கனிமொழி மீது குற்றசாட்டு என்னாகும்..?

குற்ற உடந்தை என்ற கடுமையான வார்த்தையை கனிமொழி மீது சி.பி.ஐ பயன்படுத்தி உள்ளது..சிக்கலில் இருந்து அவர் விடுபடுவதற்கு ,ஆ.ராசாவை போலவே பல மாதங்கள் ஆகலாம்...கருணாநிதிக்கு வைக்கப்படும் ஆசிட் டெஸ்ட் இது.என்று டெல்லி மீடியா வட்டாரம் பரபரக்கிறது ஆனாலும் 2ஜி குற்றப்பத்திரிக்கை விவகாரத்தை எதிர்கொள்ள தி.மு.கவும் தயாராகி வருகிறது .இன்று உயர் மட்ட செயல்திட்டக்குழு  கூட்டத்தை அவசரமாக கூட்டியிருக்கிறது..தி.மு.க காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் முரண்பட்ட தி.மு.க கடந்த மார்ச் 4 ஆம்தேதி காங்கிரசுக்கு செக் வைத்து பின்வாங்கியது...ஒன்றரை மாத இடைவெளியில் மீண்டும் இப்படி ஒரு கூட்டத்தை கூட்டியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது....

எதுவானாலும் தேர்தல் முடிவுகள் வந்தபிறகு பார்த்துக்கலாம் என ஸ்டாலின் சொல்கிறாராம்

 --------------------------------------------------------------------------------------------------

சூழ்நிலைகள் இப்படி இருந்தாலும், காங்கிரசை பகைத்துக் கொள்ளும் எந்த முடிவை எடுத்தாலும், அது ஜெயலலிதாவுக்கு சாதகமாகி விடும் என்ற நிலையையும், தி.மு.க., ஆலோசித்து வருகிறது."தமிழக சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் எனத் தெரியாத நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை, உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் எடுத்தால், அது, நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்' என, தி.மு.க.,வின் தலைமை கருதுகிறது.
"காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை எடுத்து, காங்கிரஸ் தங்களை பழிவாங்கி விட்டது; துரோகம் இழைத்து விட்டது என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும், அது, அரசியல் ரீதியாக பயன்படுமே தவிர, ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தப்பிக்க எந்த வகையிலும் உதவாது. காங்கிரஸ் உதவி இல்லாமல் இந்த வழக்கை சந்திப்பது சிரமம்' என்றும் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் கூறுகின்றனர்.சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வுக்கு பாதகமாக அமைந்து, மத்திய அரசிலிருந்தும் வெளியேறி, மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே நேரத்தில், அதிகாரத்தில் இல்லாமல் இருப்பது எந்த விதத்திலும் கட்சிக்கு உகந்தது அல்ல என்ற கருத்தும், தி.மு.க., மேலிடத்திற்கு நன்கு தெரிந்துள்ளது.எனவே, "வழக்கை சட்டப்படி சந்திப்போம். குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி, உண்மைகளை வெளியில் கொண்டு வருவோம். நீதி வெல்லும், தர்மம் வெல்லும்' என்பது போன்ற தீர்மானங்களுடன் உயர்நிலை செயல் திட்டக் குழு முடிவுகளை எடுக்கும் என, தி.மு.க., மேல்மட்ட தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
குமுறல்...!;முதல்வரின் மனைவி, மகளுக்கு நெருக்கடி வந்ததால் மட்டும் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் உடனே கூட்டப்படுகிறது. இதே வழக்கில், மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட போது, கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட இந்த அமைப்பை கூட்டவில்லை. இதுவரை, ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை என, தி.மு.க.,வின் ஒரு சாரார் பயங்கர குமுறலில் உள்ளனர்.

Tuesday, April 26, 2011

மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகாது : உயர்மட்ட குழுவின் முடிவு இது தான்!

ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, தி.மு.க., உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம், சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று அவசரமாக கூடுகிறது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கூட்டணி குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.


ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய குற்றவாளிகளிடம் இருந்து, கலைஞர், "டிவி'க்கு, 210 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதால், அந்த, "டிவி' நிறுவனத்தின், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடம், சி.பி.ஐ., விசாரித்தது.அதன்படி, கனிமொழியை, 2வது குற்றப்பத்திரிகையில் சேர்த்து, தி.மு.க., வட்டாரத்துக்கு, சி.பி.ஐ., நேற்று முன்தினம் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. மே 6ம் தேதி, கோர்ட்டில் ஆஜராகும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.அங்கு தொட்டு, இங்கு தொட்டு கடைசியில் முதல்வரின் குடும்பத்திலேயே, சி.பி.ஐ., கை வைத்துள்ளதால், இப்பிரச்னையை பெரும் நெருக்கடியாக, தி.மு.க., கருதுகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க என்ன செய்யலாம் என்ற கட்டாயத்தில், கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் குழு, இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்படுகிறது.மத்திய அரசு மீதான கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொள்வது குறித்து, தி.மு.க., பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த முடிவு எந்த விதத்திலும் கட்சிக்கும், வழக்கில் சிக்கியுள்ள கனிமொழிக்கும் பலன் தராது என்பதே கட்சித் தலைமையின் கணிப்பாக உள்ளது.


"கூட்டணி கட்சியினர் ஊழலில் ஈடுபடும்போது அவர்களை காப்பாற்றுவது தான் கூட்டணி தர்மம்' என்ற அடிப்படையில் தான், இதற்கு முந்தைய அரசுகள் முன்னுதாரணங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளன. மத்திய அரசு என்ன நினைக்கிறதோ, அதை செயல்படுத்தும் அமைப்பாகவே, சி.பி.ஐ., போன்ற விசாரணை அமைப்புகளும் செயல்பட்டு வந்துள்ளன. ஆனால், தி.மு.க., - காங்கிரஸ் விஷயத்தில், இதற்கு நேர்மாறான அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்றும், மறுபுறம், ரெய்டு, குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பு என்றும் எதிரெதிர் நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதன் மர்மம் என்ன என்பதை அனைவரும் விவாதிக்கத் துவங்கியுள்ளனர்."ஊழலுக்கு நாங்கள் எதிரானவர்கள், ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்ற தோற்றத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அதற்கு, தி.மு.க.,வை பலிகொடுக்க தயாராகி விட்டது' என, தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.


சூழ்நிலைகள் இப்படி இருந்தாலும், காங்கிரசை பகைத்துக் கொள்ளும் எந்த முடிவை எடுத்தாலும், அது ஜெயலலிதாவுக்கு சாதகமாகி விடும் என்ற நிலையையும், தி.மு.க., ஆலோசித்து வருகிறது."தமிழக சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் எனத் தெரியாத நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை, உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் எடுத்தால், அது, நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்' என, தி.மு.க.,வின் தலைமை கருதுகிறது.


"காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை எடுத்து, காங்கிரஸ் தங்களை பழிவாங்கி விட்டது; துரோகம் இழைத்து விட்டது என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும், அது, அரசியல் ரீதியாக பயன்படுமே தவிர, ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தப்பிக்க எந்த வகையிலும் உதவாது. காங்கிரஸ் உதவி இல்லாமல் இந்த வழக்கை சந்திப்பது சிரமம்' என்றும் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் கூறுகின்றனர்.சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வுக்கு பாதகமாக அமைந்து, மத்திய அரசிலிருந்தும் வெளியேறி, மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே நேரத்தில், அதிகாரத்தில் இல்லாமல் இருப்பது எந்த விதத்திலும் கட்சிக்கு உகந்தது அல்ல என்ற கருத்தும், தி.மு.க., மேலிடத்திற்கு நன்கு தெரிந்துள்ளது.எனவே, "வழக்கை சட்டப்படி சந்திப்போம். குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி, உண்மைகளை வெளியில் கொண்டு வருவோம். நீதி வெல்லும், தர்மம் வெல்லும்' என்பது போன்ற தீர்மானங்களுடன் உயர்நிலை செயல் திட்டக் குழு முடிவுகளை எடுக்கும் என, தி.மு.க., மேல்மட்ட தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.


குமுறல்...!முதல்வரின் மனைவி, மகளுக்கு நெருக்கடி வந்ததால் மட்டும் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் உடனே கூட்டப்படுகிறது. இதே வழக்கில், மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட போது, கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட இந்த அமைப்பை கூட்டவில்லை. இதுவரை, ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை என, தி.மு.க.,வின் ஒரு சாரார் பயங்கர குமுறலில் உள்ளனர்.

எவ்வளவு அடித்தாலும் வலிக்காத தி.மு.க.,: ஆர்.ரங்கராஜ் பாண்டே

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக, வெளியே உலாவிக்கொண்டிருந்த, "2 ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கு, தமிழக முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. அவரது அருமை மகள் கனிமொழி, கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

 
 
இதுவரை, சாதிக் பாட்ஷா, ராஜா, அவரது சகோதரர் என தி.மு.க., சுற்றுவட்டாரங்களையே சுற்றிவந்த சி.பி.ஐ., இம்முறை, அக்கட்சித் தலைவரின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. நேரடியாக குற்ற வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார் கனிமொழி. இப்போது என்ன செய்யப்போகிறது தி.மு.க.,? இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. இதில், இப்பிரச்னை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அப்படி என்ன முக்கிய முடிவு? என்னுடைய பார்வையில், "கழக எம்.பி., கனிமொழி மீது சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை, சட்டத்தின் துணையோடு சந்திப்போம்' என்பதைத் தவிர, வேறெந்த முடிவையும் தி.மு.க., எடுக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். "இதற்கு மேல் கருணாநிதி பொறுக்க மாட்டார். நிச்சயம் பொங்கியெழுந்துவிடுவார். அமைச்சரவையிலிருந்து விலகுவார். ஆதரவையாவது வாபஸ் பெறுவார்' என்றெல்லாம், சில நப்பாசைக்காரர்கள் தப்பாசைப்படுவார்கள். ஆனால், அது நடக்கப்போவதில்லை. காரணம் என்னவென்று விளக்குகிறேன்.


கடந்த 2009ல் இவர்கள் கேட்ட எண்ணிக்கையில் அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை; கேட்ட துறைகளும் கிடைக்கவில்லை. "இவ்வளவு தான்; அதுவும், இன்னின்ன துறைகள் தான்' என காங்கிரஸ் தரப்பில் ஒரு பார்முலா அறிமுகப்படுத்தப்பட்டது. அதிர்ந்த தலைவர், "ஆட்சியில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்' என ரோசத்தோடு சென்னை திரும்பினார். தி.மு.க., இல்லாமலேயே மத்திய அமைச்சரவை பதவியேற்றது. கருணாநிதி அதையும் தாங்கினார்.


"முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து, முதல்வர் கருணாநிதி தலைமையில், மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' அறிவிக்கப்பட்டது. அமைச்சர் ராஜாவின் அலுவலகத்துக்குள் சி.பி.ஐ., புகுந்தது தான் தாமதம், அடுத்த நாளே, கேரளா அரசைக் கண்டித்து என அந்தப் போராட்டம் மாற்றப்பட்டது. இறுதியில், போராட்டமே கைவிடப்பட்டது. கருணாநிதி அதையும் தாங்கினார்.


காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், நூறு முறை தமிழகம் வந்துவிட்டார். ஒரு முறை கூட முதல்வரைச் சந்திக்கவில்லை. தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் அதுபற்றி கேள்வி எழுப்பின. கருணாநிதி அதையும் தாங்கினார்.


ராஜா கைது செய்யப்பட்டார். அப்போது கூடிய தி.மு.க., பொதுக்குழு, "சட்டப்படி எதிர்கொள்வோம்' என சம்பிரதாயத்துக்கு ஒரு தீர்மானம் போட்டு முடித்துக்கொண்டது. தி.மு.க., சார்பில் அவருக்கு ஜாமீன் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. 85 நாட்களுக்கும் மேலாக சிறையிலேயே இருக்கிறார். "தலித் என்பதால் தான் ராஜா கட்டம் கட்டப்படுகிறார்' என கவலைப்பட்ட கருணாநிதி, அதையும் தாங்கினார்.


சமீபத்தில் முடிந்த சட்டசபைத் தேர்தலில், "63 சீட் வேண்டும்; அதுவும், நாங்கள் கேட்கிற தொகுதி தான் வேண்டும்' என, இதுவரை எந்தக் கூட்டணியிலும், எந்தக் கட்சியும் விதித்திராத நிபந்தனையை காங்கிரஸ் விதித்தது. "இது நியாயமா?' என பக்கம் பக்கமாக அறிக்கை விட்ட கருணாநிதி, "தி.மு.க., மத்திய அமைச்சர்கள் ராஜினாமா' என அறிவித்தார். யாரும் கெஞ்சாமலேயே, ராஜினாமா முடிவை மாற்றிக்கொண்டார். அனைத்து ஊடகங்களும் கேலி செய்தன. அதையும் தாங்கினார் கருணாநிதி.


தமிழக சட்டசபைத் தேர்தலில், வரலாறு காணாத அளவு கெடுபிடியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. நான் முந்தைய பதிவிலேயே சொன்ன மாதிரி, காங்கிரசின் கண்ணசைவு இல்லாமல், இவ்வளவு கெடுபிடி சாத்தியமில்லை. கருணாநிதியும் உணர்ந்திருந்ததால் தான் அதை, "எமர்ஜென்சி'யோடு ஒப்பிட்டார். அந்த அளவுக்கு தி.மு.க.,வின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது தேர்தல் கமிஷன். அதையும் தாங்கினார் கருணாநிதி.
இரண்டு நாட்கள் முன்பு கூட தலைமைச் செயலத்தில் ஒரு பெண் நிருபர், "கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிகையில் இருந்தால், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிவிடுவீர்களா?' எனக் கேட்க, "ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, இப்படி இதயத்தை தூக்கியெறிந்துவிட்டு கேள்வி கேட்கலாமா' என, பதில் கேள்வி கேட்டார். இதற்கு என்ன அர்த்தம்? மேற்சொன்ன அத்தனையையும் தாங்கிய முதல்வர் கருணாநிதி, கனிமொழி மீதான குற்றப்பத்திரிகையையும், ஒருவேளை அவர் கைதானால், அதையும் கூட தாங்குவார் என்பது தான், அதன் அர்த்தம். ஏனெனில், அவருடையது, எதையும் தாங்கும் இதயம்.

முதுகெலும்பில்லாத தகவல் ஆணையம் எதற்கு?

முதுகெலும்பில்லாத தகவல் ஆணையம் எதற்கு?

பொதுமக்களை அரசாங்கத்தின் வாசற்படிகளில் தவம் கிடக்கும் மனுதாரராக இருப்பதை மாற்றி தமது உரிமைகளைத் தட்டிக்கேட்கும் மன்னர்களாக்கிய ஓர் அற்புதமான சட்டம்தான் 2005-ல் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி அரசின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டிய தகவல் உரிமை ஆணையங்களே அப்படியொரு புரட்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் முனைப்பாக உள்ளன. அந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளது தமிழகத் தகவல் உரிமை ஆணையம்.

தமிழகத் தகவல் ஆணையத்தின் செயல்பாட்டில் நேர்மையோ, நியாயமோ இல்லை என்று தகவல் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து விமர்சித்தும், அந்த ஆணையம் தன்னைத் திருத்திக்கொள்ளாத நிலையில், இப்படிப்பட்ட ஓர் ஆணையம் தேவையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மாநிலத் தகவல் ஆணையங்களில் தலைமை ஆணையர் உள்பட 11 பேர்வரை அங்கம் வகிக்க தகவல் உரிமைச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், தமிழகத் தகவல் ஆணையத்தில் 4 பேர்தான் இருக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை?

தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான மனுக்கள் தேங்கியுள்ளன. மக்களுடன் அதிகத் தொடர்புடைய வருவாய், காவல்துறைகளில் ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்துள்ளன. இதற்கு உடனுக்குடன் தீர்வு காண தகவல் ஆணையம் முனைப்புக் காட்டாதது ஏன்? வருவாய் அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்குப் பதில் அளிப்பது அந்தந்த துணை வட்டாட்சியர்களுக்குக் கூடுதல் பொறுப்பாகவே அளிக்கப்படுகிறது. இதுவே மனுக்கள் தேக்கத்துக்கு காரணம் என்று துணை வட்டாட்சியர்கள் புலம்புகிறார்கள். இது ஏன் அரசின் செவிக்குக் கேட்கவில்லை?

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட துறை பதில் அளிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இதைத் தமிழகத்தில் உள்ள எந்தத் துறையும் பின்பற்றுவதில்லை. இதற்கு முழுக் காரணம் மாநிலத் தகவல் ஆணையமே. மனுதாரர்களுக்கு 30 நாள்களுக்குள் பதில் அளிக்காத அதிகாரிக்கு அதிகபட்சம் | 25,000 வரை அபராதம் விதிக்கச் சட்டம் அனுமதிக்கிறது. பெரும்பாலும் இதைத் தமிழகத் தகவல் ஆணையம் செய்வதில்லை. மாறாக, தவறு செய்யும் அதிகாரிகளைத் தப்பிக்கவைக்கும் பணியை மிகுந்த சிரத்தையுடன் செய்து வருகிறது.

சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பதில் கிடைக்காவிட்டால் மனுதாரர் மாநிலத் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு மனுக்களைப் பெறும் தகவல் ஆணையம், சம்பந்தப்பட்ட துறையை அணுகி ஏன் தகவல் கொடுக்கவில்லை என்று வினவி, நியாயமான காரணம் சொல்லப்படாதபட்சத்தில் அபராதம் விதிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த நடைமுறை தலைகீழாக உள்ளது. மேல்முறையீட்டு மனுக்களைப் பெறும் ஆணையம், தவறு செய்த அதிகாரிகளைத் துணிச்சலாகத் தண்டித்து, தகவலைப் பெற்றுத்தருவதை விடுத்து, அதிகாரிகளை அணுகி மனுதாரருக்குத் தகவல் கொடுங்கள் என்று கெஞ்சுகிறதாம். இவ்வாறு கெஞ்சுவது எதற்கு? மாநிலத் தகவல் ஆணையம் இப்படி நடந்து கொள்வதால்தான் தவறு செய்யும் அதிகாரிகள் துணிச்சலுடன் உலா வருகின்றனர். சில துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மனுதாரருக்கு அலுவலகக் கவரில் வெற்றுத்தாளை வைத்து அனுப்பி தாங்கள் தாமதிக்காமல் மனுதாரருக்குப் பதில் அளித்துவிட்டதாகப் பதில் கூறிவிடுகின்றனர்.

தகவல் ஆணைய அதிகாரிகளின் பணி நியமனத்தில் அரசியல் குறுக்கீடும், மக்கள் பிரச்னைகளின் வலியை அறிந்திராத, அக்கறையில்லாதவர்கள் நியமிக்கப்படுவதுமே ஆணையத்தின் மெத்தனச் செயல்பாட்டுக்குக் காரணம். எனவே, மக்கள் நலனில் அக்கறையுள்ள, தகவல் உரிமை ஆர்வலர் ஒருவரையும் தகவல் ஆணையராக நியமிக்கலாம்.

தில்லி அரசு சைலேஷ் பாபு என்ற தகவல் உரிமை ஆர்வலரைத் தகவல் ஆணையராகநியமித்துள்ளது. இந்த நடைமுறையைப் பின்பற்றுவது குறித்து தமிழக அரசும் பரிசீலிக்கலாமே?

பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தச் செயலர், தகவல் ஆணையாளர்கள், பொதுத் தகவல் அலுவலர்கள், தகவல் உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டம் சென்னையில் 2008-ல் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், முதல்கூட்டத்திலேயே தகவல் அறியும் மனுக்கள் மீது எடுக்கப்படும் அலட்சிய நடவடிக்கை குறித்து பொதுமக்களும், தகவல் ஆர்வலர்களும் சரமாரியாக எழுப்பிய வினாக்களுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை. இந்தக் கூட்டத்தை ஏன் கூட்டினோம் என்ற நிலைமைக்கு ஆளாகித் தொடர்ந்து கூட்டம் நடத்துவது கைவிடப்பட்டது.

இந்தக் கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும். மேல்முறையீட்டு மனுக்களை கையாளும் விஷயத்தில் வெளிப்படைத்தன்மையை தகவல் ஆணையம் பின்பற்றுவதில்லை. இதில் உள்ள நியாயம் என்ன என்பது புரியவில்லை. சாதாரண மக்களின் மனுக்களுக்குக்கூட தகவல் ஆணையம் ஆங்கிலத்தில்தான் பதில் அளிக்கிறது. இது அவர்களைச் சிரமத்துக்கு ஆளாக்கி வருகிறது. இதனால் தமிழில் மனு தாக்கல் செய்பவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்தில் தாக்கல் செய்வோருக்கு ஆங்கிலத்திலும் கடிதத் தொடர்பு இருப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்து 5 ஆண்டுகள் ஆகியும் இச்சட்டம் குறித்து தமிழக மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. இப்படியொரு சட்டம் இருப்பதே 90 சதவீத மக்களுக்குத் தெரியவில்லை. அரசின் இலவசத் திட்டங்களை விளம்பரப்படுத்துவதுபோல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் மாநிலத்தின் கடைக் கோடியில் வசிக்கும் குடிமகனும் அறியச் செய்திட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பள்ளிப்பாடங்களில் சேர்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதிகாரிகள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்படாமல் இருப்பதால்தான் தகவல் ஆணையம் அவசியமாகியுள்ளது. அதிகாரிகள் மக்கள் நலன் கருதி செயல்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்துவிட்டால் இந்தத் தகவல் அறியும் சட்டம் எதற்கு? ஆணையம்தான் எதற்கு?

இப்படியும் ஓரு கலெக்டரா ! நேர்மையின் இலக்கணம்

இப்படியும் ஓரு கலெக்டரா ! நேர்மையின் இலக்கணம்


‘‘மதுரை கலெக்டர் சகாயம், அதிமுகவினர் போல் செயல்படு கிறார். அவர் தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று பேசும் அளவிற்கு சென்றுள்ளார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.’’
மத்திய அமைச்சர் மு.க.அழ கிரி, மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் குறித்து அளித்துள்ள பத்தி ரிகை செய்தி இது. இதே சகாயம் குறித்து
டெக்கான் கிரானிக்கிள் மற்றும் ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் அளித்துள்ள விவரங்கள் என்ன?‘‘என்னை கோயம்புத்தூருக்கு மாற்றியிருந்த நேரம். என் பெண் யாழினிக்கு அப்போது மூன்று வயது. திடீரென்று ஒருநாள் இரவு அவள் மூச்சுவிட மிகவும் சிரமப் பட்டாள். மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றேன். உடனே மருத் துவமனையில் சேர்க்கச் சொல்லி விட்டார்கள். மாதக் கடைசி என் பதால் கையில் ஆயிரம் ரூபாய் கூட இல்லை. புதிய ஊர். அறிமுகம் இல்லாத மனிதர்கள். எனக்குக் கீழே வேலை பார்க்கிறவர்களிடம் கடன் கேட்கவும் சங்கடமாக இருந் தது. காஞ்சிபுரத்தில் நான் வேலை பார்த்தபோது எனக்கு நண்பராக இருந்த ஒரு பள்ளி ஆசிரியர் அப் போது கோவைக்கு மாற்றல் ஆகி வந்திருந்தார். அவரிடம் மிகவும் தயக்கத்துடன் நான்காயிரம் ரூபாய் கடன் கேட்கவும் ஓர் அரை மணி நேரத்தில் அவர் கொண்டு வந்து கொடுத்தார். உடனே குழந்தைக்கு சிகிச்சை ஆரம்பிச்சிட்டோம். ஆனால், சம்பளம் வாங்கியதும் அந்தக் கடனை அடைத்ததும்தான் என் மனதில் இருந்த சுமை இறங் கியது.’’

- இவ்வாறு சகாயம் கூறியுள் ளார்.

மதுரையில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பில் எல்ஐசி ஹவுசிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு. வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு என பகிரங்கமாகத் தனது சொத்துப்பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐஏஎஸ் அதி காரி சகாயம். ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ வாசகத்துக்குக் கீழ் தலைநிமிர்ந்து அமர்ந்திருக் கிறார் சகாயம்.

‘‘நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன் என் றால்,அப்போது என் கட்டுப்பாட் டில் 650 மதுபானக் கடைகள் இருந்தன. உரிமம் புதுப்பிக்க கடைக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் என்று கொடுக்கத் தயாராய் இருந் தார்கள். நான் ஒரு வார்த்தை சொல் லியிருந்தால், அடுத்த ஐந்தாவது நிமிடம் 65 லட்சம் ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய் கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில், மனநிலை என்ன மாதிரி இருக் கும்னு யோசித்துப் பாருங்கள். ஆனால், அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்கிற தில் ஒரேயொரு சிக்கல் மட்டும் தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரி கள் அதிகரித்துக்கொண்டே போவார்கள். அவர்களை மட்டும் சமாளித்துவிட்டால் போதும்.”

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் சொந்த ஊர். மற்றவர்கள் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட எடுத்துக்கொண்டு வரக்கூடாது என்று சொல்கிற அம்மா. நீ படித்து கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்க ளுக்கு எல்லாம் உதவணும்டா என்று சொல்லிக்கொண்டே இருக் கும் அப்பா. கலெக்டர்தானே, ஆயி டுவோம்னு படிச்சேன், ஆயிட் டேன். வேலைக்கு சேர்ந்த முதல் நாள் நம்ம மனது எந்த அளவுக்கு புத்துணர்ச்சியோடவும் புனிதமாக வும் இருக்கோ, கடைசி நாளின் போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணினேன்.

‘‘காஞ்சிபுரத்தில் கோட்டாட்சி யராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரியவர், தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப்பட லம் இருந்ததாகப் புகார் கொடுத் தார். மாதிரியை ஆய்வுக்கூடத் திற்கு சோதனைக்காக அனுப்பிய தில், மனிதர்கள் குடிக்க லாயக்கற்ற பானம் என்று அறிக்கை வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல் என்ன நடவடிக்கை எடுக்க ணும்னு ஓர் அறிக்கை தயாரித் தேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு வட்டாட்சியரிடம் எட்டு பூட்டு மட் டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந் தகத்துல இருக்குற பெப்சி கம்பெ னிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேலாளரி டம் கொடுத்துட்டு, கம்பெனியைப் பூட்டி சீல் வைக்கப் போறோம். எல்லோரையும் வெளியே வரச் சொல்லுங்கன்னு சொன்னோம். அந்த மேலாளரைவிட என்கூட வந்த வட்டாட்சியர் ஆடிப்போயிட் டார். சார், ...பெரிய பிரச்சனை ஆயி டும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு பதறினார். கலெக்டரைக் கேட்டால் சீல் வைக்க விடமாட்டார். சட்டப் படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய் யுங்கன்னு அவரை உள்ளே அனுப் பினேன். ஒரு மணி நேரம் கழித்து இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவர், சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். முதல் வர் கிட்ட பேசுறதாச் சொல்றாங்க, சார். என்ன பண்ணலாம்னு கேட் டார். உள்ளே இருக்கிறவங்களை கைது பண்ணிட்டு சீல் வைக்க வேண்டியதுதான்னு நான் சொல் லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி எட்டு பூட்டு களையும் போட்டு சீல் வெச்சுட் டோம்.

நான் உடனே அலுவலகத் துக்குப் போகாமல், ஒரு குக்கிராமத் துக்குப் போய் ரேசன் கடை, பள் ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு செய்துவிட்டு இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசலிலேயே காத்துக்கொண்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக் ரடரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக் குப் போன் பண்ணி இருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணினேன். யாரைக் கேட்டு சீல் வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க, தெரி யுமா? என்று எல்லோரும் கேள்வி கேட்டாங்க. நான் என் கடமை யைத்தான் சார் செய்தேன். மக்க ளுக்கு நல்லது செய்ததுக்காக, சஸ் பெண்ட் செய்தால் தாராளமாகச் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன். மறு நாள் இந்த செய்தி எந்தப் பத்திரிகையிலும் பெட்டி செய்தியாகக் கூட வரவில்லை. பெப்சிக்கு சீல் வைத்த சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.

இரண்டு நாள் கழித்து ஜூனியர் விகடன் இதழில் மட்டும் அந்தச் செய்தி விரிவாக வந்திருந்தது. அதற்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல் வைத்த விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிந்தது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாற்றி மாற்றி பந்தாடிட் டாங்க. நாமக்கல் மாவட்டம் முழு வதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு, ஏழு லட் சம் மரக் கன்றுகளை நட்டுவிட் டோம். அவற்றின் முறையான பராம ரிப்புக்கும் ஏற்பாடு பண்ணிவிட் டோம். இன்னும் பத்தாண்டுகளில் அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கனவே நொந்து போயிருக்கும் விவசாயி களை, குறை தீர்க்கும் கூட்டத் துக்கு வான்னு ஒவ்வொரு மாதமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக் கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் இரவு முழுவதும் அந்தந்த கிராமங் களிலேயே தங்கி, அவங்க குறை களை வாழ்ந்து பார்த்துட்டு வரு வேன். அப்போதுதான் அவங்க சொல்வதற்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாம் உணர முடியும்.
இப்படிப்பட்ட சகாயம் மீதுதான் அமைச்சர் மு.க.அழகிரி குற்றம் சாட்டுகிறார்

திமுக இருண்டகால அரசின் கடைசிப் பரிசு

திமுக இருண்டகால அரசின் கடைசிப் பரிசு


தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், ஆட் சியைவிட்டு அகல இருக்கும் திமுக அரசு கடைசி காலத்திலும் மக்களுக்கு துன்பத்தையே அளித்துவிட்டுச் செல்கிறது. கடந்த 5 ஆண்டு களாக பொய்யான வாக்குறுதிகளையே அளித்து மக்களை ஏமாற்றி வந்த அந்த அரசு மின்வெட் டை மட்டும் மறைக்க முடியவில்லை.

கடந்த பல ஆண்டுகளாக மாநிலத்தில் அறி விக்கப்படாமல் இருந்த மின்வெட்டு கடந்த 3 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப் பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்டதற்கும் அதிக மாக மின்சாரத்தை வெட்டிய சாதனைதான் திமுக அரசின் சாதனையாகும். ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து உபரி மின்சாரம் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு விற்ற நிலைமை மாறி, இன்று பல மாநிலங்களிடம் மின் சாரத்திற்காக கையேந்த வேண்டிய நிலை மையை திமுக அரசு ஏற்படுத்திவிட்டது.

வடசென்னையில் 1000 மெகாவாட், தூத்துக் குடியில் 2000 மெகாவாட், ஜெயங்கொண்டத் தில் 1000 மெகாவாட் என்று அறிவிப்புகளை சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் பட்ஜெட் உரையின்போது வெளியிடுவதையே வழக்கமா கக் கொண்ட திமுக அரசு, அந்த திட்டங்கள் நிறைவேற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில் லை என்பதைத்தான் மாநிலத்தில் நிலவும் மின்பற்றாக்குறை எடுத்துக்காட்டுகிறது.

கோடை காலத்தில் மின்வெட்டு கடுமை யாக இருக்கும் என்று தெரிந்துதான் சட்டப்பேர வைத் தேர்தலை ஏப்ரல் மாதத்திலேயே நடத்த வேண்டும் என்று திமுக அரசு ரகசியமாக தேர் தல் ஆணையத்திற்கு கோரிக்கை அளித்தது. மே மாதத்தில் தேர்தல் வைத்திருந்தால் திமுக வுக்கு டெபாசிட் கூட கிடைத்திருக்காது. தேர் தலை அவசர அவசரமாக நடத்துகிறார்கள் என்று ஆணையத்தின் மீது திமுக தலைமை பொரிந்து தள்ளினாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சி யாகவே இருந்தது.

இந்த நிலையில் மாநிலத்தில் மின்சார நிலைமை மிகக் கடுமையான நிலைக்கு சென்று விட்டதால், தமிழக அரசு வியாழனன்று அதிகா ரப்பூர்வமாக மின்வெட்டு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநி லங்களில் மின்பற்றாக்குறை உள்ளதாகவும், எனவே 50 கோடி ரூபாய் அளவிற்கு நாள்தோ றும் பிற மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கியும் நிலைமையை சரிக்கட்ட முடியாமல் உள்ளது என்றும், எனவே வேறு வழியின்றி வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தில் நாள் ஒன் றுக்கு தற்போது இரண்டு மணி நேரம் மின் வெட்டு என்பதற்கு பதிலாக மூன்று மணி நேரம் பகலில் மின்வெட்டு செய்ய முடிவு செய்யப்பட் டுள்ளதாக அறிவித்துள்ளது.

தலைநகர் சென்னையில் இதுவரை மின் வெட்டு இல்லாமல் இருந்த நிலைமைக்கு மாறாக, நாள்தோறும் பகலில் ஒரு மணிநேரம் மின்வெட்டு செய்யவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக பெரிதும் வருந்து வதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள் ளது. சொன்னதை செய்த அரசு மட்டுமல்ல, சொல்லாததையும் செய்த அரசு திமுக அரசு என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச் சர் கருணாநிதியிலிருந்து அக்கட்சியின் கடைசி தொண்டர் வரை முழங்கியதைப் பார்த்தால் மின் வெட்டு என்ற திமுக அரசின் தேர்தல் அறிக்கை யில் இடம் பெறாத வாக்குறுதியைதான் சொன் னார்கள் போலும்.

தயாளு பெயர் சேர்க்கப்படாதது ஏன்? சாட்சிகளின் வரிசையில் 143வது பெயர்

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த துணை குற்றப்பத்திரிகையில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் "டிவி'யில், 60 சதவீத பங்குகளை வைத்திருப்பவருமான தயாளு பெயர் இடம்பெறாதது, அரசியல் வட்டாரங்களில் பெரியதொரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், கடந்த 2ம் தேதி, முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் ராஜா உட்பட, ஒன்பது பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில், சி.பி.ஐ., தனது துணை நிலை குற்றப்பத்திரிகையை, நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. இதில், ஸ்பெக்ட்ரம் உரிமத்தை, டிபி ரியாலிட்டி குரூப்பைச் சேர்ந்த சுவான் நிறுவனம் பெற்றதற்காக, அதே குரூப்பைச் சேர்ந்த குசேகான், சினியுக் நிறுவனங்கள் மூலம், பிரதிபலனாக, 214 கோடி ரூபாய், கலைஞர் "டிவி'க்கு எவ்வாறு கைமாறியது என்பது குறித்து, விவரிக்கப்பட்டுள்ளது. இதில் கனிமொழி, சரத்குமார் உட்பட, ஐந்து பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன், முதல்வர் கருணாநிதி மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழியின் பெயர் இடம்பெறுமா என்ற கேள்வி தான், அரசியல் வட்டாரங்களை மிகவும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.

ஆனால், குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. கலைஞர் "டிவி' துவக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணக்கர்த்தாவாக இருந்தார் என, அதில் கூறப்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் முதல் குற்றவாளியான ராஜாவுடன், கனிமொழியின் தொடர்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருப்பதால், சி.பி.ஐ., தனது குற்றப்பத்திரிகையில், ராஜா அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அவருடன் கனிமொழி இடைவிடாது தொடர்பில் இருந்ததையும், ராஜாவுக்கு தொலைத்தொடர்புத் துறையை பெற்றுத்தருவதில் குறியாக இருந்து, அவர், அந்த துறைக்கு அமைச்சராக காரணமாக இருந்தவர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.ஸ்பெக்ட்ரம் லஞ்சப்பணம், கலைஞர் "டிவி'க்கு கைமாற்றப்பட்ட விஷயத்தில், கனிமொழியின் பங்கை குற்றப்பத்திரிகையில் விலாவாரியாக விளக்கியுள்ள சி.பி.ஐ., தயாளு பெயரை சேர்க்கவில்லை.

நேற்று முன்தினம் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், இதற்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளது குறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:தயாளுவின் வயது மற்றும் உடல்நிலையை மேற்கோள்காட்டியுள்ளது. தவிர, அவருக்கு தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியவில்லை. 2007, ஜூலை 27ம் தேதி அன்று நடந்த போர்டு மீட்டிங் மினிட் புக் விவரங்களில் இருந்து, தயாளு தனது இயலாமையை முறைப்படி போர்டுக்கு தெரிவித்துள்ளார்.கலைஞர் "டிவி' போர்டு மீட்டிங் ஆலோசனைகளை ஆராய்ந்த போதிலும், கலைஞர் "டிவி'யிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து பார்க்கும்போதும், முக்கிய முடிவுகள் எதிலும் இவர் பங்கேற்கவில்லை. இவர் சார்பாக சரத்குமார் தான் பொறுப்பேற்றுள்ளார். சரத்குமாருக்கு, தன்சார்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தையும் தயாளு அளித்துள்ளார்.கலைஞர் "டிவி'யின் எந்த ஒரு ஆவணங்களிலும் தயாளு கையெழுத்திட வில்லை. அந்த "டிவி'யின் போர்டில் கோரம் தேவைக்காக மட்டுமே இவரது இருப்பு அவசியப்பட்டு இருக்கிறது. தயாளு இந்த நிலை குறித்து முறைப்படி கம்பெனி ஆப் ரிஜிஸ்ட்டரார் தரப்புக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இதை வைத்து பார்க்கும்போது, கலைஞர் "டிவி'க்கு வந்த லஞ்சப்பண பரிவர்த்தனைகளில் அவர் ஈடுபட்டதாகவோ, அதுபற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இருக்க வேண்டுமென்பதையோ நிரூபிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவரைப் பொறுத்தவரை, அவர், 60 சதவீத பங்குகளை கலைஞர் "டிவி'யில் வைத்திருப்பதாக கூறப்பட்டாலும், அவர் ஒரு, "ஸ்லீப்பிங் பார்ட்னர்' என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளார்.கலைஞர் "டிவி'யில் அவர் வெறுமனே பார்வையாளராக மட்டுமே இருக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும். ராஜா, கனிமொழி, சரத்குமாருக்கும், பல்வா தரப்புக்கும் இடையில் நடந்த பேரங்கள் குறித்து, அவர் அறிந்திருக்கவோ அவர்களது கூட்டுச்சதியில் பங்கேற்றதாகவோ கருத வாய்ப்பில்லை என்பதால், அவரது பெயர் சேர்க்கப்படவில்லை.இவ்வாறு, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், துணை குற்றப்பத்திரிகையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் சாட்சிகள் பட்டியலில், தயாளு பெயர் இடம்பெற்றுள்ளது. மொத்தம், 29 சாட்சிகளின் பெயர்கள் உள்ளன. அதாவது, சாட்சி எண், 126லிருந்து, சாட்சி எண், 154 வரை உள்ளது. இதில், தயாளு பெயர், சாட்சி எண், 143 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

என் டைரி - கனிமொழி

சிபிஐயிடம் சிக்கிய என் டைரி - கனிமொழி


பெயர்: ஸ்பெக்ட்ரம் கனி

பழைய பெயர்: கவிஞர் கனிமொழி

பழையமுகவரி:

c/o ராசாத்தி
சிஐடி காலனி
சென்னை

 புதிய முகவரி:

c/o சிபிஐ
டெல்லி

தொழில்:டிவி தொடங்குவதற்காக கைமாத்தாக பணம் வாங்குவது

பிடித்த வசனம்:

1.ராசாத்திக்கு கனிமொழி மகள்;கனிமொழிக்கு நான் அப்பா - கருணாநிதி
 
2.கருணாநிதி பராசக்தி வசனம்
போகிறேன்...எதற்காக போகிறேன்? ஏன் கம்பி எண்ண போகிறேன்?

டிவிக்கு பணம் வாங்கியதை,வாங்கவில்லை தமாஷுக்குக் கூறினேன். லஞ்சம் வாங்காமல் இருப்பது காட்டுமிராண்டித்தனம் என்று காட்டமாகக் கூறினேன்.

குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.இப்படியெல்லாம் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று இல்லை.

நிச்சயமாக இல்லை.ஊழல் செய்யதததை குறும்பாகக் குத்தி காட்டினேன்.

ஊழல் கூடாது என்பதற்காக அல்ல.ஊழல் செய்கிற குடும்பத்திற்கு பங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காக.

ஸ்பெக்டரம் விற்றலை ஆதரித்தேன்.அது தீங்கு தரும் என்பதால் அல்ல.அது நல்லவர்களின்  தீர்த்த யாத்திரை தலமாக மாறி விடக்கூடாது எனபதற்காக.

விபரங்களை கேலி செய்தேன்.விபரங்கள் எனக்கு விரோதம் என்பதாலா? அல்ல! விபரங்கள்,சி.பி.ஐ நடத்தும் விசாரணையில் வினையாகி விடக்கூடாதே என்பதற்காக.

பிடித்த தோழர்: ராசா


பிடித்த ஆசை: திகார் ஜெயிலில் கவிதை எழுத வேண்டும்

எதிரி:அம்மாவின் பாசம்;நிரா நிராடியாவின் வேசம்

ரசித்தது: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ சீக்கி அடிப்பது

சமீபத்திய சாதனை:குற்றப்பத்திரிக்கையில் குற்றச்சாட்டு

பிடித்த பாடல்: அண்ணன்  என்னடா...தம்பி என்னடா...அவசரமான உலகத்திலே

மிகவும் பிடித்தது : அண்ணமார் கதைகள்

சமீபத்திய எரிச்சல்: தயாளு அம்மாள் தப்பியது

சமீபத்திய ஆச்சரியம் :தலைவர் இன்னும் என்னை நம்புவது

கேட்க விரும்பு  கேள்வி:   இனியாவது திகார் ஜெயிலுக்கு  வருவீங்களா ,அப்பா?

அரசியலுக்கு கெட்டிக்காரன்

ரெண்டு பொண்டாட்டிக்காரன்;அரசியலுக்கு கெட்டிக்காரன்

                   வாக்காளப் பெருமக்களே! சொகுசு பங்களா இல்லாத பரதேசி நான்! ரியல் எஸ்டேட் இல்லாத இளிச்ச வாயன்! ஒரு பவுன் தங்கம் கூட இல்லாத தரித்தரி! இதையெல்லாம் வாங்கணும்முன்னு ஆசைப்படற இந்த பரிதாபத்துக்குரிய ஜீவன் மீது இரக்கப்பட்டு இந்த ஒரே ஒரு முறை மட்டும் என்னை எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்க உங்களை கெஞ்சி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
               தேர்ந்தெடுக்கப்பட்டால் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவேன்;காலடியிலேயே தவம் கிடப்பேன். கட்சி வேறுபாடுன்றி காலில் விழும் அவினாசி தொகுதி  வேட்பாளர் பாணியை இனி வருங்காலங்களில் கையாளலாம்.இது ஓட்டு கேட்க வரும் போது அனைத்து வேட்பாளர்களின் மனப்பாடம் செய்யப்பட்ட வாக்குறுதி! வாக்குறுதி!! வாக்குறுதி?

              ஐந்தாண்டுகள் எம்.எல்.ஏ வாக இருந்தால் ஆடம்பரமாக வாழலாம்;அடித்து பிடித்து அமைச்சராகி விட்டால் ஐம்பது    தலைமுறை வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம்.

                 ஜெயித்து விட்டால்  கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார், காலுக்கு அடியில் தவம் இருப்பார் எதாவது 'செட்டப் ' வீட்டில் தான்.இந்த ' கெட்டப் ' க்குத்தானே ஆளாய் பறப்பது! அதே தொகுதியில் நடக்கும் காது குத்து விழாவில் திடுப்பென தொன்றி ஒரு ஆயிரம் நோட்டை மொய் வந்து அனைவருக்கு ஒரே அடியாக காது குத்தல் நடத்தி விடுவார்.ஊருக்கெல்லாம் மொய்;உச்சரிப்பது பொய்.

                        இப்படி அரசியலில் ஆளாளுக்கு ஒரு துணையை எதற்கு தேட வேண்டும்? சேர்த்த சொத்தை பாதுகாக்க வேண்டும்; சேர்த்த துணைவிக்கு துணையாக சொந்தம் என்று வெறும் சொத்து மட்டும் இருக்க வேண்டும்.யாரோ! புண்ணியவான் கருணாநிதி, வீரபாண்டியார் சொத்துக்களில் இருந்து திருமங்கல பார்முலா போல திருமங்கள பார்முலாவை கண்டுபிடித்து விட்டான் போலும்.அது என்ன திரு ' மங்கள' பார்முலா?

                முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு வெறும் ரூ 4.92 கோடி மட்டுமே! அவரை விட அவரது மனைவி தயாளு அம்மாளுக்கு சொத்து அதிகம் ரூ 15.45 கோடி.அதைவிடத் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு அதிகம் ரூ 23.97 கோடி.

               பாவம்,வீரபாண்டியாரின் சொத்து மதிப்பு ரூ 75.18 லட்சம் தான். அவரது மனைவி ரங்கநாயகியின் சொத்து மதிப்பு ரூ 93 லட்சம் தான்.ஆனால், துணைவியார் லீலாவின் சொத்து ரூ 2.25 கோடி.

       இந்த புள்ளி விபரங்கள் தான் பொன்முடி,துரைமுருகன்,பெரிய கருப்பன், பரிதி இளம் வழுதி, தங்கம் தென்னரசு ஆகிய அமைச்சர்களின் மனைவிகளை பாடாய் படுத்துகிறது.காரணம்,இந்த அமைச்சர்களின் மனைவிகள் அமைச்சர்களை விட அதிக சொத்துக்கள் வைத்துள்ளனர். இந்த அமைச்சர்கள் இன்னும் அதிக சொத்துக்கு ஆசைப்பட்டால் என்ன ஆகும்?பதில்...

                       தலைப்பை மீண்டும் படியுங்கள்...

பயந்து போய் அஞ்சா நெஞ்சனுக்கு ஆதரவு

அலறும் அஞ்சா நெஞ்சன் அழகிரி;கதறும் நோஞ்சான் அதிகாரி

காசு தான் கொடுக்க முடியல...போஸ் ஆவது கொடுக்கிறேன்...
                    என்னை சுதந்திரமாக தேர்தல் பணிகளை செய்ய விடாமல் கலெக்டர் சகாயம்  தடுக்கிறார்.மத்திய மந்திரி அழகிரி மீதும். திமுக மீதும் பொய் வழக்கு போட முயற்சிக்கிறார் என்று கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரியான மதுரை ஆர்.டி.ஓ சுகுமாறன் சொன்னதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

                      இதை ஒரு அரசியல்வாதி கூறி இருந்தால் அதைப்பற்றி யாரும் கவலப்படத்தேவையில்லை.ஆனால், ஆர்.டி.ஓ தனது  மேல் அதிகாரியின் மீது குற்றம் சாட்டுகிறார்.அப்படி ஒரு மேல் அதிகாரியின் மீது அரசியல் வாதி குற்றம் சாட்டி விட்டு சும்மா... வீட்டில் இருக்க முடியாது. காரணம், அரசூழியர்களுக்கான நடத்தை விதிகள்.அதனால்,பயந்து போய் அஞ்சா நெஞ்சனுக்கு  ஆதரவு கொடுத்த அதிகாரி நெஞ்சு வலியில் ஆஸ்பித்திரியில் அட்மிட் ஆகிவிட்டார்,வேறு வழி?

                     ஒரு மேல் அதிகாரி கிள்ளினார் என வெறுமெனே சொல்லி விட முடியாது.அதை தக்க ஆதாரத்தோடு குற்றம் சாட்டப்பட்டும் கீழ் நிலை ஊழியர் தான் நிருபிக்க வேண்டும்.இந்த விஷயத்தில் ஆர்.டி.ஓ எந்த ஆதாயதோடு இதை கூறியிருப்பார் என்று விரல் சூப்பும் குழந்தை கூட சொல்லி விடும்.அப்படி அரசியலும் அதிகாரிகளுக்கும் இடையேயான உறவு.ஆனால்,இது தேர்தல் சமயத்தில் கூட நட்பு தான்.

                  இதனால், மதுரை கலெக்டர் கலங்குவார் என நினைத்தால் மேலும் கலக்குகிறார். தனக்கு ஆதரவாக செயல்பட்ட, செயல்படும் அதிகாரிகளுக்கு ஆப்பு வைக்கும் கமிஷன்;வாக்காளர்களுக்கு போய் சேராத கமிஷன் என ஏக கடுப்புகளுக்கு உள்ளாகி உள்ளார்.

                 இப்போது பணம் இருக்கிறது;போலீஸுக்கு மனம் இல்லை.அழகிரியின் வலது கரத்தின் காரில்  சோதனை; என்னடா... இது மதுரைக்கு வந்த சோதனை? உடன்பிறப்புகளை திருவிளையாடல் வசனம் பேசவைத்து விட்டது தேர்தல் கமிஷனின் திருவிளையாடல்கள்.

                திருவிளையாடல் படத்தில் சிவன் மேல் அடித்த அடி மன்னன் மேல் விழும். அது போல் அழகிரியின் மேல் அடித்த அடி கலைஞருக்கு வலிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க போகிறது.அதனால் இது அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி என சொன்னார்;எமர்ஜென்சி விளக்கு வெளிச்சத்தில் பணம் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லி இருப்பாரோ!
                             இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அழகிரியின் அரசியல் எதிரிகளுக்கு அழகிரி, திருமங்கல பார்முலாவிற்கு மங்களம் பாடிய தேர்தல் கமிஷனின் நடவடிக்கையால்,  சிக்கிக்கொண்டு சீக்கி அடிப்பது சந்தோசம் தான் என்றாலும் அவர்களுக்கும் உள்ளூர பயம் தான்,எங்கே? அதிமுக கூட்டணி ஆட்கள் சிக்கி விடுவார்களோ? என்று. என்ன செய்வது,தமிழக அரசியலில் எல்லொரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.தூக்கம் போய் துக்கம் வந்து விட்டது.
                     அரசியல்வாதிகள் ஓட்டை எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள்.மக்கள் பணத்தை எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள்.
                      ஏமாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது.

கருணாநிதி விரக்தி..ஸ்டாலின்,அழகிரி செம குஷி

தேர்தல் ரிசல்ட் வர,இன்னும் நாட்கள் இருந்தாலும், இந்த கொடுமை ஆகாதுடா சாமி என இரு கட்சியினரும் புழுங்கி கொண்டிருக்கின்றனர்..அதுவும் கலைஞருக்கு இன்னும் சங்கடம்...நான் முதல்வர்...எனது ஆட்சியில் கொள்கை முடிவுகளை செயல்படுத்தக்கூட பைல் பார்க்ககூடாதா ..என தேர்தல் கமிசனிடம் சீறுகிறார் ..
தேர்தல் கமிசனோ ,கூலாக ..நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்..சும்மா இருங்க முதல்வரே என சொல்லிவிட்டது ....
 

இதற்கிடையில்,அரசு துறைகளை அவசரமாக மாற்றுகிறார்கள் ...முக்கிய பைகளை அவசரமாக அழிக்கிறார்கள் என ஜெயலலிதா தேர்தல் கமிசனருக்கு தந்தியடிக்க,கலைஞரோ அவதுறு வழக்கு  என பூச்சாண்டி காட்டுகிறார் ...இது என்னடா கொடுமையா இருக்கு...நான் சிவனேன்னு வீட்டோடையே கிடக்கேன் என அமைச்சர்கள் பலரும் வீட்டுக்குள்ளயே மட்டையாகி கிடக்கிறார்கள் ....

  2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி பெயரையும் சேர்க்கப்பட்ட பின்,இப்போது தி.மு.க விரக்தியின் உச்சத்திற்கே சென்றே விட்டது.. தயாளு அம்மாள் பெயர் சேர்க்கப்படாததற்கு
காரணம் அவர் கலைஞர் டிவி நிர்வாகம்,ஸ்பெக்ட்ரம் விசயத்தில் தலையீடு என எதுவும் எதுவும் இல்லை..என சி.பி.ஐ சொல்லியிருக்கிறது..
பத்தாம் பசலித்தனமான காரணமாக இருந்தாலும்...வயசான காலத்துல பாவம் அந்தம்மா தலைவருக்கு மனைவியான, தோஷத்துக்கு ஏன் கஷ்டப்படணும்னு விட்டுட்டாங்க..போல.

ஆனா ஒன்னு,,,கனிமொழி பெயர் குற்றப்பத்திரிக்கையில சேர்க்கப்பட்டதும் அண்ணன்கள் இருவருக்கும் செம குஷியாக இருந்திருக்கும்.எங்க நமக்கு போட்டியாக தமிழக அரசியலில் வந்துடுவோரோன்னு நினைச்சிருப்பாங்க ...அவங்களுக்கு சர்க்கரையா இருந்திருக்கும்..இனி அந்த வழக்கு போராட்டத்திற்கே கனிமொழிக்கு நேரம் சரியாக இருக்கும்....


கனிமொழிக்கு பதிலாக ,பலியாடாக கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் காவு கொடுக்கப்படலாம்.. என்கிறார்கள் ...பாவம் யார் பெத்த புள்ளையோ..


வரும் 27 ஆம்தேதி,தி.மு.க உயர்நிலை குழு கூடி ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி முடிவு செய்யும் என்கிறார்கள்...அதிகபட்சம் என்ன செய்யமுடியும்..?ஒண்ணுமே பண்ண முடியாது ..தி.மு.க மந்திரி சபையிலிருந்து விலகினால் அது இன்னும் ஆபத்துதான்..இருக்கும் ஒரு பிடியும் போய் விடும்...வன்முறை வேண்டுமானால் செய்யலாம் அதுதான் இவர்களின் ஒரே பிரம்மாஸ்திரம்..


அது இவர்கள் ஆட்சியில் செய்யமாட்டார்கள் ...ஜெயலலிதா முதல்வர் ஆனால் செய்வார்கள் ...அதற்கு முன் டிரைலர் பார்க்க வாய்ப்பிருக்கு..சி.பி.,ஐ தன குற்றப்பத்திரிக்கையை வால்யூம் ௧ எனதான் சமர்ப்பித்து இருக்கிறது..இன்னும் பல வால்யூம்  வரலாம்..

ஆனா ஒண்னு..கலைஞர் தனது
வீட்டு குடும்ப பெண்களையும் அரசியலில் ஈடுபடவைத்து, அவர்களை ஊழலிலும் ஈடுபடவைத்துவிட்டார் .

சாய் பாபாவும் நாற்பது திருடர்களும்

ஸ்டாலின் நேரில் அஞ்சலி: சாய் பாபாவும் நாற்பது திருடர்களும்


             சாமியார் என்றாலே சர்சைகளுக்கு அளவு இருக்காது. ஆனால்,இவரால் சில சர்ச்சைகள் வந்தாலும் சாய்பாபா மீது பக்தர்கள் கொண்ட நம்பிக்கை கொஞ்ச நஞ்சமல்ல.
                    சாய்பாபா சர்ச்சைக்குரிய மனிதரா? அவரை சுற்றி நடைபெற்ற அல்லது நடைபெறுகிற விஷயங்கள் சர்ச்சைக்குரியவையா? "எல்லாவித புகார்" களும்  ஆசிரமத்துக்குள்ளே ஜீவ சமாதி அடையும் நிலையில்
 பாபாவே' ஜீவ சமாதி' ஆகப்போகிறார் என்ற புரளியை விபூதிகளில் பரப்பி விட்டு பக்தர்களின் நெற்றியில் பட்டை நாமம் போட முயன்றது ஏன் என்று தெரியவில்லை.

                     இன்றைய காலகட்டத்தில் ஆன்மீகம் சட்டத்திற்கு உட்பட்டது, ஜீவ சமாதி ஏறக்குறைய தற்கொலைக்கு சமம்.அப்படியென்றால்,அதை தூண்டியவர்களின் மீது வழக்கு வருமே! அதனால்,பகவானின் அசைவற்ற உடலுக்கு காவலாக மட்டும் இருக்க கற்றுக்கொண்டார்கள்.

                 சாய் பாபா ஒரு முறை , நான் 96 வயதில்தான் இந்த அவதாரத்தை முடித்து கொள்வேன் என்று சொன்னார்.கடவுள் அவதார எடுத்தவருக்கே 86 வயதில் ஆயுள் முடியும் போது பக்தர்கள் தங்களது ஆயுளை நீடிக்க சாமியார்களை நாடிப்போவது தான் ஆச்சரியமாய் இருக்கிறது! அடக்கடவுளே !!

                    50க்கும்  மேற்பட்ட கிராமங்களுக்கு மருத்துவம், கலவி, போக்குவரத்து, குடிநீர் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்த 'சாய்பாபா' தான் உயிருடன் இருக்கும் விஷயத்தை சொல்ல எந்த ஏற்பாடும் செய்யாதது ஏமாற்றம் அளித்ததாய் இருந்தது பக்தர்களுக்கு.

                  சாய்பாபா இருக்கிறாரா... இல்லையா? என கேள்வி கேட்டு கோர்ட் படியெறியப்பின் தான் இறந்ததாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர் இறந்தது எப்போது என  அவரை கவனித்த 40 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு மட்டுமே  தெரியும். அவர்கள் அதை மறைத்திருந்தால் அவர்களும் திருடர்கள் தான்.

               பாபாவின் சொத்துக்களை ஆந்திரா அரசு கையங்கப்படுத்தும் முயற்சியில் கையை சுட்டு கொள்ளுமா? அல்லது சுருட்டிக்கொள்ளுமா? என்ற விவாதம் இன்னும் முடியவில்லை. ஆனால், இனி இந்த விஷயம் சூடுபிடிக்க ஆரம்பித்து விடும்.

                       இதுவரை சேவை மையமாக மட்டும் பகவான் நடத்தி வந்த இலவச சேவைகள்  முடங்கி போகலாம். அரசின் முத்திரைகளாகிய லஞ்சம் மட்டுமே இனி ஆசி வழங்கும்.

                    ஆசிரம் என்ற் குகைக்குள் இனி அரசியல்வாதிகள் புகுந்தால் பொக்கிஷங்கள் இனி புதைக்கப்படலாம் அல்லது புதைக்கப்பட்டவை எழுந்து வரலாம்;அது அரசியல்வாதிகளின் லாபத்தை பொறுத்தது.

                    நாத்திகம் பேசும் எல்லா அரசியல் தலைவர்களும் சாய்பாபாவின் ஆசி பெற ஆசையாய் போனதுண்டு; தயாநிதி மாறனும், துரை முருகனும் மோதிரம் பெற்ற கதையும் உண்டு.தமிழக அரசு பாராட்டு விழாக்கூட கருணாநிதி தலைமையில் நடத்தியது.அதன் நினைவாக ஸ்டாலின் அஞ்சலி செலுத்த புட்டபர்திக்கு செல்வது ஒன்றும் ஆச்சரியம் அளிக்கப்போவதில்லை.

கனிமொழி: குளிர் காயும் போது.

(பாட்டு)
நீ முன்னாலே போனா...
நான் பின்னாலே வாரேன்...
நிருபர்:கலைஞர்  டி.வி எப்படி வந்தது?
கனிமொழி:நான் மேடையில் கவிபாடும் கோடியில் ஓருவள் .நான் டி.வியில் கவி பாடுவது மட்டுமே என் வேலை.ஒரு வேளை டி.விக்கு முன் கலைஞர் என்ற வார்த்தையை சேர்த்திருக்கலாம்.
நிருபர்:உங்கள் மூவரின் தொடர்ப்பு என்ன? அதாவது கருணாநிதி,ராசாத்தி,நீங்கள் .
கனிமொழி:அப்பா சொன்னதையே நானும் திரும்ப திரும்ப அடித்து சொல்வேன்.அப்பாவுக்கு நான் மகள்;ராசாத்தி என் அம்மா.
நிருபர்:உங்கள் உறவு  அல்ல. பண தொடர்பான விஷயங்களை சொல்லுங்கள்.
கனிமொழி:எனக்கு அது பற்றி கேட்டால் பற்றிக்கொண்டு வரும். எனக்கு யாரொடும் பண தொடர்பு கிடையாது.எனக்கு  தெரிந்தெல்லாம் ராசாவுடனான மன தொடர்பு தான்.
நிருபர்: இருந்தாலும்,உங்கள் பெயர் அடிபடுகிறதே! எப்படி?கனிமொழி நேற்று ' கனி'மொழி;இன்று 'money 'மொழி;நாளை 'களி' மொழி. இதில் எது அடிபட்டது?
நிருபர்: money  எனக்கு கனி ராசாவுக்கு என தந்தை கூறியதாக ஊரே சிரிக்கிறதே! அப்படியானால்,ஊழலில் உங்களின் பங்கு என்ன?கனிமொழிஇதில் எதுவும் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால்.இவை இரண்டும் உண்மைக்கு புறம்பானவை அல்ல.
நிருபர்:சரி.அப்படியானால் உங்களுக்கு லட்ச கணக்கான பணம் எங்கிருந்து வந்தது.கனிமொழி:
கவிபாடுவேன் இனி
பணத்தால் கொழுத்த கனி
பணங்காட்டு நரி தான்
மக்கள் முகத்தில் கரி தான்
லட்சம் ஒரு லட்சியம் அல்ல;
கோடியென்றே உரைத்திடுவேன்
காட்டி விட மாட்டேன்
வேட்டியை விட மாட்டேன்.

நிருபர்:நேரிடையாக பதில் சொல்லுங்கள் கனி; பொறுமை இல்லை இனி. நாட்டின் பெரும் ஊழல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கனிமொழி: (ஆகா...ஆகா) "ஊழல்'  என்பதே நாங்கள் கண்டுபிடித்தது தானே!
நிருபர்:இதே சிரிப்பை... நீராடியாவுடன் பேசும் போது சிரித்தது ஞாபகம் வருகிறதா?கனிமொழி: ராசாவுடன் பேசும்போதா சிரித்தேன்? ஒரு பொம்பளை இன்னொரு பொம்பளையுடம் பேசி சிரித்தால் உங்களுக்கு என்ன?
நிருபர்:மாறி... மாறி பேசுவது உங்களுக்கு சிக்கலை தரும்.ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்கனிமொழி: ஐ.நா சபையில் உரைமாற்றி படித்த கிருஷணாவை தூக்கிலா போட்டார்கள்? இல்லை, மாறி மாறி பேசும் மன்மோகன் சிங்கை வீட்டிற்கா அனுப்பினார்கள் ? சிக்கலும், விக்கலும்  உங்களுக்கு தான் எங்களுக்கு மக்கள் தான் எல்லாமே!
நிருபர்:உங்கள் தந்தை ஊழலுக்கு எதிராக நெருப்பாக இருக்கும் போது நீங்கள்  சிக்கிக்கொணடது எப்படி?கனிமொழி: குளிர் காயும் போது.
நிருபர்:உங்களை சுற்றி சூழ்ச்சி வலை பின்னியிருப்பது போன்று தெரிகிறதா?கனிமொழி: அதெல்லாம், தெரியவேண்டியதில்லை.மக்களுக்கு என்னவெல்லாம் தெரியாமலிருக்க வேண்டும் என தெரிந்து கொண்டிருந்தால் போதும்.
நிருபர்:கடைசியாக ஒரு கேள்வி.உங்கள் மன நிலை எப்படி உள்ளது?
கனிமொழி:மன நிலை பண நிலை எல்லாம் நல்லாத்தான் இருக்கு.

தமிழ்பெண்கள் கற்பழிப்பு - கைதிகள் சுட்டுக்கொலை; ஐ.நா., விசாரணைக்குழு அதிர்ச்சி ரிப்போர்ட்

இலங்கையில் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடந்த ஒருமாத காலத்தில் போராட்டத்திற்கு தொடர்பு இல்லாத 10 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்களை குண்டு போட்டு கொன்றுள்ளது என்றும், சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கின்றனர் என்றும் ஐ.நா., சபை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்டப் போர் நடந்தது. இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாக எழுந்த புகாரை அடுத்து ஐ.நா., சபை ஒரு குழு அமைத்து விசாரித்தது. இந்த விசாரணையில் பெருமளவில் பிரயோகிக்கப்பட்ட ஆயுதங்களால் இலங்கை அரசு பல ஆயிரக் கணக்கான பொதுமக்களைக் கொலை செய்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. அதே நேரத்தில் புலிகள் பொதுமக்களை , மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றும் அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறது.

ஆஸ்பத்திரிகள், ஐநா மையங்கள் மற்றும் சர்வதேச உதவிக் குழுவான செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சொந்தமான உதவிக் கப்பல் ஆகியவற்றின் மீது இலங்கை அரசுப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஏபி செய்தி நிறுவனத்தை ஆதாராமாக மேற்கோளிட்டு ஐநா காட்டியுள்ளது. மனித உரிமை மீறல் நடந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இலங்கையில் ஐ.நா., அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இதில் இலங்கை அலட்சியமாக இருந்ததும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கைதிகளை சுட்டுக்கொன்ற கொடூரம்: சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் அவர்களின் தலைகள் மீது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்ஈழ புலிகள் சுமார் 3,லட்சத்திற்கும் 30 மேற்பட்ட பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் .


ஐநா சபை விசாரணை அறிக்கையை வெளியிடக் கூடாது என இலங்கை கேட்டுக் கொண்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானால் மறுசீரமைப்புப் பணிகள் பாதிக்கப்படக் கூடும் என்றும் அந்நாடு கூறியிருந்தது. இலங்கையின் இந்தக் கோரிக்கையை ஐநா ஏற்க மறுத்து விட்டது.


இந்த அறிக்கை தவறானது என்றும் முறைகேடானது என்றும் இலங்கை அரசு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கு எல்லோரும் ராஜபக்சேவை குறை கூறுகின்றார்கள். அவன் இனம் வேறு நம் இனம் வேறு. (சிங்களவர்களை பொறுத்தவரை அவன் உன்னத தலைவன்.அவன் அவனுடையஇனத்தை காத்த தலைவன் நம்மை பொறுத்தவரை அவன் ஒரு பிணம் தின்னும் கழுகு.) நம் இனத்தை காக்க நமக்குதான் உன்னத தலைவன் இல்லாமல் போயிற்றே. நம் இனம் அழிகின்றதே என நாம் என்ன செய்தோம். நம்மால் முடியவில்லை ஏனென்றால் நம்மிடம் எந்த பதவியும், எந்த பலமும் இல்லை. ஆனால் பதவி, பலம், இருந்தும் சில கயவர்கள் தமிழன், தமிழன் என்றே சொல்லி, சொல்லி நம் கருவை அழித்த அந்த பெரிய மனிதரை எந்த பட்டியலில் சேர்ப்பது. அந்த ஆளையும் தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்ற மனிதர்கள் தான் நாம் என்பதை யாரும் மறந்து விடவேண்டாம். இன்னமும் பல முத்துகுமரன்கள் மரித்தாலும் நமக்கு சூடு, சொரணை எல்லாம் வராது. ஏனென்றால் நாம் தான் முழுமையான மாயை இல் மூழ்கி கிடக்கின்றோமே. மது, கேளிக்கை,இலவசம் இது போதும் நமக்கு. பின் ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன? இனியாவது இந்த அற்ப மாயைலிருந்து விடுபட்டு நம் இனம் காக்க ஒன்று பட்டு விழித்து எழு. இப்பவும் நீ விழித்து கொள்ள வில்லை என்றால் நாளைய இளைய தலைமுறைக்கு நம் இனம் இலங்கையில் இருந்த சுவடே தெரியாமல் போகும் பொழுது ஏச்சிகும், பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும் என்பதை மறக்கவேண்டாம் .நம் மனதில் இந்த தாகம் கொழுந்து விட்டு எறிந்தால் தான் நம்முடைய உடன் பிறவா மிச்சம் மீதி உள்ள சகோதர, சகோதரிகளை காக்க இயலும். இந்த விஷயத்தில் மாநில, மத்திய அரசுகள் ஒன்றும் செய்யாது. ஏனென்றால் 500 க்கும் மேற்பட்ட இந்திய பிரஜைகள் (தமிழக மீனவர்கள் ) கொலை சிங்கள அரசால் செய்யப்படும் பொழுது கேட்காத அரசுகள் அடுத்த நாட்டில் வாழும் இலங்கை பிரஜை களுக்காக,அடுத்த நாட்டின் பிரச்சினையை எப்படி கேட்கும்.ஆதலால் நாம் தான் அவர்களுக்கு இதை உணர்த்த வேண்டும். இனியும் நான் தமிழன் என்று கூறும் கயவர்களை நம்ப வேண்டாம். அவர்களுக்கு அவர்களுடைய மக்கள் நலம் ஒன்றே போதுமே. விழித்து கொள் தமிழா! நல்ல விடியலை நோக்கி!!!! நாளைய தமிழகம்????

நையாண்டி மேளம்

ராஜாமீது  லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டும்,கனிமொழி மற்றும் சரத்குமார் மீது கூட்டு சதியில் பங்கேற்றதாகவும் 48 பக்ககுற்றப்பத்திரிக்கையில் (+48) குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி ராஜாவுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார் என குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

           இதை விசாரணைக்காவா? சிபி ஐ வேண்டும். இந்தியாவில் இந்த இருவரின் நாகரீக தொடர்பு அனைவருக்கும் நாடறிந்த பழக்கம்!வழுக்கு!! இவர்கள் தொடப்பில்லாத காலம் என்பது தொலைதொடர்பு துறைக்கு இன்னொரு புழக்கம்!இழுக்கு!!

          கருணாநிதி குடும்ப பெயர் வரும் என பத்திரிக்கைகள்  என கட்டியம் கூறி வந்தன.இது எப்படி சாத்தியமாகின்றன? எட்ட நின்று வேடிக்கைப்பார்க்கும் பத்திரிக்கைகளுக்கு கனிமொழியின் பெயர் வரும் என தெரிந்து இருக்கும் போது கனிமொழி என்ற பெயரை சூட்டிய  அப்பாவுக்கும்,ஸ்பெக்ட்ரம் என்றால் என்னவென்று தெரியாத விரல் சூப்பும் கடைக்குட்டி பாப்பாவுக்கும் தெரியாமலா? இருந்திருக்கும்.

              தான்  MANY  மற்றும் MINI எமெர்ஜன்சியை சந்திந்ததாக கூறிக்கொள்ளும் முதல்வர் MONEY  எமர்ஜென்சில் 200 கோடி வாங்கிய  பாசத்தில் முதல் ஆளாய், ஆணவம் வேண்டாம், காலம் கனியும் என முதிர்ந்த வார்த்தைகளை உதிர்ந்துள்ளார்.  அரசியல் சாணக்கியத்தில் கருணாநிதியை வெல்ல முடியாத காலம் இருந்தது என்பதை யாராலும் மறக்க முடியாது.


          ஆனால், சதுரங்க கட்டைகள் அனைத்தும் கனிமொழியை  நோக்கி திரும்பி விழும் போது தோல்வியை தவிர்க்க முனைவது தான் புத்திசாலி ஆட்டம். அதில் ராசாவை இழந்தாயிற்று. இனி அரசியல் சதுரங்கத்தில் ராணியை காப்பாற்ற காய்களை அங்குங்கும் நகர்த்த வேண்டியது தான்.

         அதற்காக நாளை திமுக வின் உயர்நிலைக்குழு கூடி விவாதிக்கிறது. அக்கூட்டத்தில் முடிவில் ஆரிய - திராவிட விளையாட்டில் கனிமொழியின் பெயரை  சேர்த்தற்காக கடும் கண்டனமும், தயாளு அம்மாளை கடைசி நேரத்தில் பதிலி வீரராககூட  இல்லாமல் பார்த்துக்கொணடதற்காக நன்றிகள்  என தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம். அமைச்சர்கள் வாபஸ் என்ற பழைய ஆட்டத்தை  இனி அரங்கேற்ற செய்ய நினைத்தால் அதை ரசிக்கப் போவது வீரமணி உள்ளிட்ட  விளையாட்டுப்பிரியர்கள்  தான்.

       இந்தியஅரசியலில் எந்த விளையாட்டும் முடிவுக்கு வந்ததில்லை.சிந்துவெளி நாகரீகம் எனபது நவீன காலத்தில் வெளிவரும் கடந்த கால ஆச்சரியம்; அது எப்போது தொடங்கியது;எப்படி அழிந்தது என்பதான் உண்மைகள் நம்மை ஆச்சரியத்தில் மலைக்க வைக்கின்றன. 

           அது போலத்தான் ஊழலின் உண்மைகள் தெரியவரும் போது தண்டனைப்பெறப்போகிறவர்கள்  வாழ்ந்து முடித்து இருப்பார்கள்;அவர்களின் சந்ததிகள் சத்தம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். ஊழல் நிருபீக்கப்பட்டால் பல வருடங்களுக்கு பின் நீதி வென்றது! என்ற வழக்கமான வாக்கியத்தோடு ஊழல் புதைக்கப்படும்.

              அப்போது புதியாய் ஊழல் செய்வோர்! அதற்கு மலர்வளையம் வைத்து வணங்குவர்;எப்பொதும் போல் சராசரி மனிதன் அந்த மலர்வளையத்துக்குள் வாழ்க்கை முடித்துக்கொள்ள பழக்கப்பட்டுப்போவான்.

        பின்னொரு  காலத்தில் தோண்டியக்கப்படும் ஊழல் நாகரிகத்தின்  எச்சங்கள். மறக்க பழக்கப்பட்டவர்கள்;நாம் புதுமை விரும்பிகள்;நமக்கு தேவை புதிய ஊழல்கள்.

Monday, April 25, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு: குற்றப்பத்திரிகையில் தகவல்: தயாளு பெயர் இல்லை

ஸ்பெக்ட்ரம் ஊழலில், முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருவரும் கூட்டுச்சதி செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் இடம் பெறவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவான சி.பி.ஐ., தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த 2ம் தேதி தாக்கல் செய்திருந்தது.அந்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் அமைச்சர் ராஜா உட்பட ஒன்பது பேர்களின் மீது, ஐந்து விதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக, இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 120 பி (கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல்) பிரிவின் கீழும், ஐபிசி 420 (ஏமாற்றுதல்) பிரிவின் கீழும், ஐபிசி 468 (போலி ஆவணங்களைத் தயாரித்தல்) பிரிவின் கீழும், ஐபிசி 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்) பிரிவின் கீழும் மற்றும் இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு ஆதரவாகச் செயல்படுதல்) பிரிவின் கீழும் அதிக அளவில் குற்றங்களை இந்த ஒன்பது பேரும் செய்துள்ளதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டியிருந்தது.இந்நிலையில், சி.பி.ஐ., தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை நேற்று பிற்பகல் 3 மணியளவில் தாக்கல் செய்தது. டில்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி ஓ.பி.சைனி முன் தாக்கல் செய்யப்பட்டது.


* அதில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழி மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தவிர, சுவான் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜிவ் அகர்வால், கரீம் மொரானி, அசீப் பல்வா ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே சிறையில் இருக்கும் ஷாகித் பல்வாவின் சகோதரர் தான் இந்த அசீப் பல்வா.
* ஸ்பெக்ட்ரம் உரிமத்தை சுவான் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக பிரதி பலனாக அளித்த லஞ்சப்பணம் 214 கோடி ரூபாய் பற்றியும்; அந்த பணம் எந்தெந்த வழிகளில் கலைஞர் "டிவி'க்கு வழங்கப்பட்டது என்பது பற்றியும்; இந்த பண பரிவர்த்தனைகளில் பங்கு பெற்ற நபர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
* அதன்படி, ராஜாவின் பெயரும் சேர்க்கப்பட்டு, லஞ்சம் வாங்கிய குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதேபோல கனிமொழி, கலைஞர் "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகிய இருவர் மீதும் கூட்டுச் சதியில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
* கலைஞர் "டிவி'க்கு பணம் வழங்கியதாக, டிபி ரியாலிட்டி குரூப்பைச் சேர்ந்த குசேகான் மற்றும் சினியுக் நிறுவனங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் அதிகாரிகளான கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால் ஆகியோரது பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
* இந்த ஐந்து பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 120 பி (ஐபிசி) பிரிவு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி ராஜாவின் மீது லஞ்சம் பெற்றதாகவும், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் மீது கிரிமினல் சதியில் ஈடுபட்டதாகவும், மொரானி, ராஜிவ் அகர்வால், அசீப் பல்வா ஆகியோர் மீது லஞ்சம் அளித்தனர் என குற்றச் செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.



தயாளு இல்லை: குற்றப்பத்திரிகையில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு இடம் பெறுவார் என்ற பரபரப்பு இருந்தது. கலைஞர் "டிவி'யில் அதிகபட்சமாக 60 சதவீத பங்குகளை தயாளு வைத்திருந்தார். எனவே, அவர் பெயர் இடம்பெறுமென செய்திகள் வெளியாயின. ஆனால், அவர் பெயர் இடம் பெறாமல் தவிர்க்கப்பட்டிருந்தது. இது குறித்து தெளிவான விவரங்கள் எதுவும் கூறப்படவில்லை. இதில் அரசு பாரபட்சம் காட்டுவதாக, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.


48 பக்கம்: இரண்டாவது குற்றப்பத்திரிகை 48 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. அதில் கனிமொழி பற்றி குறிப்பிடும் போது, ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரதான குற்றவாளியான ராஜாவுடன் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார் என்றும், கலைஞர் "டிவி' துவக்கப்படுவதற்கு தீவிர பங்காற்றினார் என்றும், தொலைத்தொடர்புத் துறையை ராஜாவுக்கு திரும்பவும் கிடைக்கச் செய்ததில் மிக முக்கிய பங்கு வகித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல பல்வா, கோயங்கா உள்ளிட்ட பலரும் எவ்வாறு கலைஞர் "டிவி'க்கு தங்களது நிறுவனங்கள் மூலமாக லஞ்சப் பணத்தை அளிப்பதற்காக பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டனர் என்றும் விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றப்பத்திரிகையின் முகப்பில், சப்ளிமென்டரி-1 என்று கூறப்பட்டிருப்பதால், அடுத்தடுத்து துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.


கனிமொழி மே 6ல் ஆஜர் : குற்றப்பத்திரிகையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து மாலையில் கூறுவதாக, 3.30 மணியளவில் நீதிபதி ஓ.பி.சைனி ஒத்தி வைத்துவிட்டு சென்றார். இதையடுத்து, மீண்டும் மாலை 5.45 மணியளவில், தனது தீர்ப்பை வழங்கிய நீதிபதி சைனி, கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார்.மேலும் அவரை, மே 6ம் தேதி, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராகும்படியும் தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதேபோல சரத்குமார், கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பும்படி கூறினார். ராஜிவ் அகர்வாலையும், அசீப் பல்வாவையும் நாளை (இன்று)ஆஜர்படுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவினரின் சொத்துப் பட்டியல்

அன்பு வணக்கம்.

அனைவரும் யாருக்கு ஓட்டுப் போடலாம் என்ற குழப்பத்தில் இருப்பீர்கள். யாருக்கு ஓட்டளிப்பு என்பதை முடிவெடுக்கும் உரிமை உங்களிடம் மட்டுமே இருக்கிறது. அதை எக்காரணம் கொண்டும் வேறொருவர் தீர்மானிக்க அனுமதிக்காதீர். கடந்த ஆண்டுகள் நம் தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவினர் சொத்து வளர்ச்சி பட்டியலை ஜூவி வெளியிட்டிருக்கிறது. சமீப காலமாக முதல்வர் தமிழகத்தில் ஏழை மக்களுக்காக உழைப்பேன் என்றுச் சொல்லி வருகிறார். அந்த ஏழைகள் யார் என்பது அவருக்குத் தான் தெரியும். ஒரு காலத்தில் ஏழைகளாய் இருந்த திமுகவினரின் சொத்துப் பட்டியலையும், உங்களின் வருமானத்தையும் ஒரு தடவை ஒப்பீடு செய்து கொள்ளுங்கள்.

நன்றி : ஜூவி

மேற்கண்ட அமைச்சர்களின் ஐந்தாண்டு வருமானத்தை பாருங்கள். கேன்.என். நேருவின் வருமானம் அபரிமிதமாக இருக்கிறது. எப்படி என்பதை மேற்கண்டவர்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் பாருங்கள் யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை.
வாழ்க ஜன நாயகம். வாழ்க இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள்.

இதற்குத்தானா ஆசைப்பட்டீர் சாதிக்பாட்சா?

அன்பு நண்பர்களே,

எலக்‌ஷன் கமிஷனின் உண்மையான அதிகாரத்தை நாம் இந்த தேர்தலில் கண்டுகளித்து வருகிறோம். ஆளும் திமுகவினருக்கு வயித்தால போகுதுன்னு சொல்லுகின்றார்கள். சீக்கிரம் ஹாஸ்பிட்டல் வாசம் தான் என்றும் சொல்கின்றார்கள்.
ஊழலை ஒழிக்க, அதிகாரம் கொண்ட ஜன லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டுமென்று திரு அன்னா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி இருக்கிறார். அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். முடிந்தால் பிரதமருக்கு ஒரு மெயிலைத் தட்டி விடவும்.
நேற்றைக்கு தொல் திருமாவளவனின் பேச்சைக் கேட்க முடிந்தது. அன்னை சோனியா காந்தி முன்பு அதைக் கொண்டு வந்தார் கலைஞர் அம்மா கொண்டுவந்தாரா என்றெல்லாம் கேள்விகளாய் குவித்தார். ஏன் அய்யா? உங்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா? நீங்கள் அம்மாவைப் பார்த்துக் கேட்ட கேள்விகளெல்லாம் சரிதான். ஆனால் அதற்கும் மேலே சில கேள்விகளை வாக்காளர்கள் கேட்கின்றார்களே அதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்? கேட்கின்றவன் எல்லாம் கேனப்பயல்கள் என்றா நினைத்திருக்கின்றீர்கள்? கபட வேடதாரிகளான திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களிடம் ஓட்டுக் கேட்க கொஞ்சம் கூட அருகதை அற்றவர்கள். சக தமிழனைக் கொன்று குவித்த இலங்கைக்கு ஆயுதம் கொடுத்த இந்திய அரசை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்க திராணியற்றவர்களான உங்களுக்கு, மற்றவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்க, எந்த வித தகுதியும் இல்லை.
சாதாரண மாநிலக் கட்சியான திமுக, தமிழ் நாட்டை மட்டுமே கொள்ளை அடித்துக் கொண்டிருந்தது. என்றைக்கு மத்திய அரசில் பதவிக்கு வந்தார்களோ அன்றைக்கு இந்தியாவையே கொள்ளை அடித்தார்கள். கேப்டன் அடிக்கடிச் சொல்லுவார், திமுகவின் கொள்கை “கொள்ளை” என்று. அது சரிதான் என்று 2ஜி சொல்லிக் கொண்டிருக்கிறது. அதை திமுகவால் மறுக்க முடியுமா? யார் யாரெல்லாம் தேர்தலுக்காக திமுகவுடன் இணைந்திருக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆதரிப்பவர்கள்தானே?
சரி இப்போது மேட்டருக்கு வரலாம்.
மக்கள் பணம் மகேசன் பணம் என்றுச் சொல்லுவார்கள். சிவன் சொத்து குல நாசம் என்றும் சொல்லுவார்கள். செய்த பாவம் தீர கோயில் கோயிலாய் ஏறிக் கொண்டிருக்கின்றார்கள் தலைவர்களின் மனைவிகள். அன்னதானம், இலவசம் என்று மனைவிகள் இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை இறைவன் இன்றைக்கும் காட்டிக் கொண்டுதான் இருக்கிறான்.
கோடி கோடியாய் சம்பாதிப்பது அமைதியாய், ஆனந்தமாய் வாழத்தான். எந்த ஒரு அரசியல்வாதியாவது தனியாய் சாலையில் செல்ல முடியுமா? வெட்டிப் போட்டு விடுவார்கள் அந்த அரசியல்வாதியால் பாதிக்கப்பட்டவர்கள். இதோ அஞ்சா நெஞ்சன் என்று சொல்லிக் கொள்ளும் அழகிரி அலறுகின்றார் என்று செய்திகள் வெளியாகின்றனவே? அன்புக்கு அடிமையாவதில் யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் அதிகாரத்திற்கு அடிமையாவது என்றால், எவன் பொறுத்துக் கொள்வான்? தந்தை முதல்வரானது மட்டுமே அழகிரி அமைச்சரானதிற்கு காரணம். மதுரை அரசு அலுவலர்களை எல்லாம் வேலைக்காரன் ரேஞ்சுக்கு மிரட்டிய அழகிரி “முன் ஜாமீன்” வாங்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டார். அதுமட்டுமா மதுரையில் மாநாடு நடத்திய அம்மா, என் ஆட்சியில் மதுரை அரை மணி நேரத்தில் அழகிரியிடமிருந்து மீட்கப்படும் என்று அரை கூவல் விடுத்தார். நிச்சயமாய் வயித்தால போகும் என்பது உண்மைதான் போலும். ஆடிய ஆட்டம் என்ன? பேசிய பேச்சு என்ன? கணக்குகளைப் போட ஆரம்பித்தால் விடை வந்துதானே ஆக வேண்டும். தப்புக் கணக்குகளின் வழியாய் சரியான விடை வந்து விட்டது என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இறைவன் போடும் கணக்கின் விடை மிகச் சரியானதாகத்தான் இருக்கும்.
செய்த பாவங்களின் பலன்கள் இனி ஒவ்வொன்றாய் வீட்டு வாசலின் முன்பு வரிசை கட்டும். அனுபவித்துதான் ஆக வேண்டும். தப்பிக்க முடியாது.
சேராத இடம் தன்னில் சேர வேண்டாம் என்பார்கள். இதோ அதற்கொரு உதாரணம் சாதிக் பாட்சா. அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? பணப்பிரச்சினையா? குடும்பப் பிரச்சினையா? எதுவும் இல்லை. மக்களின் பணத்திற்கு ஆசைப்பட்டவர்களுக்கு துணை போனார். செத்தார். இதற்குத் தானா சாதிக் பாட்சா சம்பாதித்தார்? சாக வேண்டுமென்பதற்காகவா சம்பாதிப்பார்கள்?
பாவத்தின் சம்பளம் மரணம், அது தீர்க்கவே முடியாத ஒரு கணக்கு.

செய்த பாவங்களின் பலன்கள் இனி ஒவ்வொன்றாய் வீட்டு வாசலின் முன்பு வரிசை கட்டும். அனுபவித்துதான் ஆக வேண்டும். தப்பிக்க முடியாது………
பாவத்தின் சம்பளம் மரணம், அது தீர்க்கவே முடியாத ஒரு கணக்கு…..
அரசியல்வாதிகள் இதை கொச்சமாவது நினைத்து பார்க்கவேண்டும் ?
வேதனையுடன்


நண்பர்களே, அன்னா ஹசாரே அவர்களை ஆதரிக்க http://www.indiaagainstcorruption.org (official website) என்ற வலைதளத்திற்கு சென்று ஆதரவை பதிவு செய்யுங்கள்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...