Tuesday, April 26, 2011

கனிமொழி: குளிர் காயும் போது.

(பாட்டு)
நீ முன்னாலே போனா...
நான் பின்னாலே வாரேன்...
நிருபர்:கலைஞர்  டி.வி எப்படி வந்தது?
கனிமொழி:நான் மேடையில் கவிபாடும் கோடியில் ஓருவள் .நான் டி.வியில் கவி பாடுவது மட்டுமே என் வேலை.ஒரு வேளை டி.விக்கு முன் கலைஞர் என்ற வார்த்தையை சேர்த்திருக்கலாம்.
நிருபர்:உங்கள் மூவரின் தொடர்ப்பு என்ன? அதாவது கருணாநிதி,ராசாத்தி,நீங்கள் .
கனிமொழி:அப்பா சொன்னதையே நானும் திரும்ப திரும்ப அடித்து சொல்வேன்.அப்பாவுக்கு நான் மகள்;ராசாத்தி என் அம்மா.
நிருபர்:உங்கள் உறவு  அல்ல. பண தொடர்பான விஷயங்களை சொல்லுங்கள்.
கனிமொழி:எனக்கு அது பற்றி கேட்டால் பற்றிக்கொண்டு வரும். எனக்கு யாரொடும் பண தொடர்பு கிடையாது.எனக்கு  தெரிந்தெல்லாம் ராசாவுடனான மன தொடர்பு தான்.
நிருபர்: இருந்தாலும்,உங்கள் பெயர் அடிபடுகிறதே! எப்படி?கனிமொழி நேற்று ' கனி'மொழி;இன்று 'money 'மொழி;நாளை 'களி' மொழி. இதில் எது அடிபட்டது?
நிருபர்: money  எனக்கு கனி ராசாவுக்கு என தந்தை கூறியதாக ஊரே சிரிக்கிறதே! அப்படியானால்,ஊழலில் உங்களின் பங்கு என்ன?கனிமொழிஇதில் எதுவும் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால்.இவை இரண்டும் உண்மைக்கு புறம்பானவை அல்ல.
நிருபர்:சரி.அப்படியானால் உங்களுக்கு லட்ச கணக்கான பணம் எங்கிருந்து வந்தது.கனிமொழி:
கவிபாடுவேன் இனி
பணத்தால் கொழுத்த கனி
பணங்காட்டு நரி தான்
மக்கள் முகத்தில் கரி தான்
லட்சம் ஒரு லட்சியம் அல்ல;
கோடியென்றே உரைத்திடுவேன்
காட்டி விட மாட்டேன்
வேட்டியை விட மாட்டேன்.

நிருபர்:நேரிடையாக பதில் சொல்லுங்கள் கனி; பொறுமை இல்லை இனி. நாட்டின் பெரும் ஊழல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கனிமொழி: (ஆகா...ஆகா) "ஊழல்'  என்பதே நாங்கள் கண்டுபிடித்தது தானே!
நிருபர்:இதே சிரிப்பை... நீராடியாவுடன் பேசும் போது சிரித்தது ஞாபகம் வருகிறதா?கனிமொழி: ராசாவுடன் பேசும்போதா சிரித்தேன்? ஒரு பொம்பளை இன்னொரு பொம்பளையுடம் பேசி சிரித்தால் உங்களுக்கு என்ன?
நிருபர்:மாறி... மாறி பேசுவது உங்களுக்கு சிக்கலை தரும்.ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்கனிமொழி: ஐ.நா சபையில் உரைமாற்றி படித்த கிருஷணாவை தூக்கிலா போட்டார்கள்? இல்லை, மாறி மாறி பேசும் மன்மோகன் சிங்கை வீட்டிற்கா அனுப்பினார்கள் ? சிக்கலும், விக்கலும்  உங்களுக்கு தான் எங்களுக்கு மக்கள் தான் எல்லாமே!
நிருபர்:உங்கள் தந்தை ஊழலுக்கு எதிராக நெருப்பாக இருக்கும் போது நீங்கள்  சிக்கிக்கொணடது எப்படி?கனிமொழி: குளிர் காயும் போது.
நிருபர்:உங்களை சுற்றி சூழ்ச்சி வலை பின்னியிருப்பது போன்று தெரிகிறதா?கனிமொழி: அதெல்லாம், தெரியவேண்டியதில்லை.மக்களுக்கு என்னவெல்லாம் தெரியாமலிருக்க வேண்டும் என தெரிந்து கொண்டிருந்தால் போதும்.
நிருபர்:கடைசியாக ஒரு கேள்வி.உங்கள் மன நிலை எப்படி உள்ளது?
கனிமொழி:மன நிலை பண நிலை எல்லாம் நல்லாத்தான் இருக்கு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...