Wednesday, April 27, 2011

தப்பிய மனைவி...சிக்கிய மகள்.?-

கருணாநிதி நிருபர்களை சந்தித்த போது ,குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகவில்லை.தயாளு கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டால் ,காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறுமா..? என ஒரு பெண் நிருபர் கேட்டதுதான் தாமதம்..கருணாநிதி கொந்தளித்தார்.சில பெண்கள் இதயம் இல்லாமல் இருக்கிறார்கள்..நீயுமாம்மா..?என்றாராம்.ஆனால் அவருடைய பேட்டி டெக்ஸ்ட் அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டபோது ,பெண்ணாக இருந்துகொண்டு,இது மாதிரி பேசக்கூடாது.பெண் நிருபர்  இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டு பேசக்கூடாது’என கனிவாக மாற்றப்பட்டுவிட்டது.

(இதயம் இல்லாத பெண் என கலைஞர் யாரை சொல்கிறார்..ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது நடேசன் எதையாவது செய்து எம்மக்களை காப்பாற்றுங்கள் என கனிமொழியிடம் மன்றாடியபோது,சுரத்தே இல்லாமல் ஆயுதங்களை நீங்கள் கீழே போடுங்கள்..அவர்கள் தாக்குவதை நிறுத்திவிடுவார்கள் என கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டிருந்தாராமே..அந்த கனிமொழியையா கலைஞர் இதயம் இல்லாத பெண் என்கிறார்..? )


தயாளு அம்மாள் விடுபட்டது எப்படி..?

அவரை பொறுத்தவரை சிபிஐ அதிகாரிகளிடம் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கிறதாம்...எனக்கு எதுவும் தெரியாது...சரத்குமார் சொன்ன இடத்துல கையெழுத்து போட்டேன்...நீங்க சொல்ர போர்டு மீட்டிங்க்ல இதுவரை கலந்துகிட்டதே கிடையாது ...என் சொன்னதை சிபிஐ அதிகாரிகள் நம்பி,வயதை அனுசரித்தும், பெயரை நீக்கினார்களாம்..

கனிமொழி மீது குற்றசாட்டு என்னாகும்..?

குற்ற உடந்தை என்ற கடுமையான வார்த்தையை கனிமொழி மீது சி.பி.ஐ பயன்படுத்தி உள்ளது..சிக்கலில் இருந்து அவர் விடுபடுவதற்கு ,ஆ.ராசாவை போலவே பல மாதங்கள் ஆகலாம்...கருணாநிதிக்கு வைக்கப்படும் ஆசிட் டெஸ்ட் இது.என்று டெல்லி மீடியா வட்டாரம் பரபரக்கிறது ஆனாலும் 2ஜி குற்றப்பத்திரிக்கை விவகாரத்தை எதிர்கொள்ள தி.மு.கவும் தயாராகி வருகிறது .இன்று உயர் மட்ட செயல்திட்டக்குழு  கூட்டத்தை அவசரமாக கூட்டியிருக்கிறது..தி.மு.க காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் முரண்பட்ட தி.மு.க கடந்த மார்ச் 4 ஆம்தேதி காங்கிரசுக்கு செக் வைத்து பின்வாங்கியது...ஒன்றரை மாத இடைவெளியில் மீண்டும் இப்படி ஒரு கூட்டத்தை கூட்டியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது....

எதுவானாலும் தேர்தல் முடிவுகள் வந்தபிறகு பார்த்துக்கலாம் என ஸ்டாலின் சொல்கிறாராம்

 --------------------------------------------------------------------------------------------------

சூழ்நிலைகள் இப்படி இருந்தாலும், காங்கிரசை பகைத்துக் கொள்ளும் எந்த முடிவை எடுத்தாலும், அது ஜெயலலிதாவுக்கு சாதகமாகி விடும் என்ற நிலையையும், தி.மு.க., ஆலோசித்து வருகிறது."தமிழக சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் எனத் தெரியாத நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை, உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் எடுத்தால், அது, நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்' என, தி.மு.க.,வின் தலைமை கருதுகிறது.
"காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை எடுத்து, காங்கிரஸ் தங்களை பழிவாங்கி விட்டது; துரோகம் இழைத்து விட்டது என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும், அது, அரசியல் ரீதியாக பயன்படுமே தவிர, ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தப்பிக்க எந்த வகையிலும் உதவாது. காங்கிரஸ் உதவி இல்லாமல் இந்த வழக்கை சந்திப்பது சிரமம்' என்றும் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் கூறுகின்றனர்.சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வுக்கு பாதகமாக அமைந்து, மத்திய அரசிலிருந்தும் வெளியேறி, மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே நேரத்தில், அதிகாரத்தில் இல்லாமல் இருப்பது எந்த விதத்திலும் கட்சிக்கு உகந்தது அல்ல என்ற கருத்தும், தி.மு.க., மேலிடத்திற்கு நன்கு தெரிந்துள்ளது.எனவே, "வழக்கை சட்டப்படி சந்திப்போம். குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி, உண்மைகளை வெளியில் கொண்டு வருவோம். நீதி வெல்லும், தர்மம் வெல்லும்' என்பது போன்ற தீர்மானங்களுடன் உயர்நிலை செயல் திட்டக் குழு முடிவுகளை எடுக்கும் என, தி.மு.க., மேல்மட்ட தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
குமுறல்...!;முதல்வரின் மனைவி, மகளுக்கு நெருக்கடி வந்ததால் மட்டும் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் உடனே கூட்டப்படுகிறது. இதே வழக்கில், மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட போது, கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட இந்த அமைப்பை கூட்டவில்லை. இதுவரை, ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை என, தி.மு.க.,வின் ஒரு சாரார் பயங்கர குமுறலில் உள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...