தோல்வி பயம்: வேலூரில் கண்கலங்கிய கருணாநிதி
சற்று முன் நடந்த வேலூர் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி சற்றே கண்கலங்கி விட்டார். தொடர்ந்து பேசமுடியாமல் பாதியிலேயே பேச்சை முடித்துக்கொண்டார்.
நான் முதலமைச்சர் தானா? தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை தம்பிமார்கள் எவ்வளவு காலம் பொருத்துக்கொள்வார்கள்? கேரளாவில் மகாபலி மன்னன் போல என்னை துரத்த பார்க்கிறார்கள், பூணூல் கும்பல் என்து ஆட்சியை அகற்ற துடிக்கிறது. இப்படி எல்லாம் பேசிக்கொண்டு போன கருணாநிதி இறுதியில் எங்களை தோல்வியடைய செய்தாலும் உங்களை மறக்க மாட்டேன் என்று உருக தொடர்ங்கினார். பேச்சு குழைய சற்று கண்கலங்கி விட்டார். அப்படியே அமைதியாக பேச்சையும் முடித்துக்கொண்டார்.
வழக்கமாக 10 மணிக்கு மேலும் பேச்சை தொடரும் கருணாநிதி சேலம் கூட்டத்தில் 10 நிமிடம் முன்பே பேச்சை முடித்தார். இன்றைய வேலூர் கூட்டத்தில் 45 நிமிடம் முன்னரே பேச்சை முடித்துக்கொண்டார்.
வெளியான நான்கு கருத்துக்கணிப்புக்கே இப்படி தோல்வி பயம் தொற்றிக்கொண்டதே. இன்று வெளியாகும் அடுக்கடுக்கான கருத்துக்கணிப்புகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? அதை எல்லாம் விட மே 13 தோல்வியை எப்படி தாக்கிக்கொள்வார் தாத்தா?
காங்கிரசு 0 : தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 40 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அவ்வப்போது நடக்கும் அரசியல் மாற்றத்திற்கு ஏற்ப அரசியல் கட்சிகள் கருத்துகணித்து கோருகின்றன.
இதற்காக மக்கள் மனநிலையை புள்ளியல் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக கணிக்கும் கருத்துக்கணிப்பு முறை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகமும் முழுவதும் பலதரப்பட்ட மக்களிடம் இருந்து 1% கருத்து கேட்கப்படுகிறது. அதை புள்ளியல் வல்லுனர்கள் கணித்து இறுதி முடிவை எடுக்கின்றனர்.
அதன் அடிப்படையில் காங்கிரசு தனித்து போட்டியிட்டால் நிலவும் வெற்றி வாய்ப்பை அனைத்து கட்சிகளும் கணித்து வருகின்றன.
பத்திரிக்கையாளர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு ( உளவுத்துறையின் உதவியுடன் இந்த கருத்துகணிப்பு எடுக்கப்படுகிறது)
அதிமுக ..........121
திமுக ...............43
தேமுதிக........ 26
கம்யூனி .........15
மதிமுக ..........10
பாமக.............. 8
கொமுக ........2
வி.சி ...............2
மமக ..............1
இதரம் ..........6
காங்கிரசு ....0
காங்கிரசு திமுகவுடன் கூட்டணி சேரும்நிலையில் திமுகவுக்கு கூடுதல் தொகுதிகள் வெற்றிவாய்ப்பு உள்ளது. அதே போல காங்கிரசும் 7 தொகுதிகள் வரை வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. சமக திமுகவுடன் கூட்டணி சேரும் பட்சத்தில் 2 தொகுதிகளிலும், அதிமுகவுடன் 1 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது.
இன்றைய நிலையில் மக்கள் மனநிலை குறித்த கருத்துக்கணிப்பு வலதுபுறத்தில் உள்ளது.
இன்றைய நிலையில் மக்கள் மனநிலை குறித்த கருத்துக்கணிப்பு வலதுபுறத்தில் உள்ளது.
No comments:
Post a Comment