Tuesday, April 26, 2011

நையாண்டி மேளம்

ராஜாமீது  லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டும்,கனிமொழி மற்றும் சரத்குமார் மீது கூட்டு சதியில் பங்கேற்றதாகவும் 48 பக்ககுற்றப்பத்திரிக்கையில் (+48) குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி ராஜாவுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார் என குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

           இதை விசாரணைக்காவா? சிபி ஐ வேண்டும். இந்தியாவில் இந்த இருவரின் நாகரீக தொடர்பு அனைவருக்கும் நாடறிந்த பழக்கம்!வழுக்கு!! இவர்கள் தொடப்பில்லாத காலம் என்பது தொலைதொடர்பு துறைக்கு இன்னொரு புழக்கம்!இழுக்கு!!

          கருணாநிதி குடும்ப பெயர் வரும் என பத்திரிக்கைகள்  என கட்டியம் கூறி வந்தன.இது எப்படி சாத்தியமாகின்றன? எட்ட நின்று வேடிக்கைப்பார்க்கும் பத்திரிக்கைகளுக்கு கனிமொழியின் பெயர் வரும் என தெரிந்து இருக்கும் போது கனிமொழி என்ற பெயரை சூட்டிய  அப்பாவுக்கும்,ஸ்பெக்ட்ரம் என்றால் என்னவென்று தெரியாத விரல் சூப்பும் கடைக்குட்டி பாப்பாவுக்கும் தெரியாமலா? இருந்திருக்கும்.

              தான்  MANY  மற்றும் MINI எமெர்ஜன்சியை சந்திந்ததாக கூறிக்கொள்ளும் முதல்வர் MONEY  எமர்ஜென்சில் 200 கோடி வாங்கிய  பாசத்தில் முதல் ஆளாய், ஆணவம் வேண்டாம், காலம் கனியும் என முதிர்ந்த வார்த்தைகளை உதிர்ந்துள்ளார்.  அரசியல் சாணக்கியத்தில் கருணாநிதியை வெல்ல முடியாத காலம் இருந்தது என்பதை யாராலும் மறக்க முடியாது.


          ஆனால், சதுரங்க கட்டைகள் அனைத்தும் கனிமொழியை  நோக்கி திரும்பி விழும் போது தோல்வியை தவிர்க்க முனைவது தான் புத்திசாலி ஆட்டம். அதில் ராசாவை இழந்தாயிற்று. இனி அரசியல் சதுரங்கத்தில் ராணியை காப்பாற்ற காய்களை அங்குங்கும் நகர்த்த வேண்டியது தான்.

         அதற்காக நாளை திமுக வின் உயர்நிலைக்குழு கூடி விவாதிக்கிறது. அக்கூட்டத்தில் முடிவில் ஆரிய - திராவிட விளையாட்டில் கனிமொழியின் பெயரை  சேர்த்தற்காக கடும் கண்டனமும், தயாளு அம்மாளை கடைசி நேரத்தில் பதிலி வீரராககூட  இல்லாமல் பார்த்துக்கொணடதற்காக நன்றிகள்  என தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம். அமைச்சர்கள் வாபஸ் என்ற பழைய ஆட்டத்தை  இனி அரங்கேற்ற செய்ய நினைத்தால் அதை ரசிக்கப் போவது வீரமணி உள்ளிட்ட  விளையாட்டுப்பிரியர்கள்  தான்.

       இந்தியஅரசியலில் எந்த விளையாட்டும் முடிவுக்கு வந்ததில்லை.சிந்துவெளி நாகரீகம் எனபது நவீன காலத்தில் வெளிவரும் கடந்த கால ஆச்சரியம்; அது எப்போது தொடங்கியது;எப்படி அழிந்தது என்பதான் உண்மைகள் நம்மை ஆச்சரியத்தில் மலைக்க வைக்கின்றன. 

           அது போலத்தான் ஊழலின் உண்மைகள் தெரியவரும் போது தண்டனைப்பெறப்போகிறவர்கள்  வாழ்ந்து முடித்து இருப்பார்கள்;அவர்களின் சந்ததிகள் சத்தம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். ஊழல் நிருபீக்கப்பட்டால் பல வருடங்களுக்கு பின் நீதி வென்றது! என்ற வழக்கமான வாக்கியத்தோடு ஊழல் புதைக்கப்படும்.

              அப்போது புதியாய் ஊழல் செய்வோர்! அதற்கு மலர்வளையம் வைத்து வணங்குவர்;எப்பொதும் போல் சராசரி மனிதன் அந்த மலர்வளையத்துக்குள் வாழ்க்கை முடித்துக்கொள்ள பழக்கப்பட்டுப்போவான்.

        பின்னொரு  காலத்தில் தோண்டியக்கப்படும் ஊழல் நாகரிகத்தின்  எச்சங்கள். மறக்க பழக்கப்பட்டவர்கள்;நாம் புதுமை விரும்பிகள்;நமக்கு தேவை புதிய ஊழல்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...