Tuesday, April 26, 2011

பயந்து போய் அஞ்சா நெஞ்சனுக்கு ஆதரவு

அலறும் அஞ்சா நெஞ்சன் அழகிரி;கதறும் நோஞ்சான் அதிகாரி

காசு தான் கொடுக்க முடியல...போஸ் ஆவது கொடுக்கிறேன்...
                    என்னை சுதந்திரமாக தேர்தல் பணிகளை செய்ய விடாமல் கலெக்டர் சகாயம்  தடுக்கிறார்.மத்திய மந்திரி அழகிரி மீதும். திமுக மீதும் பொய் வழக்கு போட முயற்சிக்கிறார் என்று கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரியான மதுரை ஆர்.டி.ஓ சுகுமாறன் சொன்னதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

                      இதை ஒரு அரசியல்வாதி கூறி இருந்தால் அதைப்பற்றி யாரும் கவலப்படத்தேவையில்லை.ஆனால், ஆர்.டி.ஓ தனது  மேல் அதிகாரியின் மீது குற்றம் சாட்டுகிறார்.அப்படி ஒரு மேல் அதிகாரியின் மீது அரசியல் வாதி குற்றம் சாட்டி விட்டு சும்மா... வீட்டில் இருக்க முடியாது. காரணம், அரசூழியர்களுக்கான நடத்தை விதிகள்.அதனால்,பயந்து போய் அஞ்சா நெஞ்சனுக்கு  ஆதரவு கொடுத்த அதிகாரி நெஞ்சு வலியில் ஆஸ்பித்திரியில் அட்மிட் ஆகிவிட்டார்,வேறு வழி?

                     ஒரு மேல் அதிகாரி கிள்ளினார் என வெறுமெனே சொல்லி விட முடியாது.அதை தக்க ஆதாரத்தோடு குற்றம் சாட்டப்பட்டும் கீழ் நிலை ஊழியர் தான் நிருபிக்க வேண்டும்.இந்த விஷயத்தில் ஆர்.டி.ஓ எந்த ஆதாயதோடு இதை கூறியிருப்பார் என்று விரல் சூப்பும் குழந்தை கூட சொல்லி விடும்.அப்படி அரசியலும் அதிகாரிகளுக்கும் இடையேயான உறவு.ஆனால்,இது தேர்தல் சமயத்தில் கூட நட்பு தான்.

                  இதனால், மதுரை கலெக்டர் கலங்குவார் என நினைத்தால் மேலும் கலக்குகிறார். தனக்கு ஆதரவாக செயல்பட்ட, செயல்படும் அதிகாரிகளுக்கு ஆப்பு வைக்கும் கமிஷன்;வாக்காளர்களுக்கு போய் சேராத கமிஷன் என ஏக கடுப்புகளுக்கு உள்ளாகி உள்ளார்.

                 இப்போது பணம் இருக்கிறது;போலீஸுக்கு மனம் இல்லை.அழகிரியின் வலது கரத்தின் காரில்  சோதனை; என்னடா... இது மதுரைக்கு வந்த சோதனை? உடன்பிறப்புகளை திருவிளையாடல் வசனம் பேசவைத்து விட்டது தேர்தல் கமிஷனின் திருவிளையாடல்கள்.

                திருவிளையாடல் படத்தில் சிவன் மேல் அடித்த அடி மன்னன் மேல் விழும். அது போல் அழகிரியின் மேல் அடித்த அடி கலைஞருக்கு வலிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க போகிறது.அதனால் இது அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி என சொன்னார்;எமர்ஜென்சி விளக்கு வெளிச்சத்தில் பணம் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லி இருப்பாரோ!
                             இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அழகிரியின் அரசியல் எதிரிகளுக்கு அழகிரி, திருமங்கல பார்முலாவிற்கு மங்களம் பாடிய தேர்தல் கமிஷனின் நடவடிக்கையால்,  சிக்கிக்கொண்டு சீக்கி அடிப்பது சந்தோசம் தான் என்றாலும் அவர்களுக்கும் உள்ளூர பயம் தான்,எங்கே? அதிமுக கூட்டணி ஆட்கள் சிக்கி விடுவார்களோ? என்று. என்ன செய்வது,தமிழக அரசியலில் எல்லொரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.தூக்கம் போய் துக்கம் வந்து விட்டது.
                     அரசியல்வாதிகள் ஓட்டை எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள்.மக்கள் பணத்தை எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள்.
                      ஏமாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...