ஜூனியர் விகடன் துல்லியமான 234 தொகுதிகள் நச் நிலவரம் என்ற தலைப்பில் ஞாயிற்றுகிழமை வெளியிட்ட்து...சனிக்கிழமையே நான் என் உறவினர் வீட்டு விருந்துக்கு போயிட்டேன்..அதனால ஜூனியர் விகடனை ஞாயிற்றுகிழமை படிக்க முடியாம அதை என் பிளாக்ல வெளியிட முடியாம கைகால் எல்லாம் நடுக்கம் எடுத்துருச்சி...ரெண்டு நாளா ஒரே மனக்கவலை..ஆஹா தி.மு.க வின் இணையப்புலி கொள்கை பரப்பு செயலாளர்களை வயிறு எரிய வைக்க ஒரு அருமையான மேட்டரை மிஸ் பண்ணிட்டோமேன்னு நினைச்சேன்....
சரி இன்னிக்கு வந்ததுக்கப்புறம் நானே எழுதலாம்னு நினைச்சு எழுதறேன்..ஏற்கனவே யாராவது வெளியிட்டிருந்தாலும் சந்தோசம்..
ஜூனியர் விகடனில் நான் படித்த ரிசல்ட் சுருக்கம்’;
சட்டமன்ற தேர்தலில் .
#தி.மு.க கூட்டணிக்கு 90 இடங்களே கிடைக்கும்..
#அ.தி.மு.க கூட்டணிக்கு 140 இடங்கள் வரை கிடைத்து ஆட்சியை பிடிக்குமாம்.
#சரத்குமார் தென்காசி தொகுதியில் வெற்றி பெறுவது கடினம்
#தே.மு.திக கட்சி 17 இடங்களை வெல்லும்
#கொங்கு முண்ணனி ஒரு இடம் மட்டுமே வெல்லும்
#மதுரை,சென்னையில் அதிக தொகுதிகளை அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் வெல்லும்
#ஈரோடு கிழக்கு முத்துசாமி வெற்றி
#பொன்முடி விழுப்புரத்தில் தோல்வி
#ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
#கலைஞர் தோல்வியடைய முக்கிய காரணம் ஸ்பெக்ட்ரம் ஊழல்,படித்தவர்கள் மத்தியில் கலைஞரின் குடும்ப ஆதிக்கம் மீதான வெறுப்பு.விலைவாசி உயர்வு.
#விஜயகாந்த் பற்றி வடிவேலு விமர்சனங்கள் சிறு சலசலப்பை ஏற்படுத்தலாமே தவிர ஓட்டை மாற்றிப்போட வைக்க முடியாது என மறைமுகமாக சொல்லியிருக்கிறது...
#விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.
#காங்கிரஸ் 15 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு.
இன்னும் நிறைய தேர்தல் கணிப்புகள் ஸ்வாரஸ்யமாக இருக்கின்றன...நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்....
No comments:
Post a Comment