டிஸ்கி: இந்த பதிவின் இறுதியில் விடை தெரியாத பத்து கேள்விகள் உள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அளித்த முதல் குற்றப்பத்திரிக்கையில் ஆ. ராசா குற்றவாளியாக சேர்க்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் குற்றப்பத்திரிக்கையிலேயே
கலைஞர் மகள் கனிமொழியும், மனைவி தயாளு வும் இந்த ஊழல் வழக்கில் குற்றவாளிகளாக சேர்கப்படுவர்களா என எதிர்பார்த்த நிலையில், இன்று இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் ஊழல் செய்ய உதவியவர்கள் யார் யார், பணம் எப்படி கைமாறியது? ஊழல் செய்த பணம் யாரிடம் உள்ளது? எங்கே முதலீடு செய்யப்பட்டு உள்ளது? என்ற விவரங்கள் அடங்கிய தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது.
இதனால் இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் கதிகலங்கி உள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகையில் சுவான் நிறுவனமும், கலைஞர் டிவி யும் சுமார் 214 கோடி ருபாய் வரை பண பரிமாற்றம் செய்திருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் சுவான் நிறுவனம் கடனாக வாங்கியதாகவும், அந்த கடனை திருப்பி செலுத்தியதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் கலைஞர் டி.வி. அந்த பணத்திற்கு பொய்யான கடன் ஆவணங்களை தயார் செய்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த விஷயங்கள் தொடர்பான ஆவணங்கள் சி.பி.ஐ. வசம் இருப்பதாக தெரிவிக்கின்றன.
இத்தகைய ஊழல் பணம் கலைஞர் டி. வி. யில் விளையாடி இருப்பதால் கனி மொழிக்கும் பங்கு இருப்பதாக சந்தேகித்து அவரையும் குற்றவாளி லிஸ்ட்டில் சேர்க்கப்படும் என தெரிகிறது.
இதனால் எழும் கேள்விகள்:
- கனிமொழி குற்றவாளியானால் கலைஞர் என்ன முடிவு எடுப்பார்?
- இதனால் கலைஞர் டி,வி. ஒளிபரப்பு தடை செய்யப்படுமா?
- காங்கிரஸ் உடனான கூட்டணி முறியுமா?
- கனிமொழி மீதான புகாரை மறைக்க கலைஞர் என்னென்ன கட்டுக் கதைகள் சொல்வார்?
- தி.மு.க. வை நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றப் பட்டார்களா?
- தி.மு.க.வின் வருங்காலம் எப்படி இருக்கும்?
- கலைஞர் டி.வி.யில் மானாட....மயிலாட... பாக்க முடியுமா?
- இதனால் ஜே.க்கு கிடைக்கும் ஆதாயம் என்ன?
- இச்செய்தி செய்தி கேட்டு கேப்டன் எத்தனை ஆஃப் அடிப்பார்?
- சப்போஸ், அடுத்து தி.மு.க. தமிழக ஆட்சியை பிடித்தால்?
மக்களே! இந்தக் கேள்விகளுக்கு விடை என்ன?
No comments:
Post a Comment