Tuesday, April 26, 2011

சாய் பாபாவும் நாற்பது திருடர்களும்

ஸ்டாலின் நேரில் அஞ்சலி: சாய் பாபாவும் நாற்பது திருடர்களும்


             சாமியார் என்றாலே சர்சைகளுக்கு அளவு இருக்காது. ஆனால்,இவரால் சில சர்ச்சைகள் வந்தாலும் சாய்பாபா மீது பக்தர்கள் கொண்ட நம்பிக்கை கொஞ்ச நஞ்சமல்ல.
                    சாய்பாபா சர்ச்சைக்குரிய மனிதரா? அவரை சுற்றி நடைபெற்ற அல்லது நடைபெறுகிற விஷயங்கள் சர்ச்சைக்குரியவையா? "எல்லாவித புகார்" களும்  ஆசிரமத்துக்குள்ளே ஜீவ சமாதி அடையும் நிலையில்
 பாபாவே' ஜீவ சமாதி' ஆகப்போகிறார் என்ற புரளியை விபூதிகளில் பரப்பி விட்டு பக்தர்களின் நெற்றியில் பட்டை நாமம் போட முயன்றது ஏன் என்று தெரியவில்லை.

                     இன்றைய காலகட்டத்தில் ஆன்மீகம் சட்டத்திற்கு உட்பட்டது, ஜீவ சமாதி ஏறக்குறைய தற்கொலைக்கு சமம்.அப்படியென்றால்,அதை தூண்டியவர்களின் மீது வழக்கு வருமே! அதனால்,பகவானின் அசைவற்ற உடலுக்கு காவலாக மட்டும் இருக்க கற்றுக்கொண்டார்கள்.

                 சாய் பாபா ஒரு முறை , நான் 96 வயதில்தான் இந்த அவதாரத்தை முடித்து கொள்வேன் என்று சொன்னார்.கடவுள் அவதார எடுத்தவருக்கே 86 வயதில் ஆயுள் முடியும் போது பக்தர்கள் தங்களது ஆயுளை நீடிக்க சாமியார்களை நாடிப்போவது தான் ஆச்சரியமாய் இருக்கிறது! அடக்கடவுளே !!

                    50க்கும்  மேற்பட்ட கிராமங்களுக்கு மருத்துவம், கலவி, போக்குவரத்து, குடிநீர் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்த 'சாய்பாபா' தான் உயிருடன் இருக்கும் விஷயத்தை சொல்ல எந்த ஏற்பாடும் செய்யாதது ஏமாற்றம் அளித்ததாய் இருந்தது பக்தர்களுக்கு.

                  சாய்பாபா இருக்கிறாரா... இல்லையா? என கேள்வி கேட்டு கோர்ட் படியெறியப்பின் தான் இறந்ததாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர் இறந்தது எப்போது என  அவரை கவனித்த 40 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு மட்டுமே  தெரியும். அவர்கள் அதை மறைத்திருந்தால் அவர்களும் திருடர்கள் தான்.

               பாபாவின் சொத்துக்களை ஆந்திரா அரசு கையங்கப்படுத்தும் முயற்சியில் கையை சுட்டு கொள்ளுமா? அல்லது சுருட்டிக்கொள்ளுமா? என்ற விவாதம் இன்னும் முடியவில்லை. ஆனால், இனி இந்த விஷயம் சூடுபிடிக்க ஆரம்பித்து விடும்.

                       இதுவரை சேவை மையமாக மட்டும் பகவான் நடத்தி வந்த இலவச சேவைகள்  முடங்கி போகலாம். அரசின் முத்திரைகளாகிய லஞ்சம் மட்டுமே இனி ஆசி வழங்கும்.

                    ஆசிரம் என்ற் குகைக்குள் இனி அரசியல்வாதிகள் புகுந்தால் பொக்கிஷங்கள் இனி புதைக்கப்படலாம் அல்லது புதைக்கப்பட்டவை எழுந்து வரலாம்;அது அரசியல்வாதிகளின் லாபத்தை பொறுத்தது.

                    நாத்திகம் பேசும் எல்லா அரசியல் தலைவர்களும் சாய்பாபாவின் ஆசி பெற ஆசையாய் போனதுண்டு; தயாநிதி மாறனும், துரை முருகனும் மோதிரம் பெற்ற கதையும் உண்டு.தமிழக அரசு பாராட்டு விழாக்கூட கருணாநிதி தலைமையில் நடத்தியது.அதன் நினைவாக ஸ்டாலின் அஞ்சலி செலுத்த புட்டபர்திக்கு செல்வது ஒன்றும் ஆச்சரியம் அளிக்கப்போவதில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...